ஆனந்த விகடனும் அலறும் அரவிந் நீலகண்டணும்-part 1


அகப்பயணம் அரவிந் நீலகண்டணின்

அல்லேலுயா விகடன் ஆசிரியருக்கு ஒரு கடிதம் என்ற கட்டுரையில் கீழே இருப்பவை எனது ‘மறுவாசிப்பு'(!) என்ற தலைப்பில் இடப்பட்டுள்ள கதை எனது ‘மறுவாசிப்பு'(!)

அவரின் கட்டுரை இணைப்பு:http://arvindneela.blogspot.com/2008/04/blog-post.html
மார்வின் சிறிது தொண்டையை கனைத்துக் கொண்டான். சிறிது தயங்கித்தான் ஆரம்பித்தான்.
எனக்கு தமிழ் புரிஞ்சாலும் சரளமா தமிழ்ல பேசமுடியாததால ஆங்கிலத்துல பேசுறதுக்கு மன்னிச்சிடுங்க. மல்லி நீங்க மேம்போக்கா உணர்ச்சி படுற அளவுக்கு உருப்படியா உலக சரித்திரத்தையோ அல்லது கிறிஸ்தவத்துடைய வரலாற்றையோ ஒழுங்கா படிச்சதில்லைன்னு நினைக்கிறேன். எங்க நாட்டுலயும் தீண்டாமை இருந்துச்சு. சாதி அமைப்பு கூட இங்க விட மோசமாவே இருந்துச்சுன்னு கூட சொல்லலாம். அதனை எந்த கிறிஸ்தவ சபையும் எதிர்க்கலை. இன்னும் சொன்னா இன்னைக்கு மிகப்பெரிய மனிசங்களா பேசப்படற கிறிஸ்தவ இறையியலாளர்களெல்லாம் அந்த சாதி முறையை ஆதரிச்சுருக்காங்க.”

ராமசாமி:மெர்வின் நீங்க ஏதோ விரக்தியில பேசருது நல்லாத் தெரியுது.இருந்தாலும் பரவாயில்லை.கிறிஸ்தவ இறையிலாளார்களெல்லாம் அந்த ஜாதி முறையை ஆதரிச்சாங்க அப்படிங்கறது ஒரு வேளை உண்மையா இருக்கலாம்.ஆனால் இந்த ஜாதிகளை உருவாக்கியதே எங்க ஊரு சாமிகள்தான் என்பது உங்களுக்கு தெரியாம இருக்கலாம் மெர்வின்.கடவுளுன் ஒவ்வொரு உருப்பில் இருந்து பிறந்தவனும் ஒவ்வொறு ஜாதிக்காரன்ன்னு சொல்லி மக்களை எல்லாம் முட்டாள்கள் ஆக்கிட்டானுங்க இங்க இருக்கிற ஆதிக்க வர்கத்தவங்க.

மெர்வின்:இன்னைக்கு நீங்க பார்க்கிற ஐரோப்பிய சமுதாய சமத்துவத்துக்கு நாங்க நன்றி சொல்ல வேண்டியது உங்க கிட்டதான்.

ராமசாமி:இல்ல மெர்வின் நீ தப்பா சொல்ற.அந்த யோக்கிதை இன்னும் எங்களுக்கு வரவில்லை.ஏன்ன இன்னும் எங்க நாடு திருந்த வில்லை,எங்க இந்து மதமும் திருந்தவில்லை.நாங்களே இன்னும் ஜாதிய விடாத பொழுது எங்கள பாத்து மத்தவன் ஜாதியவிட்டாங்கறது எந்த அளவுக்கு காதுல பூ சுத்துறதுன்னு தெரியுதா?

மெர்வின்:ஐரோப்பா காலனைஸ் செய்த ஆசிய, ஆப்பிரிக்க கண்ட மக்கள். மேலும் நிலத்தை பிடுங்கி கொன்னு குவிச்ச அமெரிக்க ஆஸ்திரேலிய பூர்விக வாசிகள்.

