Daily Archives: மே 3, 2008

பெரியார் _ வினோபா சந்திப்பு 2 மணி நேரம் ரகசிய பேச்சு

 

ஈ.வெ.ரா. பெரியாரும், காந்தியின் சீடர் வினோபாவும் திருச்சியில் சந்தித்தனர். 2 மணி நேரம் தனியாகப் பேசினார்கள்.

பூமிதான இயக்கத் தலைவர் வினோபாவும், திராவிடர் கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரும் நேர் எதிர்மாறான கொள்கை உடையவர்கள்.

.காந்தியின் சீடரான வினோபா கடவுள் பக்தி உடையவர். நிலங்களை தானமாக பெற்று நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கி வந்தார். ஆனால் கோவில்களுக்கு நிலம் எழுதி வைப்பதை கண்டித்து வந்தார்.

பெரியார் மூட நம்பிக்கைகளை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். பிள்ளையார் சிலை உடைப்பு, ராமர் பட எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வந்தார்.

வினோபா விருப்பம்

இப்படி நேர் எதிர் கொள்கைகளையுடைய இருபெரும் தலைவர்களும் ஒன்றாக சந்திப்பது என்பது மிகுந்த ஆச்சரியப்படத்தக்க நிகழ்ச்சி அல்லவா? யாருமே எதிர்பாராத இந்த சந்திப்பு திருச்சியில் 18_1_1957 அன்று நடைபெற்றது.

பெரியாரை சந்திக்க வேண்டும் என்பது வினோபாவின் நீண்ட நாளைய ஆசை. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அவர் திருச்சி "நேஷனல் காலேஜ்" கட்டிடத்தில் தங்கி இருந்தார். பெரியாரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பூமிதான இயக்க ஊழியர்களிடம் தெரிவித்தார் வினோபா.

உடனே அந்த ஊழியர்கள் பெரியார் மாளிகைக்கு சென்று விஷயத்தை தெரிவித்தனர். இந்த அழைப்பை பெரியார் ஏற்றுக்கொண்டார்.

தன்னுடைய காரில் ஏறி வினோபா இருக்கும் இடத்துக்கு வருவதாக உறுதி அளித்தார்.

மணியம்மையுடன் பெரியார்

உடனே காரை வரவழைத்து அதில் பெரியார் ஏறினார். கூடவே மணியம்மையையும் அழைத்துக்கொண்டு போனார்.

பெரியாரும், மணியம்மையும் ஒன்றாக புறப்பட்டதைப் பார்த்த அவர்களது செல்லப்பிராணியான "சீட்டா" என்ற நாய் ஓடோடி வந்து காரில் தாவி ஏறிக்கொண்டது. பூமிதான ஊழியர்கள் `ஜீப்'பில் முன்செல்ல பெரியாரின் கார் வினோபா தங்கியிருந்த நேஷனல் காலேஜ் கட்டிடத்தை சென்றடைந்தது.

மாடிக்கு

வினோபா கட்டிடத்தின் மாடி அறையில் இருப்பதாக பெரியாரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே பெரியாரும், மணியம்மையும் மாடிப்படி ஏறிப்போனார்கள். அங்கு ஒரு அறையில் வெறும் வேட்டி மட்டும் உடுத்திக்கொண்டு தேன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வினோபா.

அவரைப் பார்த்ததும் "வணக்கம்" என்று பெரியார் சொன்னார். வினோபா கைகளை கூப்பி பதில் வணக்கம் தெரிவித்தார்.

"இதுதான் பெரியாரின் மனைவி மணியம்மை" என்று பூமிதான ஊழியர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். மணி யம்மையை உட்காரும்படி வினோபா கேட்டுக்கொண்டார்.

வயது என்ன?

"உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது?" என்று பெரியாரிடம் இந்தியில் வினோபா கேட்டார். அதை மொழி பெயர்ப்பாளர் தமிழில் சொன்னதும், "எனக்கு 78 வயது" என்று தமிழில் பதில் கூறினார் பெரியார்..

வினோபாவுக்கு தமிழ் படிக்கத் தெரியும் என்றாலும் பேசத்தெரியாது. ஆனால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். 78 வயது என்று பெரியார் சொன்னதும், "அப்படியா நூறுக்கு இன்னும் 22 பாக்கி" என்று வினோபா சொன்னார்.

ரகசிய பேச்சு

சாப்பாட்டை முடித்துக்கொண்டதும், "இங்கேயே பேசலாமா? அல்லது தனியாக பேசலாமா?" என்று வினோபா கேட்டார். "தனியாக பேசலாம்" என்று பெரியார் பதில் சொல்ல ஒரு அறைக்குள் சென்று பேசினார்கள்.

