காடை இறைச்சி சாப்பிட்டால்…


காடை இறைச்சி சாப்பிட்டால்…
நார்மல் உடம்புடன் இருந்தாலும்… குண்டாவதற்குரிய அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால்… உடனடியாக உங்களுடைய உணவு முறையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காகவே… இதோ, அரிசி, உளுந்து, தானியம் சேர்த்த உணவுகளைக் குறைக்கணும். கண்டிப்பாக இறைச்சி வகைகளை சாப் பிடவே கூடாது. கொழுப்பு நிறைந்த இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிட்டால் இருதயம் பாதிக்கும். பால் மற்றும் பால்வகை உணவுகள், முட்டை, ஐஸ்க்ரீம், கேக், சாக்லேட், தேங்காய் எண்ணை, குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்த உணவுகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க் கவும்.

அதேபோல், மைதா மாவில் தயாரிக்கப்பட்ட புரோட்டா, சப்பாத்தி, நாண் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. ஒருவருக்கு தினமும் 1500 கலோரி தேவை. ஆனால் நாம் அனை வருமே தினமும் 3 ஆயிரம் கலோரி அளவுக்கு சாப்பிடுகிறோம்.

இதை தவிர்க்க… பயறு வகைகள், காய்கறி வகைகள், சோயா, முருங்கை இலை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், இரண்டு கேரட்டுகளை துண்டு களாக்கி சாப்பிடவும். அல்லது முட்டைக் கோஸ், வெள்ளரித் துண்டுகளை சாப்பிடலாம். இதனால் மதிய உணவின் அளவும் குறையும், உடம்புக்கும் சத்து கிடைக்கும்.

நாட்டுக் கோழி, காடை ஆகிய இறைச்சிகளை சாப்பிடலாம். இதில் கொழுப்பு குறைவு என்பதாலும், புரோட்டீன் அதிகம் என்பதாலும் உடலுக்கு நல்லது. சிறிய வகை மீன்களை சாப்பிடவும். ருசிக்காக பெரிய வகை மீன்களை சாப்பிட வேண்டாம்.

தினமும் ஒரு வேளையாவது கோதுமையில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவது அவசியம். சர்க்கரை சேர்க்காமல் டீ சாப்பிடலாம். தாளிக்காத குழம்பை பயன்படுத்தலாம். ஏனென்றால்… கடுகு, எண்ணை போன்றவை தவிர்க்கப்படும். எக்காரணத்தைக் கொண் டும் இரவு சாப்பிடாமல் படுக்கக் கூடாது. தினமும் மதிய உணவை, 12.30 மணியிலிருந்து 1.30 மணிக்குள்ளும், இரவு உணவை 9 மணிக்குள்ளும் சாப்பிட வேண்டும்.

மதிய உணவிலிருந்து இரவு உணவுக்கு நீண்ட இடைவெளி வேண்டாம். தினமும் ஒரு மணி நேரம் நடந்தால் உடலுக்கும் நல்லது, கொழுப்பும் குறையும். இல்லாவிட்டால் தோட்ட வேலை, ஏரோபிக்ஸ், யோகா ஆகியவை சிறந்தது.

***http://www.dailythanthi.com/magazines/nyayiru_titbits.htm

Advertisement

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இறைச்சி, காடை, சாப்பிட்டால்..., நார்மல் உடம்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s