என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன். சங்கீதம் 2:8


என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன். சங்கீதம் 2:8

Look Beyond The Package

ஒரு இளைஞன் தனது கல்லூரி பட்ட படிப்பை முடிக்கும் சமயத்தில் இருந்தான். அவன் பல மாதங்களாக ஒரு அழகிய sports கார் வாங்க வேண்டும் என்றும், அதை அவன் விரும்பும் dealer-இன் showroom-இலிருந்து வாங்க வேண்டும் என்றும் விரும்பினான். மேலும் அதை வாங்கி தர கூடிய பொருளாதார நிலைமை தனது தந்தைக்கு உண்டு என்பதையும் அறிந்து தனது விருப்பத்தை தந்தையிடம் சொன்னான்.

பட்டமளிக்கும் நாள் நெருங்கி கொண்டிருந்த வேளையில், அவன் தன் தந்தை தனக்காக வாங்க போகிற காருக்காக காத்துக்கொண்டு இருந்தான்.

இறுதியாக, பட்டமளிக்கும் நாளும் வந்தது. அன்று காலையில் மகனை தனது அறைக்கு தந்தை அழைத்தார். தந்தை அவனிடம் "இப்படி ஒரு நல்ல மகனை தேவன் எனக்கு தந்தபடியினால் நான் பெருமிதம் கொள்கிறேன்" என்றும், "நான் உன்னை எவ்வளவு நேசிக்கின்றேன் என்று தெரியுமா?" என்றும் சொன்னார். பின்னர் அவர் அவன் கையில் அழகான மூடப்பட்ட ஒரு சிறு பரிசு பெட்டியை கொடுத்தார்.

மிகவும் ஆர்வமாக, சற்று ஏமாற்றம் அடைந்தவனாக அந்த பெட்டியைத் திறந்தான். அதற்குள் அழகான தோல் கவரினால் மூடப்பட்ட ஒரு வேதாகமம்(lovely, leather-bound Bible) இருந்தது. அதின் மேலே அவனின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பரிசு பொருளாக இருந்தது.

இவற்றை பார்த்தவுடன் கோபமடைந்தவனாக "நீங்க வைத்துள்ள பல கோடி சொத்துக்களினால் இந்த Bible-ஐ மட்டும் தான் உங்களால் எனக்கு வாங்கி தர முடிந்ததா?" என்று சத்தமிட்டு கத்தி தனது தந்தையுடன் சண்டை போட்டான். அவர் வாங்கி தந்த Bible-ளும் வேண்டாம் அவரும் வேண்டாம் என்று சொல்லி கோபமடைந்தவனாக வீட்டை விட்டு வெளியேறினான்.

பல வருடங்கள் கழிந்தது. அவன் தனது business-இல் வெற்றியடைந்தான். அவன் அழகான வீட்டில், அருமையான குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அப்போது அவன் தனது தந்தை மிகவும் வயதாகி இருப்பார், அவரை விட்டு வந்தது என்னுடைய தவறு தான், அவரை எப்படியாகிலும் சென்று பார்க்க வேண்டும் என்று உணர்ந்தான். அவனுடைய பட்டமளிக்கும் நாளுக்கு பின்பு அவரை அவன் பார்க்கவே இல்லை.

அவன் ஊருக்கு சென்று அவரை பார்ப்பதற்கு தேவையான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த போது, அவனுக்கு ஒரு telegram வந்தது. அதில் அவன் தந்தை மரித்து விட்டார் என்றும், அவருடைய எல்லா சொத்துக்களையும் அவனுடைய பெயரில் எழுதி வைத்துவிட்டார் என்றும், அவன் உடனடியாக அங்கு வர வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அவனது பொறுப்பில் கொள்ள வேண்டும் என்றும் எழுதி இருந்தது.

அவன் தந்தையின் வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஒரு விதமான சோகமும், மனஸ்தாபமும் அவன் உள்ளத்தை நிரப்பினது. அவன் தன் தந்தையின் அறைக்குள் சென்று, அவரது முக்கியமான பொருள்களுக்கு இடையே தேடிய போது அவனுக்கு பரிசு பொருளாக தரப்பட்ட அந்த Bible இன்னும் புதிதாகவே காணப்பட்டது. இதை தானே அவன் வேண்டாம் என்று உதறி வீட்டை விட்டு வெளியேறினான். ஆனால் இப்போதோ அவன் அதை கண்ணீரோடு திறந்தான். ஒவ்வொரு பக்கங்களாக திருப்பினான். அதிலே அவன் தந்தை ஒரு வசனத்தை மிக கவனமாக கோடிட்டு இருந்ததை கவனித்தான். அந்த வசனம் மத்தேயு 7:11 "ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?".

அவன் அந்த வசனத்தை வாசித்து கொண்டிருந்த போது ஒரு கார் சாவி அந்த Bible-இன் பின்புற அட்டையில் இருந்து கீழே விழுந்தது. கீழே விழுந்த சாவியை எடுத்து பார்த்தான். சாவியுடன் இணைந்திருந்த tag-இல் இருந்த dealer-இன் பெயரை பார்த்தான். அந்த dealer-இன் sports காரை தான் அவன் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

மேலும் அந்த tag-இன் மேலிருந்த தேதியை பார்த்து அதிர்ந்தான். அந்த தேதி அவன் பட்டம் வாங்கின அதே நாளாக இருந்தது. அந்த tag-இல் வார்த்தையாக பின்வருவன எழுதப்பட்டிருந்தது: "முழுவதுமாக பணம் செலுத்தப்பட்டது"("PAID IN FULL")

இதே போல நாமும் பல நேரங்களில் தேவனுடைய ஆசீர்வாதங்களை இழந்திருக்கிறோம். காரணம் என்ன? நாம் எதிர்பார்க்கின்றது போல அந்த package இல்லாமல் இருப்பதினால் தானே.

Do not spoil what you have by desiring what you have not; but remember that what you now have was once among the things you only hoped for…

IF YOUR GIFT IS NOT PACKED THE WAY YOU WANT IT, IT'S BECAUSE IT IS BETTER PACKED THAT WAY! ALWAYS APPRECIATE LITTLE THINGS; THEY USUALLY LEAD YOU TO ATTACHMENTS!

(Source: Forwarded mail in English. Here i translated it into Tamil.)

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s