அங்கு பெரியார், வினோபா, மணியம்மை, மொழி பெயர்ப்பாளர் ஆகிய 4 பேர் மட்டுமே இருந்தனர். காலை 10_40 மணிக்கு தொடங்கி பகல் 12_30 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பிறகு பெரியார் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். "என்ன பேசினீர்கள்?" என்று பெரியாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "எல்லாம் அப்புறம்" என்று சொல்லிக்கொண்டே பெரியார் மணியம்மையுடன் காரில் ஏறி கிளம்பி விட்டார்.

"ஈ.வெ.ரா. பெரியாருடன் பேசியது பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று வினோபாவிடம் நிருபர்கள் கேட்டனர். "ஒன்றும் இல்லை" என்று வினோபா தலையை ஆட்டினார்.

இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது வெளிவராத ரகசியமாக இருந்தது. அதனை அறிவதில் பலரும் ஆவலாக இருந் தார்கள்.

பெரியார் விளக்கம்

வினோபாவுடன் பேசியது என்ன என்பதை அறிய, பெரியாரை `தினத்தந்தி' நிருபர் பேட்டி கண்டார்.

"நான் பேசியதை அப்படியே தெரிவித்து விடுகிறேன்" என்று கூறி முழு விவரத்தையும் வெளியிட்டார், பெரியார்.

சிலை உடைப்பு சரியா

வினோபா:_ நீங்கள் சாதி ஒழிப்பு வேலையில் மிக தீவிரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

பெரியார்:_ சாதி ஒழிப்பு வேலையை நான் என் முதல் வேலையாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். சாதிகள் ஒழிந்தால்தான் இந்த நாட்டு மக்கள் அறியாமையில் இருந்து விடுபட்டு ஒழுக்கமுடையவர்களாக வாழ முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.

வினோபா:_ சாதிகள் ஒழிய வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் சாமி சிலை களை உடைப்பது, புராணங்களை எரிப்பது போன்ற காரியங்களைச் செய்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

பெரியார்:_ சாதிக்கு வேர் போல கடவுளும், புராணங்களும்தான் இருக்கின்றன. ஆகவேதான் நான் அடிப்படையில் கை வைக்கிறேன். கடவுளும், புராணங்களும் ஒழிந்தால், அவை உண்டாக்கிய சாதிகள் தானாக ஒழியும்.

வினோபா:_ புராணங்களில் நல்ல கருத்துக்களும் இருக்கின்றன; கெட்ட கருத்துக்களும் இருக்கின்றன. நாம் நல்ல கருத்தை எடுத்துக்கொண்டு கெட்ட கருத்தை விட்டுவிடவேண்டும்.

விஷமும், சர்க்கரையும்

பெரியார்:_ இப்படி எத்தனை பேர்களால் முடியும்? விஷத்தையும், சர்க்கரையையும் கலந்து கொடுத்தால் விஷத்தில் இருந்து சர்க்கரையை மட்டும் பிரித்து சாப்பிட எத்தனை பேர்களால் முடியும்?

புராணங்களில் வரும் கடவுள்கள், கண்ட பெண்களிடம் ஆசை வைக்கிறார்கள். பெண் கடவுள்களும் அப்படித்தான். நீங்கள் பத்தினி வேஷம் போட்டுவிடும் பாஞ்சாலி, அகல்யா, அருந்ததி எல்லோருமே விபசாரிகள். ஒருத்திகூட உண்மையான பத்தினி கிடையாது.

மணியம்மை

வினோபா:_ (பெரியாருக்கு பக்கத்தில் இருந்த மணியம்மையை சுட்டிக்காட்டி) அம்மாவை பக்கத்தில் வைத்துக் கொண்டே இப்படி பேசுகிறீர்களே?

பெரியார்:_ கடவுள் பத்தினிகள் விபசாரத்தை மறைக்க பத்தினி வேஷம் போட்டு எல்லோரையும் ஏமாற்றினார்கள். ஆனால் அம்மா (மணியம்மை) ஒழுக்கத்தையும், சொந்த நாணயத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பத்தினியாக நடந்து கொள்கிறாள்.

வினோபா:_ புராணங்களை நாம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதில்லை. காலத்துக்கு தகுந்தபடி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

இவ்வாறு வினோபாவும் நானும் பேசினோம் என்று பெரியார் கூறி முடித்தார்.
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under காந்தி, பெரியார், ரகசிய பேச்சு, வினோபா

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை:மந்திரவாதி உள்பட 3 பேர் கைது:பில்லி-சூனியம் வைத்து துன்புறுத்தியது அம்பலம்

நாகர்கோவில், மே.3-

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த வழக்கில் மந்திரவாதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை

கருங்கல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தொலையாவட்டம் கம்பிளார் பகுதியைச் சேர்ந்தவர் செறு மணி (வயது 55). இவர் பாறை உடைக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பேபி சரோஜா (50) அருகில் உள்ள முந்திரி ஆலையில் வேலைபார்த்து வந்தார். செறுமணியின் மூத்தமகள் ஜெஸ்லின் உஷாவுக்கு கடந்த 11/2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

