அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம்
சௌதி அரேபியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய மதகுரு "உமர் அல்-ஸ்வைலெம்" என்பவர் சொர்க்கத்தில் அல்லா தரவிருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார்.
இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ(http://www.memritv.org/clip/en/1741.htm) படத்தில் சௌதி அரேபியாவின் மத குரு உமர் அல் ஸ்வைலெம் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். (The video quality is low in the original.)
—————————————-
உமர் அல்-ஸ்வைலெம்: நாம் சொர்க்கத்தில் கருப்பு கண்களுடைய கன்னிகளை சந்திக்கும் போது, என்ன நடக்கும் என்பதை "ஹரித் இபின் அல்முஹசிபி(Harith Ibn Al-Muhasibi)" என்பவர் நமக்கு சொல்கிறார். அந்த கன்னிப்பெண்களுக்கு கருப்பு கூந்தல் இருக்கும் மற்றும் வெள்ளை முகம் இருக்கும். இரவையும் பகலையும் உண்டாக்கியவனுக்கே எல்லா புகழும்.
என்னே கூந்தல்!,
என்னே மார்ப்புகள்!
என்னே வாய்!
என்னே கன்னங்கள்!
என்னே உருவம்!
என்னே மார்பகங்கள்!
என்னே தொடைகள்!
என்னே கால்கள்!
என்னே தோலின் வெண்மை!
வாசலின்(Vaseline), நிவே(Nivea) மற்ற இதர கிரீம்கள் இல்லாமல் என்னே ஒரு மென்மை
அந்த நாளில் முகங்கள் மென்மையாக இருக்கும் என்று அவர் சொன்னார். உங்கள் முகங்கள் கூட பவுடர் மற்றும் மேக் அப் இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்கும். நீங்கள் மென்மையாக இருப்பீர்கள். அப்படியானால், அந்த கருப்புகண்களுடைய கன்னிகள் மிகவும் உயரமுள்ளவர்களாகவும், அழகான முகமுள்ளவர்களாகவும் கருப்பு கூந்தல் உள்ளவர்களாகவும் மற்றும் வெள்ளை முகத்தோடும் உங்களிடம் வரும்போது எவ்வளவு மென்மையாக இருப்பார்கள். இரவையும் பகலையும் உருவாக்கியவன் புகழப்படுவானாக.
அவளுடைய உள்ளங்கையை நினைத்துப்பாருங்கள். அவர் சொன்னார்: அவளுடைய விரலின் நுனி எவ்வளவு மென்மையாக இருக்கும்! அந்த மென்மை சொர்க்கத்தில் ஆயிரமாயிரம் வருடங்களாக மென்மையாக்கப்பட்டு இருந்திருக்குமே! அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார், சொர்க்கத்தில் இருக்கும் மாளிகைகளில் ஒரு மாளிகையின் உள்ளே நீங்கள் செல்லும் போது, அங்கு நறுமனமுள்ள மெத்தைகளில் படுத்துக்கொண்டு இருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகள் 10 பேரை காண்பீர்கள்.
அபு கேல்(Abu Khaled) எங்கே? அவர் இப்போது தான் வந்தார்! அவர் உங்களை காணும்போது, அவர்கள் எழுந்து உங்களை நோக்கி ஓடி வருவார்கள். அவளின் கைகளை தன் கைகளோடு பிடிக்கிறவன் அதிர்ஷ்டசாலி. அந்த கன்னிகள் உங்களை பிடித்துக்கொண்டு இருக்கும் போது, உங்களை அந்த நறுமனமுள்ள மெத்தைகளில் தள்ளுவார்கள்.
அவர்கள் உங்களை தள்ளுவார்கள், ஜமால்! அல்லாஹு அக்பர்! இங்கு இப்போது உள்ள அனைவருக்கும் இப்படிப்பட்டது நடக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், அந்த கன்னிப்பெண்களில் ஒருத்தி அவளுடைய வாயை உங்கள் வாயில் வைப்பாள், உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விருப்பமோ அதை நீங்கள் செய்யலாம்.
இன்னொரு பெண் தன்னுடைய கன்னத்தை உங்கள் கன்னத்தோடு அழுத்துவாள். இன்னொருத்தி தன் நெஞ்சை உங்கள் நெஞ்சோடு அழுத்துவாள், மற்றும் இன்னுமுள்ள பெண்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார்: அந்த கருப்பு கண்களுடைய கன்னிகளில் ஒருத்தி உங்களுக்கு ஒரு குவளையில் மதுவை கொடுப்பாள். நீங்கள் செய்த நல்ல செயல்களுக்காக சொர்க்கத்தில் உங்களுக்கு "மது" வெகுமதியாக கொடுக்கப்படும். இந்த உலகத்தில் உள்ள மது அழிவைக்கொடுக்கும் ஆனால், இனி வரப்போகும் உலகத்தின் மது அப்படி அல்ல.
English Transcript Source: http://www.memritv.org/clip_transcript/en/1741.htm
—————————————-
இந்த எழுத்துக்களை படித்தால், உங்களுக்கு இந்த வார்த்தைகளில் உள்ள போதையை நீங்கள் உணரமுடியாது, எனவே, இந்த இஸ்லாமிய மதகுரு பேசிய வீடியோவை காண்பீர்களானால், அப்போது தான் போதையும் புரியும், அல்லாவின் பாதையும் புரியும்.
Video Source http://www.memritv.org/clip/en/1741.htm
Quote: |
English Transcript:
Saudi Cleric Omar Al-Sweilem Extols the Breasts and Thighs of the Black-Eyed Virgins of Paradise Following are excerpts of a video-clip featuring Saudi cleric Omar Al-Sweilem, which was posted on the Internet. The video quality is low in the original. |