Daily Archives: ஏப்ரல் 12, 2008

தினமலர் பத்திரிக்கையின் ஆதிக்க வெறி

“டிக்’ அதிகாரி விடுப்பில் சென்றார்: அரசு அலுவலகத்தில் அழகருக்கு தடைநீங்கியது

மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையத்தில்”டிக்’ கள்ளழகருக்கு மண்டகப்படி வைக்க மறுத்த அதிகாரி விடுப்பில் சென்றதால் வழக்கம்போல இந்த ஆண்டும் மண்டகப்படி நடைபெற உள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர்கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பாடாகி ஒவ்வொரு சமுதாய, அரசு அலுவலகங்கள், மாவட்ட உயரதிகாரிகளின் இல்லங்கள் என பல இடங்களில் தங்கிச் செல்வார். மதுரை அழகர்கோயில் ரோட்டில் தமிழ்நாடு ஓட்டல் அருகேயுள்ள மாவட்ட தொழில் மையத்திலும் “மண்டகப்படியாகி’ தங்கிச் செல்வது வழக்கம். அன்னதானமும் நடைபெறும். இங்கு ஓய்வு பெற்ற அலுவலர்கள், மாறுதல் பெற்ற அலுவலர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தொகை வசூலித்து இந்நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுமேலாளர் ஆண்ட்ரூஸ் பொன்ராஜ் வைரமணி, “அரசு அலுவலகத்திற்குள் பூஜை, அன்னதானம் நடத்தக் கூடாது. வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.(சரியாகத்தான் செய்து இருக்கிறார். இதேபோல் மதுரை புதூரில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம் நடத்தும் போது அரசாங்க இடத்தை கேட்டால் கொடுப்பார்களா?) இதனால் அதிகாரிகள், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். “28 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கத்துக்கு இந்த ஆண்டு தடைவிதிக்கப்படுகிறதே’ என மனம் புழுங்கினர். மண்டகப்படிக்காக செலுத்த வேண்டிய ரூ. 6 ஆயிரம் செலுத்தி இந்த ஆண்டு நடத்தாவிடில், வரும்ஆண்டுகளில் மண்டகப்படிக்கு புதிதாக அனுமதி பெற ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்ய வேண்டும், வாய்ப்பு கிடைப்பதும் கஷ்டம் என்பதால் ஊழியர்களிடையே சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து கலெக்டர் ஜவஹரிடமும் தெரிவிக்கப்பட்டது. அதிகாரி வைரமணியிடம் கேட்டபோது, “முன்னாள் அதிகாரிகள் சிலர் இங்கு மாற்றலாகி வர முயற்சித்து பிரச்னையை பெரிதாக்குகின்றனர். இந்நிகழ்ச்சி அரசு அலுவலக செலவில் நடைபெறுவதில்லை. ஓய்வு பெற்ற ஊழியர்கள், அலுவலர்கள் வசூல் செய்து நடத்துவதால் வெளியே வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளேன். இதுகுறித்து கலெக்டரிடமும் விளக்கம் தெரிவித்து விட்டேன்’ என்றார். இந்நிலையில் பொதுமேலாளர் வைரமணியை விடுப்பில் செல்லும்படி சென்னையில் உள்ள இயக்குனரகம் உத்தரவிட்டதால், அவர் 2 மாத விடுப்பில் சென்றுவிட்டார். தற்போது பொதுமேலாளராக ராமநாதபுரம் மாவட்ட பொதுமேலாளர் அரங்கண்ணல் கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த ஆண்டு தடையின்றி கள்ளழகர் அங்கு தங்கிச் செல்ல உள்ளார். காலங்காலமாக நடந்து வரும் பொதுவான கலாச்சார நிகழ்ச்சி அதிகாரியால் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது வேதனைக்குரியதே. (தினமலர் தனக்கு பிடிக்காத எந்த அதிகாரியும் விட்டுவைக்காது, சமீபத்திய உதாரணம் காமராஜர் பல்கலைக்கழக துனைவேந்தர் திரு.மருதமுத்து)

