புரபஸரும்,மாணவர்களும்.


புரபஸரும்,மாணவர்களும்.

கல்லூரி ஒன்றில் புரபஸர் பிராக்டிக்கல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.அவர் முன் இருந்த ஒரு டேபிளின் மீது ஒரு கண்ணாடி கிளாஸ் இருந்தது.அதில் கருப்பாக ஏதோ ஒன்று இருந்தது.மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக அமர்ந்திருந்தனர்.

புரபஸர் பேச ஆரம்பித்தார்”ஹலோ டியர்ஸ் எப்படி இருக்கிறீர்கள்.இன்றைக்கு நாம் ஒரு வித்தியயசமான பிராக்டிக்கல்ஸ் செய்யப் போகிறோம்.நம்முடைய சகிப்புத்தன்மை மட்டும் அல்ல நம்முடைய கூர்மையான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று இன்றைக்கு கற்றுக்கொள்ளப் போகிறோம்.

மாணவர்கள் உற்சாகமாக கோரசாக “ஓகே” சார்.

புரபஸர் மீண்டும்”டியர் ஸ்டூடண்ட் இந்த கிளாசில் சாக்கடை நீர் உள்ளது.இதை நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.அதன் பின் இந்த கிளாசை உங்கள் அனைவரிடமும் தருவேன்.நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே செய்ய வேண்டும்.சரியா?

கிளாசை எடுத்து மாணவர்கள் அனைவருக்கும் முன்பாக புரபசர் தன் விரலை அந்த கிளாசில் உள்ள நீரில் முக்கி எடுத்து தன் நாக்கில் வைத்தார்.அனைத்து மாண்வர்களும் முகம் சுளித்துக்கொண்டனர்.கிளாஸ் மாணவர்களிடம் வந்தது.

அனைத்து மாணவர்களும் புரபஸர் என்ன செய்தாரோ அதை அப்படியே முகம் சுளித்துக்கொண்டு செய்தனர்.இரண்டு மூன்று மாண்வர்கள் வாந்தி எடுக்கவும் செய்தனர்.

மாணவர் தலைவன் எழந்தான் சார் நீங்கள் இப்படி செய்தது நியாயமில்லை.எப்படி இந்த சாக்கடை நீரை நாக்கில் வைக்க சொல்லலாம் என்று கேட்டான்.

உடனே புரபஸர் எழுந்து அந்த மாணவனை அமரச் சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார்”மை டியர் ஸ்டூடண்ட் உங்களை யார் சாக்கடை நீரை நாக்கில் வைக்க சொன்னது.நான் செய்வது போல் செய்ய சொன்னேன் அவ்வளவுதான்.நான் சாக்கடை நீரை நாக்கில் வைக்கும் படி உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அறிவில் குறைவுள்ளவனா?நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் கூர்ந்து கவனிக்கவில்லை என்பது இதில் இருந்து புரிந்து கொண்டேன்.நான் என்ன செய்தேன் தெரியுமா?கிளாசில் இருந்த தண்ணீரை என் விரலால் நனைத்த்து உண்மைதான்.ஆனால் என் நாக்கில் வைத்த விரல் அந்த நீரில் நனைத்த விரலை இல்லை.மற்றொரு விரலை”என்று கூறினார்.

மாணவர்கள் அனைவரும் வாய் அடைத்து போனார்கள்.

http://www.aanthaiyaar.blogspot.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under புரபஸரும், மாணவர்களும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s