ராமசாமி:இது எதுவும் மதத்தின் பெயரால் நடந்தவை இல்லை மெர்வின்.அரசியல் ரீதியாக நடந்தவை.இப்படி பாத்தா எங்க ஊரு இந்து ராஜாக்கள் பக்கத்து நாட்டு இந்து ராஜாக்களையே கூண்டோட அழிச்சு அந்த நாடையே உருகுலைத்த சம்பவங்கள் எல்லாம் இருக்கு.அவங்க சண்டைக்கு போகும் முன்பாக இந்து தெய்வங்களை கும்பிட்டு விட்டுத்தான் சண்டைக்கே போவாங்க.அதை யாரும் மதப்படுகொலைகள் அப்படின்னு சொல்ரது இல்லையே?

மார்வின் தொடர்ந்தான். “செயிண்ட் அகஸ்டைனை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவத்தின் முக்கியமான இறையியலாளர். அவர் பாணர்களுக்கு ஞான ஸ்நானமே கொடுக்க கூடாது என்று சொன்னார். அதே நேரத்தில் உங்கள் ஞான சம்பந்தர் திருநீலகண்ட யாழ்பாணரை வேள்வி சாலைக்குள்ளேயே மனைவியுடன் படுக்க வைத்தார் இல்லையா? உங்கள் வரலாறு முழுக்க சமுதாய கட்டுமானத்துக்கு எதிரான குரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய குரல்கள் எங்கள் சமுதாய வரலாற்றில் சுவடில்லாமல் எரிக்கப்பட்டுவிட்டன. தலையாரிகள், தோல் வேலைகள் செய்பவர்கள், மாயனத்தில் குழி தோண்டுபவர்கள், நாவிதர்கள், சுகாதார தொழிலாளர்கள் இவர்களெல்லாம் தீண்டாமை கொடுமைக்கு ஐரோப்பாவில் ஆளாக்கப்பட்டதும் அதற்கு மத்தியகால கிறிஸ்தவ சட்டங்கள் துணை போனதும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்ட்டின் லூதர் போன்றவர்கள் கூட இத்தகைய சட்டங்களை எதிர்க்கவில்லை. உங்களுக்காவது வர்ணாஸ்ரமத்துல நாலு பிரிவுன்னா எங்களுக்கு ஏழு அடுக்குகள் இருந்துச்சு. கிறிஸ்தவ மதகுருக்கள் இதனை வானத்துல ஏழடுக்கு சுவர்க்கம் இருப்பது போல பூமியிலும் மனுசங்க ஏழு அடுக்குகளா அமைக்கப்பட்டிருப்பதாக இந்த அமைப்பை நியாயப்படுத்தினர்.

ராமசாமி அமைதியாக பதிலை தொடர்ந்தார்மெர்வின் கிறிஸ்தவ மதத்தில் ஜாதி என்பது அங்கீகரிக்கப்பட்டது அல்ல.அதனால் தனிப்பட்ட ஒரு நபர் அப்படி சொன்னாலும் அவருக்கு பின் வந்தவர்கள் அதை செயல்படுத்த மாட்டார்கள்.வரலாறு அழிக்கப்பட்டதுன்னு சொல்ற நீங்கள் அவற்றை எப்படி அறிந்து கொண்டீர்கள்.நீங்கள் இந்த விஷயத்தை தெரிந்துள்ள போதே நாம சொல்லலாம் அவை அழிக்கப்படவில்லை என்று.மற்றவர்கள் இதை எதிர்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் நீங்கள் எங்கள் நாட்டில் மதவாதிகளே இந்த தீண்டாமையை உருவாக்கி அதை பாலூட்டி வளத்ததை நியாப்படுத்துகிறீர்கள்.ஆதிசங்கரர் முதல் மற்ற அனைவருமே தீண்டாமையை தீயை எண்ணை உற்றி எரியவிட்டவர்கள் தான் அதற்கு துணையாக எங்கள் பகவத் கீதையும் மற்ற புராணங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது மெர்வின்.இவ்வளவு ஏன் மெர்வின் தமிழ் மொழியே முதுகெலும்பு இல்லாத மொழி என்று மட்டும் இல்லாமல்,அது நீச மொழியென்று இங்கிருக்கும் புரோகிதர்கள் பரப்பி வந்த காலத்தில் உங்கள் நாட்டில் இருந்து வந்த கார்டுவெல் என்ற பெரியவர் தமிழ் மொழியின் மூலங்களை எங்களுக்கு அறிவித்தனர்.அதுமட்டும் இல்லை இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் திராவிடர்கள் வந்தேறிகள்,இங்கே புரோகிதர்களாக இருக்கும் ஆரியர்களே பூர்வக்குடிகள் என்று பார்ப்பனர்கள் பரப்பிய பொய்மூட்டைகளை தன்னுடைய ஆராய்ச்சி மூல தகர்த்தெரிந்தவர் இந்த கார்டுவெல்.

