நளினி- பிரியங்கா சந்திப்பால் புதிய சர்ச்சை: ராஜீவ்காந்தி கொலையில் மேலும் மர்ம முடிச்சுகள்


நளினி- பிரியங்கா சந்திப்பால் புதிய சர்ச்சை: ராஜீவ்காந்தி கொலையில் மேலும் மர்ம முடிச்சுகள்

சென்னை, ஏப். 24-

கடந்த மார்ச் மாதம் 19-ந்தேதி, வேலூர் சிறை யிலிருக்கும் நளினியை, பிரியங்கா ரகசியமாக சந்தித்து திரும்பினார்.

இந்த சந்திப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான புதிய சர்ச்சை களை ஏற்படுத்த தொடங்கி யிருக்கிறது.

தனது ரகசிய சந்திப்பு வெளியே தெரிந்ததும் டெல்லியில் இருந்த பிரியங்கா “இந்த சந்திப்பின் மூலம் எனது மனபாரம் குறைந்திருக்கிறது. வேறு உள்நோக்கம் எதுவும் கிடை யாது” என்று கூறினார்.

இருந்த போதிலும் நளினியை சந்திக்க பின் னணியில் மிக முக்கிய காரணம் இல்லாமல் இல்லை என்ற பரபரப்பு நாடு முழுவதும் நிலவிவரு கிறது.

தொடக்கத்தில் “தங்களுக்கு எதுவும் தெரியாது” என்று மறுத்த ஜெயில் அதிகாரிகள் பின்னர் “முறைப்படிதான் எல்லாம் நடந்தது” என்றனர்.

இந்த சந்திப்பின் போது அவர்கள் பேசிக்கொண்டது என்னப

“என் தந்தை நல்லவர் தானே! அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்” என்று பிரியங்கா கேட்ட தாகவும், “எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது” என நளினி சொன்னதாகவும் கூறப்பட்டது.

நிஜம் அதுவல்ல! ராஜிவ் கொலையில் மேலும் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. நளினியிடம் அந்த மர்ம முடிச்சுகள் பற்றிய விஷயங்களை பிரியங்கா பெற்றுச்சென்று இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர் கள்.

ராஜிவ்காந்தி கொலைச் சதி தொடர்பான ஆயுள் தண்டனைக் கைதிகளில் ரவிச்சந்திரன் என்பவரும் ஒருவர். இவரும் வேலூர் சிலையில்தான் இருக்கிறார்.

இவரது சார்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜிவ்காந்தி கொலைச் சம்பவத்தில் ஹரிபாபு என்ற போட்டோ கிராபர் எடுத்த புகைப்படம்தான் அடிப்படை ஆதாரம்.

இதனடிப்படையில் ராஜிவ்வை கொன்றவர் தணு என்கிற பெண் மனித வெடிகுண்டு ஆவார். ஆனால் அந்த தணு யார்ப அவருக்கு எந்த ஊர்ப அவரது குடும்பத்தினர், உறவினர்கள் யார்ப யார்ப என்று எந்தத் தகவல்களும் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளின் கொடியேந்தியபடி ஒரு பெண் புகைப்படம் வெளி யிடப்பட்டு, இவர்தான் தணு என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் தணு அல்ல. அனுஜா என்பவர் என்று கூறப்படுகிறது.

இது தவிர ராஜிவ்வை கொல்ல பயன்படுத்திய இடுப்பு பெல்ட் வெடிகுண்டு எங்கிருந்து வந்ததுப யார் தயாரித்ததுப யாரால் வரவழைக்கப்பட்டது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ராஜீவ்காந்தி கொல்லப் படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கொழும் பில் உள்ள இலங்கை தூத ரகத்திற்கு ஒரு தொலை பேசி தகவல் வந்தது. அதில் ராஜீவ் கொலை குறித்து முன்னமே தெரி விக்கப்பட்டது. இந்த விஷயம் புலனாய்வு போலீசாரால் உறுதி செய்யப்பட்டாலும்கூட, அதைப் பேசியது யார்ப எங்கிருந்து பேசப்பட்டதுப என்பதற்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.

இது தவிர சி.பி.ஐ.யின் தனிப்பிரிவான “மல்டி டெவலப்பிங்மானிட்டரிங் ஏஜென்சி” என்ற புலனாய்வு பிரிவு இன்ன மும் ராஜிவ் குறித்த தனது விசாரணையை முடிக்கவில்லை.

இப்படி பல்வேறு விஷயங்கள் குறித்து சந்தேகங்கள் தொடர் கின்றன.

இது பற்றி தணுவுக்கு நெருக்கமாக இருந்த நளினிக்கு தெரிந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தான் பிரியங்கா சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

ராஜிவ் கொலை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆரம்ப காலம் முதலே மிகவும் நுணுக்கமாக கவனித்து வருகிறார் பிரியங்கா.

இது குறித்த விசாரணை யில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாக அவர் கருதுவதாக கூறப்படுறது.

நளினி-பிரியங்கா சந்திப்பு நீண்ட நேரமாக நடந் திருக்கிறது. அவர்கள் நிறைய பேசி உள்ளனர். தனக்கு சோனியாவால்தான் தண்டனை குறைக்கப் பட்டது என்பதால் நளினியும் ரொம்பவே மனம் விட்டு பேசியுள்ளார்.

இதற்கிடையே பிரியங்கா போல் முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகள் மோகினி கிரியும் முன்னதாக நளினியை சிறையில் சந்தித்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

சோனியா காந்தியின் குடும்பத்திற்கு நெருக்கமான இவர் அந்த சந்திப்பின் போது ராஜிவ் கொலை பற்றி ஏராளமாக பேசியுள்ளார்.

இவை தவிர தணு யார்? என்பது தனக்கு தெரியும் என்று ரவிச்சந்திரன் புதிய வெடிகுண்டை போட்டிருக்கிறார்.

எனவே நளினி- பிரியங்கா சந்திப்பு விவகாரம் இதோடு நிற்க போவதில்லை. இன்னும் வெடித்துச் சிதறப் போகும் விஷயங்கள் நிறைய இருப்பதாகவே புலப்படுகிறது.

http://www.maalaimalar.com/

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under நளினி, பிரியங்கா, ராஜீவ்காந்தி, வேலூர் சிறை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s