ஆந்தைகளின் ஆணவம்


ஆந்தைகளின் ஆணவம்
– என். கோதண்டராமன்
ஒரு காலத்தில் ஆந்தைகளும் மற்ற பறவைகளைப் போல அழகாகத்தான் இருந்தன. ஒரு நாள் மாலை நேரம் கடவுள் காட்டு வழியே வந்து கொண்டிருந்தார்.

கடவுள் வருவதைப் பார்த்ததும் பறவைகளும், மிருகஙëகளும் அவர் முன் போய் நினëறு தலைவணங்கி, “கடவுளே… எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள்…'' என்றன.

“மிருகங்களே… பறவைகளே… எப்படி இருக்கிறீர்கள்?'' என்று கேட் டார் கடவுள்.

“ஆகா… தங்கள் அருளால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ் கிறோம்…'' என்றன சந்தோஷத்துடன்.

“ஆமாம், உங்களிடையே ஏதோ ஒரு பறவையினம் குறைவது போல தெரிகிறதே?'' என்ற கட வுள், அருகில் இருந்த ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தார். ஆலமரம் முழுவதும் ஆந்தைகள் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தன.

“பறவைகளே… ஆந்தைகள் மட்டும் ஏன் என்னிடம் ஆசி பெற வரவில்லை…?'' என்று கேட்டார் கடவுள்.

“அவற்றுக்கு உங்களிடம் ஆசி பெற விருப்பமில்லையாம்…'' என்றன பறவைகள்.

“அப்படியா கூறின…? ஆந்தைகளே… ஆநëதைகளே…'' என்று அழைத்தார்.

அப்போதுதான் ஓர் ஆந்தை கடவுளைக் கவனித்தது போல, “ஏய் கடவுள் கூப்பிடுகிறார்…'' என்றது.

உடனே எல்லா ஆந்தைகளும் கடவுளை நோக்கிப் பறந்து வந்தன.

“என்னிடம் ஆசி பெற எல்லா ஜீவராசிகளும் வந்தனவே… நீங்கள் மட்டும் ஏன் வரவில்லை?'' என்று கேடëடார் கடவுள்.

“நாங்கள் தூங்கிக் கொணëடிருந்தோம். இப்போதுதான் கண் விழித்தோம். அதுவும் இல்லாமல் எங்களுக்குச் சிறிய கண்கள் அல்லவா? அதனால்தான் நீங்கள் வந்ததை நாங்கள் கவனிக்கவில்லை'' என்றன ஆந்தைகள் ஆணவத்துடன்.

அவற்றின் பதிலைக் கேட்ட கட வுள், `இவை துணிச்சலுடன் என்னி டமே பொய் சொல்கின்றனவே?' என்று நினைத்தபடி,

“எல்லா மிருகங்களும், பறவை களும் விழித்திருக்கும் இந்த நேரத் தில் நீங்கள் தூங்கிக் கொண்டிருந் ததாகக் கூறுகிறீர்களே? எனவே, இன்று முதல் உங்கள் கண்கள் மற்ற பறவைகளை விட பெரியதாக இருக்கும். இரவில் மற்ற பற வைகள் தூங்கும்போது அவற்றுக் குப் பாதுகாப்பாக நீங்கள் இரவு முழுவதும் காட்டைச் சுற்றிவந்து கொண்டே இருங்கள்…'' என்று கூறிவிடëடுச் சென்றுவிட்டார்.

அந்த நிமிடமே ஆந்தைகளின் முகம் மாறியது. கண்கள் பெரிதாயின. அவற்றைப் பார்த்து மற்ற விலங்கினங்கள் சிரிக்க, அவற்றுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

தங்களின் ஆணவத்துக்குக் கிடைத்த கூலி இது என்று நினைத்துக் கொண்டு அனëறு முதல் இரவு முழுவதும் கொட்டக் கொட்ட கண் விழித்தபடி காட்டைச் சுற்றிச் சுற்றிவந்து காவல் காக்க ஆரம்பிதëதன ஆந்தைகள்.

 http://www.dailythanthi.com/magazines/sirvar_story.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆந்தை, கடவுள், ஜீவராசி, பறவை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s