மெர்வின் கோபத்தோடு முகம் சிவக்ககால்டுவெல் ரப்பர் எஸ்டேட்டெல்லாம் கூட கன்னியாகுமரி மாவட்டத்துல வாங்கியிருக்காராம்.”பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு புரோட்டஸ்டண்டு இங்கிலாந்தில் மிஷினரிகள் என்பது ஒரு தொழில். இன்னும் சொன்னால் நீங்கள் சேருகிற அமைப்பைப் பொறுத்து ஆதாயமான தொழில்என்றான் மார்வின்

ஸொசைட்டி ஃபார் பிராபகேஷன் ஆஃப் கோஸ்பல்எஸ்பிஜி (Society for the Propagation of Gospel- SPG) இந்த அமைப்போட முக்கியத்துவம் என்ன தெரியுமா? இதுதான் பெரிய அளவில அடிமைகளை வைச்சிருந்த அமைப்பு. எஸ்பிஜி அமைப்போட தோட்டங்களில் வேலை செஞ்ச அடிமைகளோட நெஞ்சில்எஸ்அப்படீங்கிற எழுத்தை சூடு வைக்கிறது வழக்கம். 1833 இல் பிரிட்டிஷ் அரசு அடிமை முறையை ஒழிச்சுது.”

ஆனால் உண்மை என்னவென்றால் சர்ச் குறிப்பாக எஸ்பிஜி, அடிமை முறையை ஆதரித்தது. சர்ச் தான் வைத்திருக்கிற அடிமைகளுக்காக நஷ்ட ஈடு கேட்டது.”

சர்ச் தனக்கு அடிமைகளை விடுவிக்கிறதால ஏற்படுற நஷ்டத்துக்குதான் நஷ்ட ஈடு கேட்டுச்சே தவிர அடிமைகளுக்கு கொடுக்க அல்ல. ஒரு பிஷப்புக்கு மட்டும் அந்த காலத்துல 13000 பவுண்டுகள் கொடுத்தாங்கன்னா பார்த்துக்கயேன்.

ராமசாமி சிரித்துக்கொண்டே மெர்வின் கிறிஸ்தவத்தில் மேல் உள்ள வெறுப்பின் காரணமாக என்ன சொல்லுகிறோம்ன்னு தெரியாமயே பேசிகிட்டு இருக்கீங்க.1833ல் பிரிட்டீஷ் அரசாங்கம் அடிமை முறையை ஒழித்தது என்று நீங்களே சொறீங்க.சரி மத்த எந்த பிரச்சனைகளை இங்கிலாந்து அரசு செய்தாலும் அது கிறிஸ்தவ அரசு என்று சொல்லும் நீங்கள் நல்ல விஷயத்தை செய்த பொழுது மட்டும் பிரிட்டீஷ் அரசாங்கம் என்று தனியே பிரித்து சொல்கிறீர்கள்.மிஷனெரி என்பது ஆதாயத்தொழிலாக இருந்திருந்தால் இன்றைக்கு இந்தியாவுக்கு வந்த மிஷனெரிகள் எல்லாம்கோடிஸ்வரர்களாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் நடந்தது அதுவல்ல மெர்வின் நீங்கள் உண்மையை திரிக்க அதிகமாக முயற்சி எடுக்கிறீகள்.இந்தியாவுக்கு வந்த அவர்கள் தங்கள் செல்வங்களை இழந்ததாகவே வரலாறு இருக்கும் பொழுது அவர்கள் ஏதோ ஆதாயம் பெறவே இந்தியாவுக்கு வந்ததாக சொல்லுவது உங்களின் காழ்புணர்ச்சியையே காண்பிக்கிறது.கார்டுவெல் அவர்கள் அடிமைதலை இருந்த ஒரு அமைப்பில் அங்கத்தினர் என்று சொல்லுவதில் இருந்து நீங்கள் சொலவருவது என்ன மெர்வின்.அவர் அடிமைத்தனத்தை ஆதரித்தார் என்றா.இன்றைக்கும் அழியாத சின்னமாக கார்டுவெல் செய்த தியாகங்கள் இடயன்குடி மக்களின் மனதில் உள்ளது மெர்வின்.அங்கே சென்று கேட்டுப்பாருங்கள் கார்டுவெல்லின் பெருமையை சொல்லும்.அவர் செய்த அனைத்து தியாகங்களுக்கும் அவரின் கடவுள் இயேசுவே முன்மாதிரி மெர்வின்.

