பைகளை பறிகொடுத்த கிரண்பெடி!


இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடி, பதவியிலிருந்து விலகி இப்போது முழு சமூக சேவகியாக மாறியிருக்கிறார். அவரிடம் பேசிய போது, காக்கி உடையை அணிந்து… அணிந்து அலுத்துவிட்டதால்தான் ஓய்வு பெற்றீர்களா?

“இல்லை… இல்லவே இல்லை… காக்கி உடை ஒரு போதும் எனக்கு அலுப்பை தந்த தில்லை. காக்கி உடையை அணிந்திருக்கும் போது கம்பீரமாக இருந்ததே அன்றி… சோர்வோ… அலுப்போ ஏற்பட்டதில்லை. ஆனால் எனக்கு கிடைக்க வேண்டியதை… தடை செய்யும்போது அந்த வேலையில் தொடர விரும்பவில்லை. எனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை அவர்கள் தடுத்த தில் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை என்று எனக்கு தோன்றியதால் வேலைறயிலிருந்து ஓய்வு பெற்றேன். நடப்ப தெல்லாம் நன்மைக்குத் தான்! ஓய்வு பெற்ற தால்தான் எனக்கு அதிக நேரம் கிடைக் கிறது. அதில் நிறைய பயணம் செய்கிறேன். சேவைகள் செய்வதற்கு கூடுதலாக நேரம் உள்ளதால் சந்தோஷமாக இருக்கிறது.''

ஐ.நா.சபை பொது செயலாளரின் போலீஸ் துறை ஆலோசகரான ஒரே பெண் நீங்கள்தான். அதைப்பற்றி உங்களுடைய கருத்து..?

“சர்வதேச சபையில் என்னை தேர்ந்தெடுத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பொதுச்செயலாளராக இருந்த கோபி அன்னனுக்கு போலீஸ் ஆலோசகராக இருந்தேன். ஐ.நா.சபையில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்பதில் எனக்கு பெருமையே…''

நவ்ஜோதி, இந்தியா விஷன் என இரண்டு அமைப்புகளை நிர்வகித்து வருகிறீர்கள்? அவற்றின் செயல்பாடுகளை பற்றி கூற முடியுமா?

“ஓ… தாராளமா… நவ்ஜோதி அமைப்பு 1984ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மகசேசே விருது வாங்கிய பிறகு, இந்தியா விஷனை துவக்கினோம். போதைக்கு எதிரான செயல்பாடுகளில் முத்திரை பதித்து வருகிறது நவ்ஜோதி அமைப்பு. ஜெயிலில் இருக்கும் கைதிகளின் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கையை வழங்கி வருகிறது இந்தியா விஷன். இரண்டுமே சேரிக் குழந்தைகள் மற்றும் கிராமப்புற புனரமைப்பு வேலைகளில் தொண்டாற்றி வருகின்றன. இந்த அமைப்புகளில் டாக்டர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சேவகர்கள் உள்ளனர்.

ஞுஞுஞு.சூஹகிக்சு கூஙூக்ஷகூஹ.ஷச்ஙு என்ற அமைப்பின் செயல் பாடு எப்படி உள்ளது?

“அதுவும் மிகச் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. குறிப்பாக போலீசாருக்கும், மக்களுக்கும் இடையேயான நட்புறவை உருவாக்கி வருகிறது இந்த அமைப்பு. பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைவாக முடிக்க செயலாற்றி வருகிறோம். போலீசார் மற்றும் முக்கிய அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதால் இவை அனைத்தும் சாத்தியமாகிறது. இந்தியாவில் எங்கே இருந்தாலும், இந்த வெப்சைட் மூலம் என்னிடம் தொடர்பு கொள்ள முடியும். இதில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நானே நேரடியாக பதில் சொல்கிறேன்.''

மகள் மற்றும் மருமகனுடன் கிரண்பெடி
 
நீங்கள் எப்போதாவது புடவை உடுத்தியதுண்டா?

“பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை உடுத்தினேன். ஆனால் அது எனக்கு சவுகரியமாக இல்லை. அதனால் சேலை உடுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.''

போக்குவரத்தை சரி செய்வதற்காக… அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் காரையே நிறுத்தினீர்கள்? குற்றவாளிகளை திருத்த முயற்சித்தீர்கள்? இந்த இரண்டிலும் உங்க ளுக்கு பிடித்தது எது?

“எனக்கு இந்த இரண்டுமே ஒண்ணுதான். சூழ்நிலைகளின் தேவைகளை அனுசரித்து தீர்மானிக்கிறேன்.''

பல்வேறு உலக நாடுகளுக்கு சென்று வந்த உங்களுக்கு, மறக்க முடியாத அனுபவம் உண்டா?

“உண்டு… சமீபத்தில் மனித உரிமை சேவைகளுக்காக எனக்கு விருது வழங்கினார்கள். அதை வாங்குவதற்கு பெர்லின் விமான நிலையத்தில் இறங்கியபோது, நான் எடுத்துச் சென்ற இரண்டு `பேக்'குகளையும் காணவில்லை, யாரோ திருடிவிட்டார்கள். அதில் தான் பாஸ்போர்ட், என்னுடைய உடைகள் அனைத்தும் இருந்தன. வேறு வழியின்றி… விமான நிலையத்திலிருந்து அதே உடையில் விழாவுக்கு சென்று விருது வாங்கினேன். சர்வதேச விழாவில் விருது வாங்கும்போது கசங்கிய உடையை அணிந்தது நானாகத் தான் இருப்பேன். தினமும் இரண்டு உடைகளை அணியும் நான், அதே உடையில் மூன்று நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம். இதுவரை அந்த இரண்டு `பேக்'குகளைப் பற்றி எந்த தகவலும் இல்லை!'' என்று அமைதியாக புன்னகைக்கிறார் மாஜி போலீஸ் அதிகாரி!

***
http://www.dailythanthi.com/magazines/nyayiru_article_F.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s