உலக வங்கி – இந்தியா – அயல் உறவு-உலகப் பார்வை


உலகப் பார்வை

உலக வங்கி – இந்தியா – அயல் உறவு

– செ. முகிலன்

அமெரிக்காவின் நோக்கம்
வெனிசுலா குடியரசுத் தலைவர் ஹியூகோ சாவேஸ். அமெரிக்கா கடந்த காலம் என்ற ஒன்றே நமக்கு இல்லாதது போல் ஆக்கும் நோக்கத்துடன் இளைஞர்கள், குழந்தைகள் மனங்களை ஆக்கிரமிக்க முயல்கிறது. நம் மக்களை வருங்காலம் என்ற ஒன்றே இல்லாதாதவர்களாக ஆக்கிவிடத் தூண்டுகிறது என்று கூறியுள்ளார்.
உலக மயம்
எல்லை வகுத்துக் கொள்கிற உரிமையை நம் அரசிடம் இருந்து பறிப்பதற்காகவே அது எல்லைகளை உடைக்கிறது. தேசக்கோடுகள் என்பதும் ஆளுமைக்குரிய பகுதி என்பதும் பெயருக்குத்தான் எல்லா தேசங்களையும் பன்னாட்டு மூலதனங்களின் குசயஉளைந ஆக மாற்ற முயற்சிக்கிறது என்பதே உண்மை..
வளர்ச்சி
சென்செக்ஸ் புள்ளிகளையும் அன்னியச் செலாவணி இருப்பையும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும் (ஜி.டி.பி.) உலக வங்கி தரும் புள்ளி விவரங்களையும் கதைக்காமல் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கைகளையும் ஆட்சி செய்பவர்-கள் படிக்க வேண்டும். நியூயார்க் நகரக் குப்பை-களையும், மருத்துவமனைக் கழிவுகளையும் சரக்குப் பெட்டகங்களில் போட்டு இந்தியாவுக்கு அனுப்பியுள்-ளார்-கள். இது நாம் வளர அமெரிக்கா அளிக்கும் உதவியாகுமா?
உலக வங்கி பன்னாட்டு நிதியத்தின் கூட்டத்தில் நிதியமைச்சர் கிராமங்களில் விவசாயத்தை நம்பி 60 கோடி மக்கள். வளர்ச்சி விகிதம் 4 சதவிகிதம் குறைவே. பன்னாட்டு நிதியம் வளர்ந்த நாடுகளின் தலைமையில் மட்டுமே தொடர்வது சரியல்ல என்று விளக்கமளித்துள்ளார்.
அணிசாரா இயக்கம்
எகிப்து, இந்தோனேசியா, யுகோஸ்-லாவி-யாவுடன் இணைந்து இந்தியா ஏற்படுத்தியது. இன்று 118 நாடுகள் அடங்கியது அணிசாரா இயக்கம். காமன்வெல்த் மாநாட்டில் அத்தனை சிறிய நாடுகளும் இந்திய வேட்பாளரை ஆதரித்ததன் மூலம் அணி சாரா இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்து இந்தியா இழந்த மரியாதையை பெற வேண்டும், ஈராக்கை நிர்மூலமாக்கிய பின், ஈரானையும் நிர்பந்தப்படுத்த, அமெரிக்காவுக்கு இந்தியாவும் அடிபணிந்தது. ஈரான் மீதான குற்றச்சாட்டு பொய் என்றாகிவிட்ட பின்பாவது நாம் சுயசிந்தனை பெற்று அணிசாரா அயல்துறை கொள்கையை மீட்டு எடுக்க வேண்டும். என் வீட்டிற்குள் எல்லா நடுகளின் பண்பாடும் இயல்பாய் பரவ வேணடும், எதுவும் என்னை அடிமைகொள்ள அனுமதியேன் . – காந்தி
மகாத்மாவும், பெரியாரும் கட்சியையோ, பணத்தையோ கொண்டு மாற்றங்கள் நிகழ்த்த-வில்லை. மக்களை திரட்டியே மாற்றங்கள் கொண்டு வந்தார்கள்.
