திடுக்கிடும் தகவல்: உமர் ஒரு கிறிஸ்தவர் அல்ல! முஸ்லீம்கள் கண்டுபிடிப்பு


திடுக்கிடும் தகவல்: உமர் ஒரு கிறிஸ்தவர் அல்ல! முஸ்லீம்கள் கண்டுபிடிப்பு

இஸ்லாமியர்கள் அங்கே இங்கே சுற்றி கடைசியாக, என் தலையிலேயே கையை வைத்துள்ளார்கள்.

அதாவது, கிறிஸ்தவர்கள் எழுதும் கட்டுரையை முஸ்லீம்கள் படிக்கவைக்கக்கூடாது என்பதற்காக, "இவர்கள் அவதூறு செய்கிறார்கள்" என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள், இப்போது கிறிஸ்தவர்களும் எங்கள் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்பதற்காக பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.

இப்படி "உமர் கிறிஸ்தவர் அல்ல" என்று சொன்னவரே, தன் பெயரை வெளியே சொல்லாமல், Anonymous ஸாக எழுதிய பின்னூட்டம் தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்த கட்டுரையை அவர் கண்டவுடன் அந்த Anonymousவுடைய உண்மையான பெயர் வெளியிடுவார்கள். சரி போகட்டும், அவர் என்ன சொன்னார் என்பதை படியுங்கள்.

Quote:

========================

At 5:05 PM, Anonymous said…

நீங்க இப்படி சொல்றீங்க. ஆனா அவர் உன்மையில் கிறிஸ்தவர்தானா என்பதில்பலருக்கு சந்தேகம் இருக்கு. அவர் முஸ்லீமைப்பற்றி எழுகிறேன் என்றப் பெயரில் கிறிஸ்தவர்களை கேவலப்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்று ஏராளமானக் கிறிஸ்தவர்கள் பேசிக்கொள்வதாக எனது நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒற்றுமையாக இருந்த தமிழ் கிறிஸ்தவர்களையும் – முஸ்லீம்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி இது என்றும் அந்த செயல்களில் ஈடுபடுவர்கள் சில ஆதிக்க சக்திகள் என்றும் செய்திகள் வந்த வன்னம் உள்ளன. இந்த உன்மையை அறியாமல் தான் சில கிறிஸ்தவ இனையங்களே இவர்களின் சூழ்ச்சி தெரியாமல் பலியாகிக்கொண்டிருக்பதாக நம்பத்தகுந்த செய்திகள் வந்துக்கொண்டுள்ளது. விரைவில் சில உண்மைகள் வெளிவரும் என்று எதிர்ப்பார்ப்போம்.

Source: http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html
========================

இவர் சொல்லும் விவரங்கள், சரியானதா என்பதை இது வரை என் கட்டுரைகளை படிப்பவர்களே முடிவு செய்யட்டும்.

அவர் முன்வைத்த சந்தேகங்கள்:

=====================
1. அவர்(உமர்) உன்மையில் கிறிஸ்தவர்தானா என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கு.

2. அவர் முஸ்லீமைப்பற்றி எழுகிறேன் என்றப் பெயரில் கிறிஸ்தவர்களை கேவலப்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்று ஏராளமானக் கிறிஸ்தவர்கள் பேசிக்கொள்வதாக எனது நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

3. அந்த செயல்களில் ஈடுபடுவர்கள் சில ஆதிக்க சக்திகள் என்றும் செய்திகள் வந்த வன்னம் உள்ளன.

4. இந்த உன்மையை அறியாமல் தான் சில கிறிஸ்தவ இனையங்களே இவர்களின் சூழ்ச்சி தெரியாமல் பலியாகிக்கொண்டிருக்பதாக நம்பத்தகுந்த செய்திகள் வந்துக்கொண்டுள்ளது

(இந்த வரிகளில் உள்ள சில எழுத்துப்பிழைகள், இந்த விவரத்தை சொன்னவருடையது)
=====================

என் பதில்:

Quote by Anonymous : 1. அவர்(உமர்) உன்மையில் கிறிஸ்தவர்தானா என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கு.

நான் எழுதும் கட்டுரைகள் அனைத்தையும் படிப்பவருக்கு இந்த சந்தேகம் வராது. அந்த "பலர்" யாருங்க? முஸ்லீம்களா அல்லது கிறிஸ்தவர்களா?