செறுமணி கடந்த 29-ந்தேதி தன் மனைவி பேபி சரோஜா, மகள்கள் ஜெஸ்லின் நிஷா (21), ஜெஸ்லின் ஆயிஷா (18) ஆகியோருடன் விஷப்பொடி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மந்திரவாதி

இந்நிலையில் இறந்த பேபி சரோஜா தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை அவருடைய மூத்த மகள் ஜெஸ்லின் உஷா கைப்பற்றி போலீசில் ஒப்படைத்தார். அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாவது:-

எங்கள் வீட்டின் அருகில் வேதநாயகம் மகன் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரிய மந்திரவாதி. இவருடைய மந்திர தொல்லையை எங்களால் தாங்க முடியவில்லை. அய்யப்பனின் பில்லி-சூனியத்தால் ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்து பிழைத்துக்கொண்டு இருந்தோம்.

நோய் தீர அப்பாவி மக்களிடம் கடன் வாங்கினோம். மந்திரவாதி அய்யப்பன் எங்களை வாழ விடமாட்டான் என்பதால் தற்கொலை செய்கிறோம். இந்த மரணத்துக்கு காரணம் அய்யப்பனும், அவருடைய மனைவி பேபியும் தான்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்த கடிதம் கிடைத்தவுடன் போலீசார் மீண்டும் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, செறுமணி சுமார் 10 ஆண்டுக்கு முன்பு வீடு கட்ட பலரிடம் கடன் வாங்கியதும், இந்த பணத்தை அவர் திருப்பி செலுத்த முடியாமல் வறுமையில் வாடி வந்ததும் தெரியவந்தது.

வெடி வெடித்து காயம்

மேலும் 21/2 ஆண்டுகளுக்கு முன்பு தனது 2-வது மகளுக்கு கை, கால் செயலிழந்ததால் அவர் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதற்கிடையே அவர் பாறை உடைக்கும் தொழில் செய்த போது பாறை வெடி வெடித்து காயம் அடைந்து பல நாட்கள் சிகிச்சை பெற்றார். இதில் பல ஆயிரம் ரூபாய் செலவானது.

மேலும் பேபி சரோஜா அடிக்கடி நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அவரது கடைசி மகள் ஜெஸ்லின் ஆயிஷா போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தார். இந்த வேலைக்கும் தடை ஏற்பட்டதாக தெரிகிறது.

பரிகாரம்

இந்த தொடர் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க செறுமணியின் குடும்பத்தினர் மந்திரவாதி அய்யப்பனின் தம்பி குருநாதனை நாடி அவர் மூலம் பல ஆயிரம் செலவு செய்து பரிகாரம் செய்தனர். இருப்பினும் அய்யப்பனின் மந்திரவாதம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் செறுமணியின் வீட்டை சுற்றி அடிக்கடி முட்டைகளும், கோழி ரத்தமும் காணப்பட்டதால் அவர் மேலும் பயம் அடைந்தார்.

இது தவிர பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி என்ற பெண், பேபி சரோஜாவுக்கு ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் ஒரு தங்க வளையலை கடனாக கொடுத்துள்ளார். ராணி கடந்த 29-ந்தேதி காலையில் பணத்தையும், வளையலையும் சரோஜாவிடம் கேட்டு மனம் வருந்தும்படி பேசியதாக தெரிகிறது.

இந்த தொடர் தொல்லைகளால் செறுமணி தனது குடும்பத்துடன் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

கைது

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்ய காரணமாக இருந்ததாக கூறப்படும் மந்திரவாதி அய்யப்பன் (47), இவருடைய மனைவி பேபி (32), மற்றும் கடன் கொடுத்த ராணி (34) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கருங்கல், திருமணம், மந்திரவாதி

பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு

பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு

துபாய், மே.3-

சவுதி அரேபியாவில் 3 பாகிஸ்தானியர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர். போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக இப்படி தண்டிக்கப்பட்டனர். இஸ்லாமிய சட்டப்படி போதை பொருள் கடத்தல் குற்றத்துக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது அந்த நாட்டின் வழக்கம் ஆகும். அதன்படி ரியாத் நகரில் அவர்களுக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

6 நாட்களுக்கு முன்பு அவர்களின் கூட்டாளிகள் ஜெட்டா நகரில் இதேபோல வாளால் தலை துண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை ஆகிய குற்றங்களுக்காக இந்த ஆண்டு இதுவரை 56பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=410405&disdate=5/3/2008

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சவுதி அரேபியா, ஜெட்டா, பாக்கிஸ்தான், போதை பொருள்