மெர்வின் கோபமாக உங்களுக்குதான் சாமி நம்பிக்கையே கிடையாதே, நீங்க சிதம்பரம் நடராஜன் ஆயிரம் வருசமா காலை தூக்கிக்கிட்டு நின்னாலும் கால் அவருக்கு வலிக்கலை. ஆனா மூணு நிமிசம் காலை அப்படி தூக்கிட்டு நின்னா உனக்கு வலிக்குது ஏன் தெரியுமா ஏன்னா நடராஜர் வெறும் கல்லுஅப்படின்னு சொல்லுவீங்களே.?

ராமசாமி பொருமையாகஉண்மையை எங்க வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்

மெர்வின்.கல்லை கல்லுன்னு சொல்லாம வேற என்னனு சொல்ல முடியும் மெர்வின்.

மெர்வின் மனதில் வஞ்சனையுடன்சரி இராமசாமி உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையில்லை.என் கூட வாங்க உங்கள் சிதம்பரம் ந்டராஜர் கோவிலுக்கு போயிட்டு வரலாம்.அங்க ஏதோ தமிழில் தேவாரம் பாட வந்தவங்களை அடிச்சதா புரளி எல்லாம் பரப்பி இருந்தாங்களே?

ராமசாமி:”இது புரளியில்லை மெர்வின் நடந்ததைத்தான் எல்லா இடங்களிலும் சொல்லியுள்ளார்கள்.நீதிமன்ற உத்தரவுடன் தமிழில் கடவுளை பாட சென்ற தீட்சிதர்களை அங்கிருந்த பார்பண புரோகிதர்கள் அடித்து விரட்டினர் என்பது எப்படி புரளி என்று சொல்ல உங்களுக்கு மனம் வந்தது.பார்பணர்களுக்கு வக்காலத்து வங்க ஆரம்பித்தவுடனேயே நீங்களும் அவர்களை போலவே பொய்யு பித்த்லாட்டமும் உள்ளவராக மாறிவிட்டீர்கள்.கொஞ்சம் விட்ட நடராஜர் சிலைதான் உலகம்.பஞ்சபூதம் கதையெல்லாம் விட்டு காதுல பூ சுத்தறதுக்கு எங்கள் புரோகிதர்களுக்கு சொல்லவாவேண்டும். நடராஜ தத்துவம் அணுவின் இயக்கம் முதல் பிரபஞ்ச இயக்கம் வரை காட்டுற அழகான ஆன்மிக வெளிப்பாடுன்னு மாஞ்சு மாஞ்சு இந்து வெறியையும் மூடநம்பிக்கையும் பரப்பிவரவங்களை டிஃபெண்ட் செய்து பேசுற உங்களுக்கு சந்தோஷம்ன்னா னான் வரேன்.போகலாம்.

இருவரும் கோவிலை அடைந்தவுடன் ராமசாமிமெர்வின் நீங்கள் வேண்டுமானால் கோவிலுக்குள் போய் அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள் நான் இங்கேயே நிற்கிறேன்.

மெர்வின் பரிதாபமாக கோவிலின் முன்பாக இருந்த போர்டை பார்த்தான்.அதில்இந்துக்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை:” என்று போடப்பட்டு இருந்தது.

ராமசாமி அமைதியாக திரும்பி மெர்வினைப் பார்த்தார்.ஏன் மெர்வின் தயக்கம் கிறிஸ்தவ தேவாலயங்களில்இந்த மாதிரி போர்டுகளை நீங்கள் பாத்திருக்கீங்களா?