Quote by Anonymous : 2. அவர் முஸ்லீமைப்பற்றி எழுகிறேன் என்றப் பெயரில் கிறிஸ்தவர்களை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று ஏராளமானக் கிறிஸ்தவர்கள் பேசிக்கொள்வதாக எனது நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

ஒகோ, அப்போ நீங்க மூன்றாவது ஆளு. உங்க நண்பருக்கு கிறிஸ்தவர்கள் தெரிந்து இருப்பதைப் பற்றி மிக்க மகிழ்ச்சி. கிறிஸ்தவர்களை நான் கேவலப்படுத்தவில்லை சகோதரனே, உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் எழுதும் பொய்யான தகவல்களுக்கு என்னால் இயன்ற பதில் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். கிறிஸ்தவர்களை யார் கேவலப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை உங்கள் கட்டுரைகளையும் என் கட்டுரைகளையும் படிப்பவர்களுக்கு நன்றாக புரியும். இயேசுவையும் அவரது தெய்வீகத்தையும் கேவலப்படுத்துகிறவர்கள் நீங்களா அல்லது நானா என்பது எல்லா கிறிஸ்தவர்களுக்குத் தெரியும்.

Quote by Anonymous : 3. அந்த செயல்களில் ஈடுபடுவர்கள் சில ஆதிக்க சக்திகள் என்றும் செய்திகள் வந்த வன்னம் உள்ளன.

இதற்கு முன்பாக ஏதாவது அரசியல் கட்சியில் இருந்தீர்களா! அரசியல் வாதி போல அறிக்கைகளை வெளியிடுகிறீர்கள். அன்பான சகோதரனே, நான் ஆதிக்க சக்தியும் இல்லை, இது என் யுக்தியும் இல்லை. யார் அய்யா உங்களுக்கு அந்த நம்பத்தகுந்த‌ செய்திகளை சொல்வது. அது சரி, கிறிஸ்தவன் இல்லாதவன் ஏன் கிறிஸ்தவத்திற்கு எதிராக முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லப்போகிறான். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க "சம்மந்தமில்லாமல்".

Quote by Anonymous : 4. இந்த உன்மையை அறியாமல் தான் சில கிறிஸ்தவ இனையங்களே இவர்களின் சூழ்ச்சி தெரியாமல் பலியாகிக்கொண்டிருக்பதாக நம்பத்தகுந்த செய்திகள் வந்துக்கொண்டுள்ளது.

எல்லாரும் நன்றாக கவனியுங்கள், "நம்பத்தகுந்த செய்திகள்" இவருக்கு வந்துக்கொண்டு இருக்கிறதாம். எந்த உளவுத்துரையிலிருந்து உங்களுக்கு நம்பத்தகுந்த செய்திகள் வந்துக்கொண்டு இருக்கிறது. சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் நானல்ல, அது யார் என்று உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.

அவர் எழுதிய இந்த வரிகளை நான் படிக்கும் போது, எனக்கு ஒரு நிகழ்ச்சி நியாபகம் வருகிறது. அதாவது, ஏவாள் தனித்து இருக்கும் போது, சாத்தான் வந்து "தேவன் உனக்கு ஏதாவது மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்றுச் சொன்னாரா?" என்ற சந்தேகத்தை கேட்டது போல, இந்த இஸ்லாமிய நண்பர், "உமர் கிறிஸ்தவனா?" என்று கிறிஸ்தவர்கள் சந்தேகிக்கும் படி செய்யலாம் என்று கனவு காண்கிறார்.

முடிவாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான்:

1. "உண்மை இஸ்லாம்" என்றால் என்ன என்பதை இப்போது தான் தமிழ் கிறிஸ்தவர்கள்(முஸ்லீம்கள் கூட) தெரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
2. என் கட்டுரைகளை கிறிஸ்தவர்கள் படிக்கக்கூடாது என்று இப்படியெல்லாம் பொய்யை அவிழ்த்து விடக்கூடாது. கிறிஸ்தவர்கள் என் கட்டுரைகளை படிக்க தவறினாலும், நீங்கள் படிக்கிறீர்கள் அல்லாவா அது போதும் எனக்கு.

 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், உமர், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s