சாய்பாபாவை கொல்ல முயற்சி: ஆசிரமத்துக்குள் புகுந்த 4 பேர் சுட்டுக்கொலை


சாய்பாபாவை கொல்ல முயற்சி: ஆசிரமத்துக்குள் புகுந்த 4 பேர் சுட்டுக்கொலை

புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவை கொல்ல முயற்சி நடந்தது. ஆசிரமத்துக்குள் கத்தியுடன் நுழைந்த 4 கொலை யாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்து மத கொள்கைகளையும், தத்துவங்களையும் போதித்து வருபவர் சத்யசாய் பாபா. இவருக்கு இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.

இந்து மத கொள்கைகளை பரப்பும் “சத்யசாய் இயக்கம்” என்ற அமைப்பின் தலைவராகவும் சத்யசாய்பாபா இருந்து வருகிறார்.

புட்டபர்த்தி ஆசிரமம்.ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் புட்டபர்த்தி என்ற இடத்தில் சாய்பாபாவின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசி ரமத்துக்கு “பிரசாந்தி நிலையம்” என்று பெயர். இங்குதான் சாய்பாபா தங்கி இருக்கிறார்.

பிரமாண்டமான இந்த ஆசிரம வளாகத்தில் சாய்பாபா பெயரில் ஒரு கல்லூரியும், மருத்துவமனையும் உள்ளன. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் புட்டபர்த்தி ஆசிரமத்திற்கு சென்று சாய்பாபாவிடம் ஆசி பெற்று செல்கிறார்கள்.

ரகசியமாக நுழைந்த 4 பேர்

சாய்பாபா தங்கி இருக்கும் ஆசிரம பகுதிக்குள் 6_6_1993 அன்று இரவு 10_30 மணி அளவில் 4 பேர் சென்றனர். அந்த நேரத்தில் சாய்பாபா தூங்கிக்கொண்டிருந்தார். உதவியாளர்களும், பாதுகாவலர்களும் வேறு ஒரு அறையில் விழித்துக்கொண்டு இருந்தனர்.

சாய்பாபாவின் அறைக்குள் நுழைய முயன்ற அந்த 4 பேரையும் அங்கு நின்று கொண்டு இருந்த சாய்பாபாவின் உதவியாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அதற்கு அவர்கள், ஒரு முக்கியமான “தந்தி” வந்து இருக்கிறது. அதை சாய்பாபாவிடம் கொடுக்கவேண்டும்” என்று கூறினார்கள்.

ஆனால் அதை உதவியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. “பாபா” தூங்கிக்கொண்டு இருக்கிறார். எனவே உள்ளே அனுமதிக்க முடியாது” என்று கூறினார்கள்.

கத்திக்குத்து

இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும் “திடீர்” என்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த “பிச்சுவா” கத்தியை எடுத்து உதவியாளர்களை குத்தினார்கள்.

இதில் சாய்பாபாவின் தனி உதவியாளர்கள் ராதாகிருஷ்ண சுவாமி, சுனில் குமார் மகாஜன் மற்றும் மெய்க் காவலர்கள் அனில் பட்டேல், விஷால் பகத் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு, ஆசிரமத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மற்றவர்கள் ஓடிவந்தனர். உடனே அந்த 4 ஆசாமிகளும் பக்கத்தில் உள்ள ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டனர்.

இந்த சம்பவத்தினால் ஆசிரமத்தில் பதட்டநிலை காணப்பட்டது. உடனே ஆசிரமத்தின் “அபாச சங்கு” ஒலிக்கப் பட்டது.

4 பேரும் சுட்டுக்கொலை

“அபாய சங்கி”ன் ஓசை கேட்டு, புட்டபர்த்தி போலீசார் ஆசிரமத்துக்கு விரைந்து வந்தனர். அறைக்குள் சென்று பதுங்கி இருந்த கொலையாளிகள் 4 பேரையும் வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் வெளியே வர மறுத்துவிட்டனர்.

இதனால் போலீசார் கதவை உடைத்து அறைக்குள் புகுந்தனர். உடனே அந்த 4 பேரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர்களை கத்தியால் குத்த முயன்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேரும் குண்டு பாய்ந்து செத்தனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:_

1. சுரேஷ்குமார், “எம்.காம்.” பட்டதாரி.

2. சுரேஷ் சாந்தாராம் பிரபு _ கப்பல் ஓட்டும் மாலுமி பயிற்சி பெற்றவர். மும்பையை சேர்ந்தவர்.

3. கே.சாய்ராம் _ எம்.காம். இறுதி ஆண்டு மாணவர்.

4. ஜெகநாத் _ சாய்பாபா கல்லூரி முன்னாள் மாணவர்.

2 உதவியாளர் சாவு

இதற்கிடையே கத்திக்குத்து காயம் அடைந்த 4 உதவியாளர்களும் ஆசிரம வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ராதாகிருஷ்ண சுவாமி, அனில்குமார் மகாஜன் ஆகிய 2 பேர் பரிதாபமாக செத்தனர். மற்ற இருவரும் ஆபரேஷனுக்குப்பிறகு உடல் தேறினார்கள்.

காரணம் என்ன?

இந்த சம்பவம் சாய்பாபா பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

.

சாய்பாபாவை கொல்ல வந்த கொலையாளிகள் தங்கி இருந்த அறையில் சோதனை போட்டபோது “சயனைடு” விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷம் ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்டது. இதில் வெளிநாடு சதி இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

மேலும் ஆசிரம நிர்வாகம், இவர்களுக்கு எந்த வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்ய வில்லை என்றும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சத்யசாய்பாபாவை கொலை செய்ய முயன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மாநில ரகசிய போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள்.

பக்தர்களுக்கு தரிசனம்

கொலை முயற்சி நடந்த போதிலும், எவ்வித மாற்றமும் இல்லாமல் மறுநாள் (7_ந்தேதி) காலை 7 மணிக்கு சாய்பாபா வழக்கம்போல பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்

பஜனை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். மாலையிலும் வழக்கம் போல பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
http://www.maalaimalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சாய்பாபா?, பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தி சத்ய ச

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s