நன்றி: தினமலர்

முதலில் எல்லா அரசாங்க அலுவலகங்களில் இருந்தும் கடவுள் என்று சொல்லப்படுகிறன்றவர்களின் படங்கள் அகற்றப்படவேண்டும். மேலும் பண்டிகையை சாக்காகவைத்து பணம் வசூலித்து கொண்டுவதை தவிர்க்க வேண்டும், அதிலும் குறிப்பாக இந்த ஆயுபூஜையை சாக்க வைத்து இவர்கள் எல்லாரிடமும் பணம் வசூலித்து அதை [b]டாஸ்மார்கில் கொடுக்கும் இவர்கள் எல்லாம் பக்தர்களா? கொடுமை!!! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை சொன்னால் மட்டும் போதாது செயலிலும் காண்பிக்க வேண்டும்

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13589#13589

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கள்ளழகர், தினமலர், பக்தர்கள், மதுரை

தர்மபுரியில் விஜயகாந்த் பேச்சு ஒகேனக்கல் திட்டத்துக்காக தேமுதிக தொடர்ந்து போராடும்

தர்மபுரி, ஏப். 11: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தர்மபுரியில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் அவர் பேசியதாவது:
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு கர்நாடக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது ஏமாற்றத்தை அளிக்கிறது. உடனடியாக மத்திய-மாநில அரசுகள் கலந்தாலோசித்து, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். ஜூன் மாதம் வரை பொறுத்திருப்போம், அதன் பிறகும் இத்திட்டம் தொடங்கப்படவில்லையெனில் தேமுதிக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under தர்மபுரியில் விஜயகா

குழந்தை பெற்றெடுத்தார் இரண்டரை அடி உயர பெண்

குழந்தை பெற்றெடுத்தார் இரண்டரை அடி உயர பெண்

போலியோ பாதிக்கப்பட்டவர் கணவர்

போபால், ஏப்.11: இரண்டரை அடி உயரமுள்ள பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ். போலியோ நோய் தாக்கியதால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர். இதனால், அவரால் நடந்து செல்ல முடியாது. தவழ்ந்துதான் செல்வார். அவரது மனைவி மீனா (18), உயரம் குறைவானவர். அவரது உயரமே இரண்டரை அடிதான். கணவன், மனைவி இருவராலும் வேலைக்கு போக முடியாது என்பதால், அவர்கள் மீனாவின் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்கள். மீனாவின் பெற்றோர் கூலி வேலை செய்து மகளையும், மருமகனையும் காப்பாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மீனா கர்ப்பம் அடைந்தார். மிகவும் குள்ளமான பெண் என்பதால், அவருக்கு பிரசவம் பார்க்க உள்ளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மறுத்துவிட்டனர். இதனால், சிந்த்வாராவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மீனா சென்றார். ஒவ்வொரு மாதமும் டாக்டர்கள் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் கொடுத்தனர்.
கர்ப்பபையில் குழந்தை வளர வளர மீனாவுக்கு இனம்புரியாத பயமும் அதிகரித்தது. தனக்கு பிறக்கும் குழந்தையும் தன்னைப் போல உயரம் குறைவானதாக இருக்குமோ என்று மீனா பயந்தார். ஆனால், அவரது கர்ப்பபையில் வளரும் குழந்தையின் உயரம், சாதாரண குழந்தையின் உயரத்தை போலவே இருப்பதாக ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினர். 6 மாதத்துக்கு மேல், கருவில் இருந்த குழந்தையை சுமக்க மீனா சிரமப்பட்டார்.
ஏப்ரல் மாத இறுதியில் மீனாவுக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி மருத்துவ சோதனைக்காக மீனா சிந்த்வாரா அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது, கருவில் இருந்த குழந்தையின் எடை 2 கிலோவை தாண்டியதை டாக்டர்கள் கண்டறிந்தனர். பிரசவத்துக்கு இன்னும் 3 வாரங்கள் இருக்கும் நிலையில் அதுவரை குழந்தையை தாங்கக் கூடிய நிலையில் மீனாவின் உடல்நிலை நிலை இல்லை. இதனால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்ற முடிவு செய்தனர். இதன்படி, சிசேரியன் அறுவை சிகிச்சையில் மீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். அந்த குழந்தைக்கு மீனா தாய் பால் ஊட்டுகிறார். இன்னும் சில நாட்களில் மீனாவும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இரண்டரை அடி உயரம் உள்ள குள்ளமான பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது சிந்த்வாரா மருத்துவமனையில் இதுதான் முதல் முறை.