அயல் உறவு
அய்.நா. அவையின் அறிவுக்கு எட்டிய இலங்கை மனித உரிமை மீறல்கள் தொப்புள் கொடி உறவான இந்தியாவுக்கு எட்டவில்லை. சிங்கள அரசு எந்த நேரத்திலும் நமக்கு நட்பு நாடாக இருந்ததில்லை. இந்திராகாந்தியிடம் இருந்த தைரியம் இன்று இல்லை. பாகிஸ்தானில் நெருக்கடி நிலை. இந்தியா வருந்தியது. ஆனால் எதிர்க்கவில்லை. மியான்மரில் புத்த பிக்குகளை ராணுவ அரசு கொன்று குவித்தபோது, அமைதி திரும்ப அனைவரும் முயல்க என்றதே தவிர, கண்டனமோ, போராட்டத்திற்கு ஆதரவோ தெரிவிக்கவில்லை. அமெரிக்காவே தலாய்லா-மாவை கவுரவிக்கும் போது அதில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
இலங்கைப் பிரச்சினையிலும் இதுவரை எந்த வித திடமான வெளிப்படையான முயற்சியும் எடுக்கவில்லை. வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடியவில்லை. தென் ஆசியாவில் மக்கள் தொகையிலும் பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் நாம்தான் வல்லரசு என்று இந்தியாவிற்குத் தோணுவதே இல்லை.
அன்னிய செலாவணி
1990–91-ல் இறக்குமதி 50,086 கோடி, ஏற்றுமதி 3,31,152 கோடி, பற்றாக்குறை ரூ. 16,934 கோடி, 2005-06-ல் பற்றாக்குறை ரூ. 2,29,000 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 16 ஆண்டு-களில் இதுவரை ஏற்றுமதியை கூடுதலாக்கி எந்த ஆண்டும் நேர் செய்ததில்லை. ஆனால், அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீடு, புதிய தொழிலில் போட்ட மூலதனத்தை விட உள்நாட்டு தொழிலை கபளீகரம் செய்ததே அதிகமாகும். அதைவிட அதிகம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் போட்டது பல மடங்கு. 2007 மார்ச்சி-ல் 5200 கோடி டாலராக பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு விசுவரூபம் எடுத்துள்ளது. இதற்காக நாம் கொடுத்த விலை ஏராளம். அன்னிய மூலதன வரவுக்கு கட்டுப்பாடு, நிபந்தனை போட்டது யார் என்று எதுவும் தேவையில்லை. லாபத்திற்கு வரி இல்லை பங்கு வர்த்தகம் சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும் இருக்கிறது -ப. சிதம்பரம். இந்த மாயாபஜார் சூதாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர அரசு சிந்திக்க மறுக்கிறது.
உலகவங்கி, பன்னாட்டு நிதியத்தின் கட்டளைகள்
1)நியாய விலைக் கடைகள் மூடப்பட-வேண்டும்.
2) உணவு தானியங்களை மத்திய மாநில அரசுகள் கொள்முதல் செய்யவேண்டாம்.
3) உணவுத் தேவை ஏற்படின் உலக டெண்டர் மூலம் வாங்க வேண்டும்.
4) தானியக் கையிருப்பு இனி வேண்டாம்.
5) பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவிட வேண்டும்.
6) நியாய விலைக் கடைகளை மூட முடியாத நிலையில் அந்த பொருட்களுக்கான மானியத்தை வெட்டவேண்டும்.
7). தொலைத்தொடர்பு துறையில் 74 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்கவேண்டும்.
8) தேசிய வங்கிகள் 67 சதவிகிதப் பங்குகளை விற்கவேண்டும். மானியம் வேண்டியவர்களுக்கு சென்று சேர்வதில்லை. அதனால் மானியத்தை நிறுத்தவேண்டும் என்கிறார் அன்புள்ளம் கொண்ட பிரதமர்.
பாதுகாப்புக் கட்டமைப்பு உடன்பாடு
இப்படி ஒரு ஒப்பந்தம் அமெரிக்காவுடன் கையெழுத்தாகியுள்ளது. இனி இந்தியா அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாகிவிடும்.