மெர்வின் அவமானத்துடன் ஏன் மெக்காவுக்குள்ள மாற்று மதத்தவங்க போறதுக்கு அனுமதி இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா ?ஏன் இலண்டன்ல உள்ள செயிண்ட் பால் சர்ச்சில பிற மதத்தவர் போய் வேடிக்கை பார்க்கணும்னா அதற்கு பவுண்ட்ல டிக்கட் வாங்கிட்டுத்தான் போக முடியும் தெரியுமா?

ராமசாமி மிகவும் பொருமையுடன் மெர்வின் நான் கேட்டது சர்ச்சை பற்றி, இங்க ஏன் சம்மந்தம் இல்லாம மெக்காவை இழுக்கிறே.சரி லண்டனில் உள்ள சர்ச்சில் மாற்று மதத்தவர்கள் அனுமதிக்கபடுகிறாரளா இல்லையா?காசு வாங்கினார்கள் வாங்க வில்லை என்பது முக்கியம் இல்லை.உள்ளே போக முடியுமா,கடவுளை தரிசிக்க முடியுமா?முடியத என்பதே.ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒருசில இந்து மத கோவில்களில்எவ்வளவு பணம் கொடுத்தால் கூட மற்ற மதத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.அது இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தாலும் அப்படியே.ஒரு வேளை அவர் தன் அதிகாரத்தை பயன் படுத்தி அந்த கோவிலுக்கு போய்வந்தால் கூட அவர் சென்ற பிறகு தீட்டு கழித்து அந்த கோவிலையும் சாமியையும் சுத்தப்படுத்துவார்கள்.என்னய்யா கொடுமை எங்கள் தேசத்திலே.இதில் ஒரு சில கோவில்களில் இந்துப்பெண்கள் கூட போகக்கூடாது.ஏன் என்றால் சாமிக்கு தீட்டுப்பட்டு விடுமாம்.இதெல்லாம் எங்க பொய் சொல்லி அழறது மெர்வின்.

மெர்வின் மிகவும் சத்தமாக கட்டுபாடு இழந்துஇந்தியாவில உள்ள மசூதி சர்ச்சுக்கு போக உங்களுக்கு தடை இல்லைனா அவை பாரம்பரிய வழிபாட்டு தலங்கள் அப்படீங்கிறதை விட மத பிரச்சார கேந்திரங்களாகவும் செயல்படுது. ஆனா அங்க கூட பிறமதத்தவர் அனுமதிக்கப்படாத கண்ணுக்கு தெரியாத கட்டுப்பாட்டு வேலிகள் உண்டு. உதாரணமா ரோமன் கத்தோலிக்க சர்ச்சுல ஏசுவோட உடம்பையும் இரத்ததையும் சடங்கு ரீதியா மக்களுக்கு சாப்பிட கொடுப்பாங்க. ஏசுதான் உலகத்துக்கே பொதுவானவராச்சே, எந்த கிறிஸ்தவனைக் காட்டிலும் ஏசுவை நான் நல்லா படிச்சு அவரை நேசிக்கிறேன் அப்படீன்னுட்டு நீங்க அதை முழங்கால்போட்டு கால்கடுக்க வரிசையில நின்னு வாங்கி புசிக்க முடியாது. அதுக்கு நீங்க ஞானஸ்நானம் வாங்கி அந்த சர்ச்சுல உறுப்பினராகணும். ஏன் புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவன் கூட ரோமன் கத்தோலிக்க சர்ச்சுல கொடுக்குற ஏசுவோட சதையையும் இரத்ததையும் வாங்கி சாப்பிட முடியாது. இதை இன்னைக்கு வரை மேற்கில யாரும் கேள்விக்குள்ளாக்குனதில்லை.