http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under குழந்தை பெற்றெடுத்த

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு

27% இடஒதுக்கீடு செல்லும்

புதுடெல்லி, ஏப்.11: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தவர்களுக்கும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பையடுத்து, இந்த கல்வியாண்டிலேயே 27 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.
ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் உதவி பெறும் எல்லா உயர் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
Ôஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்தால் சமுதாயத்தில் பிளவு ஏற்படும். 1931ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வதை ஏற்க முடியாது. இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்கக் கூடாதுÕ என்று அவர்கள் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த சட்டத்துக்கு 2007 மார்ச் 29ல் இடைக்கால தடை விதித்தது. இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
5 நீதிபதிகள் பெஞ்ச்: இந்தவழக்கில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னையின் முக்கியத்துவம் கருதி வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே.தாக்கூர், ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோர் இந்த பெஞ்சில் இடம் பெற்றனர். ஓராண்டாக விசாரணை நடந்தது. இந்த பரபரப்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:
? பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டு வந்த சட்டம் செல்லும். இது அரசியல் சட்டத்தின் அடிப்படையை மீறியதாக இல்லை.
? சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது சரிதான்.
? தனியார் மற்றும் அரசு உதவி பெறாத பிற கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிப்பதை பரிசீலிக்கலாம் என்று 4 நீதிபதிகள் கூறியுள்ளனர். இவ்வாறு தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிடுவது அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது என்று நீதிபதி தல்வீர் பண்டாரி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை நீங்கிவிட்டது. 2008-09ம் கல்வியாண்டில் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், உள்ளிட்ட எல்லா கல்வி நிலையங்களிலும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம்.
இப்போது உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்.சி.) 15 சதவீதமும் பழங்குடியினருக்கு (எஸ்.டி.) பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இனிமேல் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இதன்மூலம் மொத்தம் 49.5 சதவீத இடங்கள் இந்த இடஒதுக்கீடுகள் மூலம் நிரப்பப்படும்.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வரதட்சணை தராததால் இந்து மனைவியின் கண்களை தோண்டிய இந்து கணவன்

வரதட்சணை தராததால் மனைவியின் கண்களை தோண்டிய கணவன்

நகரி, ஏப். 12-

ஒரிசா மாநிலம் ரூர்கே லாவை அடுத்த கோபிநாத்பூரை சேர்ந்தவர் பிருந்தாவன் இவரது மனைவி துளசி.

திருமணத்தின் போது வரதட்சணையாக 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் தருவதாக துளசியின் பெற்றோர் உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் 15 பவுன் நகைதான் மகளுக்கு போட முடிந்தது.

இதையறிந்ததும் பிருந் தாவன் ஆவேசமானார். “மீதி நகையை ஒரு வாரத்தில் கொண்டு வரவேண்டும். இல்லை என்றால் உன்னை உயிருடன் கொளுத்தி விடு வேன்” என்று மிரட்டினார்.

ஆனாலும் துளசியின் பெற்றோரால் ஒரு வாரத்தில் 5 பவுன் நகை கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று பிருந்தாவன் துளசியை வரதட்சணை கேட்டு அடித்து உதைத்தார். பின்னர் துளசியை கட்டி வைத்து கத்தியால் அவரது 2 கண்களையும் தோண்டி எடுத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். அங்கு ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் பிருந்தாவன் தப்பி ஓடினார்.

கண்களை இழந்த துளசி தற்போது அங்குள்ள ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி போனோரு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிருந்தாவனை தேடி வருகிறார்கள். வரதட் சணைக்காக கணவன், மனைவியின் கண்களை தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://www.maalaimalar.com/

2 பின்னூட்டங்கள்

Filed under இந்து, ஒரிசா மாநிலம், துளசி, ரூர்கேலா, வரதட்சணை

சந்தனத்தில் பட்டுப்புடவை தயாரித்த தம்பதி: 3 ஆண்டுவரை கம கமக்கும்

நகரி, ஏப். 12-

ஆந்திர மாநிலம் அனந்தா புரம் மாவட்டம் தர்மாவரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி உஷாராணி. இருவரும் பேஷன் டிசைனிங் படித்து விட்டு சொந்தமாக பட்டுப்புடவை தயாரித்து வருகிறார்கள்.