1) ஈராக் பிரச்சினையில் மக்களின் எதிர்ப்பை தாங்கமாட்டாமல் இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் பதவி விலகினார்.
2) இந்தியத் துறைமுகங்கள், விமானத் தளங்கள் அமெரிக்காவுக்கு பயன்படும் படைகள் வந்து தங்கும், எண்ணெய் நிரப்பிக் கொள்ளும், சூட்டைத் தணிக்க பெண்கள் விருந்து கேட்டுப் பெறும்.
3) அமெரிக்கா வியட்நாம் யுத்தத்திலும் ஆப்கான் மீது குண்டு போடவும் ஜப்பான் தளங்களை பயன்படுத்தியது. இந்த ரத்த வெறியை மக்கள் எதிர்த்ததால் பதவி விலகினார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.
4) ஈராக்கில் இருந்து பிரிட்டிஷ் படைகள் வெளியேறின. தென்கொரியப் படைகள் வெளியேறுகின்றன.
5) இனி அமெரிக்காவின் சண்டியர் தனத்திற்கு இந்தியா படைகளை அனுப்பவேண்டும். அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுடன்.
அணுசக்தி ஒப்பந்தம்
இனி நடுநிலை அணிசேரா என்று இந்தியா வாய் வேதாந்தம் பேசக் கூடாது -கண்ட லிசாரைஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர். அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிக மோசனவர் புஷ் –அமெரிக்க மக்கள். புஷ் இருக்கும் வரை எந்த உடன்பாடும் கூடாது. ஆஸ்திரேலிய மக்கள் புஷ் ஒரு சைத்தான் -போப் ஆண்டவர் இந்தியாமீது பரிவும் அக்கறையும் கொண்டவர் இது நமது பிரதமர் நட்ட நடுநிசியில் 60 ஆண்டு மரபை உடைத்து புஷ்ஷை விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர்.
அமெரிக்கா அதன் தீவில் அணு உலை விபத்தால் ஏற்பட்ட காரியத்தை தடுக்க 7 ஆண்டுகளாக போராடி 100 கோடி டாலர் செலவு செய்துள்ளது. கான்கிரீட் கலவையை மீறியும் கதிரியக்கம் பரவும் என்பது உண்மை என்று ஆகியுள்ளது.
ஜப்பானில் ஓர் அணு உலை உடைந்தது. கதிரியக்கம் கடலுக்குள் திருப்பிவிடப்பட்டது. பிரிட்டன் ஒவ்வொரு அணு உலையாக இழுத்து மூடுகிறது. நியூயார்க் அருகில் லாங்அய்லாண்டு தீவில் அமைத்த அணு உலையை நியூயார்க் மக்களின் எதிர்ப்பால் இன்றுவரை இயக்கவில். ஒரு அணு உலையின் ஆயுட்காலம் 40 ஆண்டு ஆனால், உயிரினங்களை அழிக்கும், ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் நீடிக்கும். கதிர் இயக்கக் கழிவுகளை எங்கே கொட்டுவது?
50 ஆண்டுக்கால இந்திய அணு சக்தி சரித்திரத்தை புரட்டிப்போட்டு விடும்இந்த ஒப்பந்தம் -ஏ.என். பிரசாத் முன்னாள் தலைவர் பாபா அணுசக்தி ஆய்வுமையம்.
இந்தியாவில் அபரிமிதமாக கிடைக்கக் கூடிய தோரியத்தை பயன்படுத்தி அணுமின் உற்பத்தி செய்து தன்னிறைவை எட்ட முடியும் -அப்துல்கலாம் இந்த விவகாரத்தில் இப்பொழுதே அமெரிக்கா மிரட்டல் விடுவது இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படாதா?
ரஷ்யா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடிமை ஒப்பந்தம் இல்லாமல் 400 கோடி ரூபாய் அணுசக்தி பொருட்களைத்தரத் தயாராக இருக்கின்றன. தொழில் நுட்பத்தைத் தர பிரான்ஸ் தயார் என்கிறது.