இராமசாமி அழுத்தமான குரலில் பேச ஆரம்பித்தார் மெர்வின் தூங்குகிறவர்களை எழுப்புவது எளிது,தூங்குவதை போல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம்.முதலில் கத்தோலிக்க சர்ச் மட்டும் கிறிஸ்தவமல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.ஞானஸ்தானம் என்பது மத சடங்கு.இதை செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பங்கு பெறமுடியும்.எந்த மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அவர் பாதராகவோ,போதகராகவோ ஆகமுடியும்.ஆனால் மற்ற மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறுகிறவன் புரோகிதனாக மாற முடியுமா?ஏன் பிராமணன் அல்லாத ஒரு இந்துவே புரோகிதனாக ஆகமுடியாது.அந்தளவுக்கு இந்து மதத்தோட மனுதர்மம் எழுதிவைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள சர்ச்சுகள் மட்டும் இல்லை உலகில் உள்ள எல்லா சர்ச்சுகளின் நிலையும் ஒரே மாதிரிதான்.ஆனால் அமேரிக்காவிலும்,அய்ரோப்பாவிலும் கட்டப்பட்டுள்ள இந்துக்கோவில்களில் கூட பார்பணர் அல்லாதவர்கள் புரோகிதர் ஆக்கப்படவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை.

உடனே மெர்வின் அரசியலுக்கு தாவிப்பேச ஆரம்பித்தான்சரி அண்மையில தீண்டாமை கொடுமையிலிருந்து மீள முடியாத கிறிஸ்தவர்கள் இந்துக்களாக முன்வந்தப்ப அந்த சடங்குகளை இந்து கோவிலில் வைத்து நடத்த பகுத்தறிவுவாதிகள் அப்படீன்னு தங்களை சொல்லிக்கொள்கிறவங்க கட்டுப்பாட்டில இருக்கிற அறநிலையத்துறையே அனுமதி மறுத்திருக்கு. ஆனா இவ்வளவு பேசுற உங்ககிட்ட இருந்து இன்னைக்கு வரை இதுக்கு ஒரு முனகல் கூட ஏற்பட்டதில்லை.

இராமசாமி மீண்டும் மெர்வின் இந்துக்களாக விரும்புகிறவர்கள் எந்த ஜாதிக்கு மாறமுடியும்.அவர்களை பார்பண ஜாதியில் சேர்த்துவதாக இருந்தால் ஆயிரக்கணக்காண மக்களை கொண்டு வருகிறோம்.மாற்றுவீர்களா? அவர்களை மறுபடியும் சாக்கடையில் தானே தள்ளப்போகிறீர்கள்.சரி இதை ஏன் இந்து அறநிலைக்கு சொந்தமான கோவிலில் மதம் மாறாவிட்டால் அந்த மதமாற்றம் உண்மையாக இருக்காதா.ஏன் ஒரு மண்டபத்தில் சிலையை வைத்து அதன் முன் மதம் மாற்றினால் செல்லாதா?எதாவது குண்டக்கா மண்டக்கா பிரச்சனை பண்ணினால் தான் விளம்பரம் வரும்.ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு சில லட்சம் இந்துக்கள் வேறு மதம் மாறிக்கொண்டிருக்கும்போது முன்னூறு பேர் இந்து மதத்துக்கு வரத ஒரு பெரிய விளம்பரம் பண்ணுவது வெட்கமா இல்லை.

உடனே மெர்வின்இதோ இங்கே நிக்கிற இந்த ஆலயம் அன்னிய மத தாக்குதல்களுக்கு ஆளாயிருக்கு. கோவிலுக்குள்ள அதன் சிலைகளை காக்க சித்திரவதைகளையும் படுகொலைகளையும் அந்த தீட்சிதர்கள் தாங்கியிருக்காங்க. இன்னைக்கு தமிழருடைய ஒரு முக்கிய கலாச்சார ஆன்மிக அடையாளமா உலகமெங்கும் பேசப்படுற உலோக வார்ப்பு சோழகால நடராஜ சிலைகள் நமக்கு கிடைச்சுருக்குன்னா அதுக்கு பின்னாடி அவுங்க சிந்தின இரத்தமும் செய்த தியாகமும் இருக்கு, நான் ஒண்ணும் உங்க நாட்டு புரோகித அமைப்பு சுத்தமானது அப்படீன்னு சொல்லலை. அதுலயும் திருத்தப்பட வேண்டிய குறைகள் ரொம்ப இருக்கு. ஆனா அதை திருத்த முடியும். இப்படி தேவையில்லாத தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒப்பீடுகள், திட்டமிட்ட நாடகபாணி பிரச்சனைகள், ஒட்டுமொத்தமாக இவுங்களை வில்லனாக காட்டுற வெறுப்பியல் இனவாதக் கோட்பாடுகள் இதெல்லாம் இல்லாமலே அதனை செய்ய முடியும்