இவர்களது கற்பனையில் உருவான பட்டுப்புடவை டிசைன்களுக்கு நாடு முழு வதிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும வகையில் இருவரும் சந்தன பட்டுப் புடவை தயாரிக்க திட்ட மிட்டனர்.

இதன்படி அவர்கள் சந்தன வில்லைகளை கல் நகை போல் டிசைன் செய்து பட்டுப்புடவையில் பொருத்தினர்.

சுமார் 400 கிராம் சந்த னத்தை அந்த புடவைக்கு பயன்படுத்தினர். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த சந்தன புடவையை தர்மாவரம் பெண் கள் திரண்டு வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.

இதுபற்றி பேஷன் டிசைனர் உஷாராணி கூறும் போது, சந்தன பட்டுப்புடவையை 7 பேர் சேர்ந்து 15 நாட்களில் தயாரித்தோம்.

இப்புடவையில் 3 ஆண்டு வரை இந்தன வாசனை வீசும்.

இதை உடுத்தும் பெண் கள் வாசனை திரவியம் பயன்படுத்த தேவை இல்லை. இந்த சந்தன வாசனையே போதும். சந்தன பட்டுப் புடவை தயாரிக்க நிறைய செலவாகிறது. இப்புடவைக்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்”.

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=261147

பின்னூட்டமொன்றை இடுக

Filed under 3 ஆண்டு, சந்தனத்தில், தம்பதி, பட்டுப்புடவை

அரசு மானியத்தில் ஹஜ் செய்வது குரானுக்கு எதிரானது?

ஹஜ் மானியம் வேண்டாம் பிரதமரிடம் எம்.பி.க்கள் மனு

புதுடெல்லி, ஏப். 11-
ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கும் மானிய தொகையை ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்களவை துணை தலைவர் ரகுமான் கான் தலைமையில் எம்.பிக்கள் குழு ஒன்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மனு கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஹஜ் சட்டத்தை மாற்றியமைக்கும் படி 5 மாநில ஹஜ் கமிட்டிகளும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.
இஸ்லாமியர்களின் மத கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் ஹஜ்புனித யாத்திரைக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் சுமார் 300 கோடி ரூபாய் செலவழிக்கிறது. இதற்கு சங்பரிவார் உள்ளிட்ட ஒரு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மதசார்பற்ற அரசு என்று கூறிக்கொண்டு குறிப்பிட்ட ஒரு மதத்துக்காக அரசு பணத்தை செலவிடுவது தவறு என இந்த அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. இது தொடர்பான வழக்கு ஒன்று அலகாபாத் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தை ரத்து செய்யுமாறு 5 மாநில ஹஜ் கமிட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாநிலங்களவை தலைவர் ரகுமான் தலைமையில் எம்.பி.க்கள் குழு ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஹஜ் மானியத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக் கொண்ட பிரதமர், ஹஜ்மானியத்துக்கு மாற்றாக வேறு வழிமுறைகள் ஆராய்வதற்காக மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்துள்ளார். இந்தக் கமிட்டியின் அறிக்கை கிடைத்தவுடன் ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்.
ஹஜ் மானியம் ரத்து குறித்து டெல்லி ஜமா மஸ்ஜித் இமாம் அகமது புகாரி கூறுகையில், Ôஹஜ் யாத்திரை செல்வதற்குரிய வசதி இல்லாதவர்கள் யாத்திரை செல்லவேண்டிய அவசியம் இல்லை என குரானில் சொல்லப்பட்டுள்ளதுÕ என்றார்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அரசு மானியத்தில் ஹஜ

அவனுடைய காலை பார்த்து அவன் பேரைச் சொல்லுங்கள்(நகைச்சுவை)

ஒரு கல்லூரி மாணவனுக்கு தனது பாட அட்டவணையில் மீதம் இருந்த இரண்டு மணி நேர பாட நேரங்களை நிரப்ப வேண்டியதாய் இருந்தது. அதற்கு காட்டு வாழ்க்கையை பற்றின விலங்கியல்(Wildlife Zoology) பாடம் மட்டுமே இருந்தது. எனவே வேறு வழி இன்றி அதை அவன் எடுத்தான்.