மீண்டும் ரஷ்யாவுடன் நாம் கூட்டு சேருவதைக் தடுப்பது, பொருளாதாரப் போட்டியாக இருக்கும் சீனாவை எதிர்கொள்வது குடியரசு கட்சியை வீழ்ச்சியிலிருந்து மீட்பது, இந்த ஒப்பந்தத்தால் சாதித்து விட்டதாக விளம்பரப்படுத்திக் கொள்வது – இதுவே புஷ்ஷின் நோக்கம். உலக வங்கி
டில்லியில் செப்டம்பர் மாதம் உலகப் பட்டிமன்றம் நடத்தியது. மக்கள் தீர்ப்பாயம் உலக வங்கிக் கடனால் லாபம் யாருக்கு? தீர்ப்பு – லாபம் உலக வங்கிக்குத்தான். பாலம், சாலை, வாய்க்கால் என்ற 60 பணிகளுக்கு கடனளிக்கிறது.
1) உலக வங்கி வளர்ச்சியடைகிறது. 2) இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வளர்கின்றன.
3) அரசியல்வாதிகள், மேல்தட்டு அதிகாரிகள் வளர்கிறார்கள்.
4) ஏழைகளுக்காக என்று ஏழ்மையைக் காட்டி கடன் பெறப்படுகிறது.
5) 2001-07 வரை 1.37,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்
6) கடற்கரைப் பகுதிகளில் மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர்.
7) தண்ணீர் உரிமை (டில்லி, கர்நாடகம்) தனியார் வசம் ஆகிவிட்டது.
8) உலக வங்கிக் கடனால் கோடியை ஒருவரும், கோமணத்தைக் கோடி மக்களும் பயனடைகிறார்கள்.
9) எல்லாம் வளர்ச்சிதான் என்று பேசாமல் யார் யார் வளர்ந்துள்ளார்கள் என்று சிந்திக்கத் தெரிந்தவர்கள் யோசித்தால் போதும்.
10) உலக வங்கியில் கடன்பெற்ற மெக்சிகோ, சிலி, தென்கிழக்கு ஆசிய நாடுகள் பாடம் கற்று இன்று மீள முயற்சிக்கின்றன.
11) உலக வங்கிக் கடனில் அகப்பட்டு மீள முடியாத ஆப்பிரிக்க நாடுகள் இன்று சீன உதவியை நாடியுள்ளன.
12) தமிழகம் ஏரி, குளம் தூர்வார 2000 கோடி வாங்கியதாக பெருமைப்படுகிறார் சிதம்பரம்
14) லாலு பிரசாத்திடம் உனக்கு எவ்வளவு வேண்டும் என்று உலக வங்கி கேட்க, உனது கடனும் வேண்டாம், தூக்குக் கயிறும் வேண்டாம் என்றார் லாலு.
விவசாயம்
ரஷியப் பொருளாதாரச் சீர் குலைவுக்குக் காரணம் விவசாயத்தைப் புறக்கணித்ததுதான். சீன அரசு வேளாண் வளர்ச்சியை பெரிய அளவில் முன்னேற்றிவிட்ட பின்பே தொழில் வளர்ச்சி, அன்னிய முதலீடு என்று முக்கியப்-படுத்துகின்றனர். அமெரிக்கா தொழில், விஞ்ஞான வளர்ச்சியுடன் விவசாய உற்பத்தியும் குறைந்துவிடாமல் கவனமாக இருக்கிறது. இந்தியாவின் பலம் விவசாயிகளிடமும் வேளாண் சார்ந்த தொழில் வளர்ச்சியிலும்தான் இருக்கிறது – அப்துல் கலாம்.
விளைபொருள்களுக்கு உள்ளூரிலே விலை இல்லை. நல்ல விலை பெற்றுத்தராத அரசு அந்நியர்களை அழைத்துக் கடை போட கூறுகிறது. விளைபொருள் விலை உயரும்போது அதிக விலையில் இறக்குமதி செய்து விலைகளை வீழ்த்தி, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்கிறார் நிதியமைச்சர்.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s