இராமசாமிமெர்வின் எத்தனை சித்தர்களை காடுகளிலும் ,குகைகளிலும் கொன்று குகையிடி கழகம் என்று பெயர்வைத்திருக்கிறாங்க இந்த படுபாவி புரோகிதார்கள்.நந்தனாரைக்கூட உயிரோட எரித்து விட்டு சோதியில் கலந்துவிட்டார் என்று கதைகட்டிவிட்டார்கள்.எத்தனை ஜைன மதத்தவர்களை கொன்று குவித்து இருப்பார்கள்.எத்தனை புத்தக்கோவில்களை இந்துக்கோவில்களாக்கி இருப்பார்கள்.இவர்கள் செய்த அட்டூழியங்களை கணக்கில் இடமுடியுமா?பெண்களை கற்பு அழிக்க சிவனிடம் வேண்டும் பக்கதர்கள் அல்லவா இவர்கள்.

மெர்வின் மீண்டும் தீர்க்கமாக பேசினான்எனக்கு இந்து தருமம் எவ்வளவோ பிடிச்சுருக்கு. ஆனாலும் நான் இன்னும் கிறிஸ்தவன் தான். நான் இந்துவா மாறினா அந்த சான்றிதழைக் காட்டி நிச்சயமா கோவிலுக்குள்ளே போவேன். ஆனா வெள்ளைத் தோல் கொண்ட ஒருத்தன் இந்துவாக மாறினா நான் எங்க நாட்டில திரும்பி போகும் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.” நான் இந்துவாக மாறி இந்து பெயரோட அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ போன பொதுவாக என்னை எல்லோரும் தீண்டத்தகாதவன் போலத்தான் பார்ப்பாங்க. அதனை சமாளிக்கிற தைரியம் எனக்கு இருக்கான்னு தெரியல்லை. ஏன் இந்து சடங்குகளில் பங்கு பெற்றதுக்காக அரசாங்க வேலையை விட்டுக் கூட ஒரு வெள்ளைக்காரரை அரசாங்கம் நீக்கியிருக்கு தெரியுமா?”

ராமசாமிஉன்னை தீண்டத்தகாதவனா மட்டும் தான் பார்ப்பாங்க எங்க ஊரில் நீ கிறிஸ்தவனா இருந்த தீண்டத்தகாதவன் என்று தான் சொல்லுவார்கள்.உன் ஊரில் மதம் மாறினவர்களுக்கு வேலை மட்டும் தான் போயிருக்கு.ஆனா எங்க இந்தியாவில் ஒரிசா,குஜராத்தில் மதம் மாறினவர்களை கொடுரமாக கொலையே செய்துள்ளார்கள்.இந்த கொடுமைகளை எப்படிப்பா தாங்கறது.

மெர்வினுக்கு மண்டை சூடாக ஆரம்பித்துவிட்டது.எதையாவதும் பேசி ராமசாமியை காலைவார வேண்டும் என்று

திட்டம் தீட்டினான்.அதற்கு ஒரு நல்ல ஐடியா கிடைத்தது.

உடனே மெர்வின் ஒரு முடிவுக்கு வந்தவனாகாஇந்தியாவில் உருவான இராமாயனம் பெண்ணுக்கு உரிமையை வழங்குவாதாக உள்ளது.அதைப்பற்றி என்ன சொல்லுகிறீர்கள்.

ராமசாமிஎங்கே அந்த உரிமையை பத்தி கொஞ்சம் சொல்லு பார்க்கலாம் மெர்வின்.