ஒரு வாரம் கழித்து தேர்வு நடந்தது. பேராசிரியர் வினாத்தாளை ஒவ்வொருவருக்கும் கொடுத்து கொண்டே வந்தார். வினாத்தாள் ஒரே பேப்பர்(paper)-ஆகவும், அதிலே நான்கு கட்டங்களும் இருந்தன. ஒவ்வொரு கட்டத்திலும் மிக கவனமாக வரையப்பட்ட பறவைகளின் கால்கள்(legs) உள்ள படம் இருந்தது. அதிலே உடலும்(body) இல்லை, பாதங்களும்(feets) இல்லை, வெறும் கால்கள்(legs) மட்டுமே இருந்தன. மாணவர்கள் அனைவரும் பறவைகளின் பெயரை அதின் கால்களின் மூலம் கண்டறிந்து பதில் எழுத வேண்டும் என்று கேட்கப்பட்டனர். நம்ம மாணவன் உட்கார்ந்து கொண்டு வினாத்தாளை முறைத்து பார்த்து கொண்டு இருந்தான். மேலும் நிமிடத்திற்கு ஒரு முறை கோபப்பட்டு கொண்டிருந்தான். ஏண்டா இந்த படத்தை எடுத்து தொலைச்சோம், இப்படி கிறுக்குத்தனமாக கேள்வி இருக்குதே என்று எண்ணினான்.

கடைசியில ஒண்ணுமே எழுதாம(தெரிந்தால் தானே எழுத முடியும்) வெறும் பேப்பர்(paper)-ஐ ஆசிரியரிடம் சென்று கொடுத்தான். “இது தான் என் வாழ்க்கையிலே ரொம்ப கேவலமாக எழுதிய தேர்வு” என்று சொன்னான்.

ஆசிரியர் அவனை பார்த்து: ” ஏய், நீ இந்த test-இல் பெயில்(fail) தான். என்ன உன் பெயர் எழுதாமல் பேப்பரை கொடுத்திருக்கிறாய். உன் பேர் என்ன?” என்றார்.

உடனே மாணவன் தன் pant-ஐ முழங்கால் வரை உயர்த்தி தனது கால்களை காண்பித்து பின்வருமாறு சொன்னான்: “நீங்களே சொல்லுங்க”

A college student needed a small two-hour course to fill his schedule and the only one available was wildlife Zoology.

After one week, a test was held.The professor passed out a sheet of paper divided into four squares. In each square was a carefully drawn picture of a bird’s legs. No bodies, no feet, just legs. The test asked each student to identify the birds from their legs. The student sat and stared at the test getting angrier every minute.

Finally he stomped up to the front of the classroom and threw the test on the teacher’s desk. “This is the worst test I have ever given.”

The teacher looked up and said: “Young man, you have flunked the test.

What’s your name?”

The student pulled up his pant to the knee showing his legs and said:

“You tell me…”

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13558#13558

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அட்டவணை, நகைச்சுவை, விலங்கியல், Wildlife Zoology

ஆசிரியர் பயிற்சி பெறப் போகிறீர்களா? உங்களுக்கு ஒரு ஆலோசனை

அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேராதீர்கள் ? மாணவர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