இவர் கண்டிப்பாக குரானையும் ஹதீஸையும் பின்பற்றும் முஸ்லீமாக இருக்க முடியாது.ஏன் என்றால் இவர் தன் வளர்த்த பெண்னை மகள் என்று சொல்லுகிறார்.காட்டரபிகள் இப்படித்தான் சொன்னார்கள்.ஆனால் முகமது மட்டும் தான் தன் வளர்ப்பு மகனின்? மகளை திருமணம் செய்தார்.இதன் படி தான் வளர்த்த பெண்ணையும் திருமணம் செய்வது ஹலால் ஆகும்.இதை அறியாமல் இவர் தான் வளர்த்த பெண்ணை மகள் என்று சொல்லி அடுத்தவனுக்கு திருமணம் செய்து வைப்பது அல்லாவுக்கும்,அவருடைய தூதன் முகமதுவுக்கும் எதிரானதாகும்.சுப்பானல்லாஹ்(அப்படின்னா என்ன?அல்லா தூய்மையானவன்?) முகமது வழியில் நடக்கிற உண்மை முஸ்லீம் இப்படி செய்யமாட்டான் அந்த பெண்ணுக்கு உரிய மஹர் கொடுத்து தானே கல்லியாணம் செய்வான்.அல்ஹதுலில்லா-அல்லாவுக்கே புகழ் அனைத்தும்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/002/03_05_2008_002_008.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், காபா, குரான், நிக்காஹ், முகமது, ஹஜ்

மகா அலெக்ஸாண்டர் முஸ்லீமா?குரானின் சரித்திர ஜோக்

1. அலேக்ஜாண்டர் த கிரேட் (Alexandar the Great) – ஓர் இறைகொள்கையாளரா (முஸ்லீமா) ? (குர்-ஆன் 18:83-97)

பதில்: குர்-ஆனில் அல்லா, அலேக்ஜாண்டர் ஒரு “ஓர் இறைக்கொள்கையாளன்”( பல தெய்வங்களை வணங்காதவன்) என்றும், அல்லாவின் வழியிலே நடப்பவன் என்றும் சொல்கிறான். ஆனால் சரித்திரம் நமக்குச் சொல்கிறது, அவன் பல தெய்வங்களை வணங்கியவன். அந்த தெய்வங்களுக்காக சென்ற இடமெல்லாம் பலிபீடங்களை நிறுவியவன்.

இந்தியாவில் படையெடுத்து வரும்போது “ஹைபாஸிஸ்” நதிக்கரையில் அவன் தன் நாட்டு தெய்வங்களுக்கு (ஒலிம்பியன்) 12 பலிபீடங்களை நிறுவினான். Click for Details

குர்-ஆன் 18: 83-98 – அலேக்ஜாண்டர் ஓர் இறைக்கொள்கையாளன்

18:83 (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; ‘அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.

18:84 நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.

18:85 ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.

18:86 சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; ‘துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.

18:87 (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: ‘எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.

18:88 ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.

18:89 பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:90 அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.

18:91 (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.

18:92 பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:93 இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;

18:94 அவர்கள் ‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

18:95 அதற்கவர்: ‘என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”‘என்றுகூறினார்.

18:96 ‘நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ‘உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).

18:97 எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

சில இஸ்லாமிய அறிஞர்கள் இதனை மறுக்கின்றனர். ஆனால் குர்-ஆன் “துல்கர்னைன்” என்று இந்த அரசனுக்குப் பெயர் உள்ளதாகச் சொல்கிறது. சரித்திர நூல்கள்படி அலேக்ஜாண்டருக்கு “துல்கர்னைன்” என்ற பெயர் உள்ளது.
1) See here for Dulkarnain at Wikipedia
2) And here

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், சரித்திரம், முகமது, முஸ்லீம்

மற்றவர்களை புகழ்ந்து பேசுவது ஏன்?புது ஆய்வு முடிவுகள்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/014/03_05_2008_014_009.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆய்வு, ஜப்பான், டோக்கியோ, புகழுவது

மண்ணிப்புக் கேட்கத் தயங்க வேண்டாம்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/115/03_05_2008_115_004.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under மன்னிப்பு, மற்றவர்கள்

தினமலர் பரப்பும் மூட நம்பிக்கை கதைகள்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/109/03_05_2008_109_002.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து மதம், தினமலர், போலிகள், மூட நம்பிக்கை

தமிழ் பேசிய ஒரிசா தீவிரவாதி


http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/016/03_05_2008_016_007.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஒரிசா, தமிழ், தீவிரவாதி, விசாரணை

கவர்ச்சி,கவர்ச்சி கிரிக்கெட்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/008/03_05_2008_008_015.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆபாசம், இந்தியா, கவர்ச்சி, கிரிக்கெட், நடனம்