மெர்வின்தொடக்கத்திலிருந்தே சீதை தன் முடிவுகளின் படி சுதந்திரமா நடக்கிற பெண்ணாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் இராமன் வனவாசத்துக்கு தன்னை கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொன்னதும் ரொம்ப கடுமையாக இராமனைத் திட்டி தன்னை கூட அழைத்து போக செல்கிறாள். அப்புறம் மாயமானை தேடி இராமன் சென்ற பின்னர் தனக்கு காவலாக நின்ற இலட்சுமணனை மிக மோசமாக திட்டுகிறாள். இங்கேதான் முதன் முதலாக தான் தீக்குளித்துவிடுவதாக இலட்சுமணனை அவள் மிரட்டி இராமனை தேடி அனுப்பி வைக்கிறாள். இதிலெல்லாம் அவளுடைய சுய தீர்மானத்தின் உறுதியும் தன் காதல் கணவனான இராமன் மீது அவள் வைத்திருக்கும் முரட்டுத்தனமான அன்பும் வெளிப்படுகிறதேயல்லாமல் அவளுடைய அடங்கி போகிற தன்மை தெரியவில்லை. பிறகு இராமனின் கடுமையான சொற்களைக் கேட்டு அவள் தானாகவே இலட்சுமணனிடம் நெருப்பு மூட்ட சொல்கிறாள். எந்த இலட்சுமணனை தான் தீக்குளித்துவிடுவதாக சொல்லி வசை பாடினாளோ அதே இலட்சுமணனிடம் தனக்காக நெருப்பு மூட்ட சொல்கிறாள். இந்த தருணத்தில் இராமன் தீக்குளிக்க சொல்லவில்லை மாறாக அமைதியாக இருந்துவிடுகிறான். பின்னர் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதற்காக சீதையிடம் தசரதனே வந்து மன்னிப்பு கேட்பதாக இராமாயணம் சொல்கிறது. அதற்கு பிறகு இராமன் அயோத்தியில் தன் இரு குழந்தைகளுக்கும் தாயான சீதையிடம் தீ குளிக்க சொல்லும் பொழுது சீதை அந்த கோரிக்கையை மறுத்துவிடுவதுடன் இராமனை விட்டு முழுமையாக பிரிந்துவிடுகிறாள். ஆக, எந்த இடத்திலும் இராமாயணம் சீதையை அடங்கி நடப்பவளாக காட்டவில்லை என்பதுடன் பெண்ணிய நோக்கில் கூட மிக ஆதர்சமான ஒரு பெண்ணாகவே காட்டுகிறது. அத்துடன் தீக்குளிக்க சொல்லும் இராமன் வால்மீகி முதல் அனைவராலும் கண்டிக்கப்படுவதாகவே காட்டுகிறது. இறை அவதாரமான ஸ்ரீ இராமன் கூட இந்த மண்ணின் புதல்வியான சீதையை தன்னிச்சைப்படி நடத்திவிட முடியாது என்பதனை நீங்கள் மறுவாசிப்பெல்லாம் செய்யாமல் உள்ளதை உள்ளபடி வாசித்தே உள்வாங்கிக்கொள்ளலாம். அவ்வளவு ஏன் மல்லி சீதாயணம் அப்படீன்னு சொன்னதுக்கு அவ்வளவு பரவசம் அடைஞ்சீங்களேவான்மீகி முனிவரே இராமயணத்தை என்னன்னு சொல்றாரு தெரியுமா?”

ராமசாமிமெர்வின் நல்ல நக்கல் பன்னுற.இதில் சொல்லப்பட்ட சீதை சாதாரண பெண்மணி இல்லை.ஒரு நாட்டின் இளவரசி.அதனால் அவன் தட்ட முடியாது.ஆனால் அப்படிப்பட்ட துணிச்சலான பெண்ணையே மனமுடைந்து போகும் அளவுக்கு சோதித்த்வன் இந்த இராமன்.சரி இராமாயணம் ஒரு இதிகாசம் இதில் இருந்து இந்துக்கள் சட்டம் ஒன்று திரட்டப்படவில்லை.இந்து சட்டம் என்பது மனுச்சட்டம் என்று சொல்லப்படுகிற மனுதர்ம சாஸ்திரம் என்பதில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது.அது பெண்களை பற்றி என்ன சொல்லுதுன்னு

ஒன்னு ரெண்டு உதாரணம் பார்ப்போமா?

“பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், பௌவனத்திரி கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல், ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது” (மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148) இதன்மூலம் பெண் என்பவர் தன் சொந்த அறிவைப் பயன்படுத்தக் கூடாது; அடுத்தவர்கள் ஆணையின்கீழ் அடங்கிக் கிடக்க வேண்டும் என்று பெறப

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அகப்பயணம் அரவிந் நீ, அல்லேலுயா விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s