சென்னை, ஏப். 11-
அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்படுகின்ற ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவ, மாணவிகள் சேரவேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.
சட்டசபையில் நேற்று இது தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஞானசேகரன் (காங்): வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஜெபிஎஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக கூறி அப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசு அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அதிகம் உள்ளது. இதில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் தங்கம் தென்னரசு:
ஜெபிஎஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். பத்திரிகைகளிலும் இதுகுறித்து விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அப்பள்ளியில் படித்த 172 மாணவிகளும் 9 மாணவர்களும் ஏமாந்து உள்ளனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். அனுமதி பெறாமல் ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்தியதற்காக அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகி தலைமறைவாகிவிட்டார். அவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 1995-ம் ஆண்டுக்கு பிறகு மழலையர் ஆசிரியர் பள்ளிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மோசடியாக மாணவர்களை சேர்த்துக்கொண்டு அவர்களை பகடைகாயாகப் பயன்படுத்தி தேர்வு எழுத அனுமதி கேட்க வைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் செய்தால் தவறு தொடர்ந்த கொண்டுதான் இருக்கும்.
எனவே மாணவ, மாணவிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேரும்போது அங்கீகாரம் பெறப்பட்டு நடத்தப்படுகின்ற பள்ளியா என்று பார்க்க வேண்டும். எத்தனை மாணவ, மாணவிகள் படிக்க அனுமதி பெற்று உள்ளனர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அனுமதி பெறாமல் நடத்தப்படுகின்ற பள்ளியில் சேர்ந்து ஏமாந்து விடாதீர்கள்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அங்கீகாரம், ஆசிரியர் பயிற்சி பள, ஞானசேகரன்

விமானத்தில் பயணம் செய்ய இனி தபால் நிலையம் போனால் போதும்

தமிழகத்தில் இன்று முதல்

தபால் நிலையங்களில் விமான டிக்கெட் விற்பனை

சென்னை, ஏப். 11-
தமிழ்நாட்டில் 247 தபால் அலுவலகங்கள் மூலமாக ஏர் டெக்கான் விமான டிக்கெட்கள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு தலைமை அஞ்சல் துறை தலைவர் இந்திரா கிருஷ்ணகுமார், ஏர் டெக்கான் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஏர் டெக்கான் டிக்கெட் விற்பனை சேவை இன்று முதல் தொடங்குகிறது.
ஒப்பந்தத்திற்கு பிறகு ஏர் டெக்கான் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் கூறியதாவது:
இந்தியாவில் சாதாரண மக்கள் விமான சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏர் டெக்கான் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சாமானியருக்கும் ஏர் டெக்கான் விமான பயணச் சீட்டு கிடைப்பதற்காக தபால் துறையுடன் இணைந்து செயல்படுகிறோம்.
முதல்கட்டமாக கர்நாடகா தபால் வட்டத்தில் உள்ள 500 தபால் அலுவலகங்கள் மூலமாக ஏர் டெக்கான் விமான பயண டிக்கெட்கள் விற்று வருகிறோம். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, நாளை முதல் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள 247 தபால் அலுவலகங்களிலும் விமான பயணச் சீட்டுகள் விற்பனையை தொடங்கியுள்ளோம்.
இந்தியாவில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை பெரு நகரங்களிலேயே அமைக்கப்படுகின்றன. இந்தியா என்பது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மட்டுமல்ல. ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கியது. அந்த கிராமங்களும் முன்னேறினால் தான் நாடு முன்னேறியதாக அர்த்தம்.
இந்தியாவில் 500 விமான ஓடு தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இவற்றை சீரமைத்து விமான சேவை வழங்கினால் எல்லா இடங்களுக்கும் விமானத்தில் செல்லும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறை தலைவர் இந்திரா கிருஷ்ணகுமார் பேசும்போது, ”தமிழகத்தில் ஏர் டெக்கான் விமான டிக்கெட்கள் விற்பனை செய்ய உள்ள 247 தபால் அலுவலகங்கள் இன்டர்நெட் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் தலா 2 ஊழியருக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வது குறித்து ஏர் டெக்கான் பயிற்சி அளித்துள்ளது. டிக்கெட் விற்பனைக்காக கூட்டுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. வழக்கம் போல் சேவை வரி, கல்வி வரி மட்டும் உண்டு. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, டிக்கெட் விற்பனைக்கான அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதன் மூலம் தபால் துறைக்கு 5 சதவீதம் வருமானம் கிடைக்கும்” என்றார்.
நிகழ்ச்சியில் அஞ்சல் துறை தலைவர்கள் மூர்த்தி, ராமச்சந்திரன், பொதுமேலாளர் முருகையன், இயக்குனர் டி.எஸ்.வி.ஆர்.மூர்த்தி பங்கேற்றனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஏர் டெக்கான், ஜி.ஆர்.கோபிநாத், விமான பயணச் சீட்டு