Daily Archives: ஏப்ரல் 8, 2008

"ஹேண்ட் பிரீ மொபைல் போன்’ ஸ்ரீசாய்ராம் மாணவர்கள் அசத்தல்

சென்னை : கண் பார்வையற்றோர், காது கேளாதோர், கை இழந்தோர் போன்ற ஊனமுற்றவர்கள், நடைமுறையில் சகஜமாக பயன்படுத்தக் கூடிய அளவிற்கு பல்வேறு வகையான நவீன கருவிகளை தயாரித்து ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுõரி மாணவ, மாணவிகள் அசத்தியுள்ளனர். “ஸ்மார்ட் கிலவ்’: வாய்பேச முடியாத மற்றும் முதியவர்களின் கை அசைவுகளை கொண்டு அவர்களுக்கு முறையாக பேசும் திறனையும், சிரமமின்றி தங்களின் உந்து வண்டியை இயக்கும் திறனையும் இந்த “ஸ்மார்ட் கிலவ்’ மூலம் அளிக்க முடியும். இந்த கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் தயாரிக்கப்படும் போது பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடுகள் நல்ல முன்னேற்றத்தை காணும். இந்த கண்டுபிடிப்புக்கள் சிக்கனமாகவும், உபயோகிக்க எளிதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பரிமாண கருவி: எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் முருகப்பன், ஸ்ரீஹரி, கார்த்திக், பாலாஜி ஆகிய மாணவர்கள் இரண்டு பரிமாண வடிவங்களை காட்டும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இவற்றின் மூலம் பல வடிவங்களை உருவாக்க முடியும். இதை முப்பரிமாண அமைப்பில் தயாரிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

அறுவை சிகிச்சைகளின் போது நமது பரிமாண வடிவத்தை காண முடியும். அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த புராஜெக்ட் போட்டியில் இத்துறை மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோபாட் செஸ் போர்டு: பார்வையற்றோரும் செஸ் போட்டியில் சாதனை படைக்கலாம் என்ற நோக்கத்தில் ரோபாட் கருவியின் மூலம் சதுரங்கம் விளையாடும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதன் மூலம் “கீ பேட்’ உதவியுடன் ஆரம்ப இடத்தையும், சேர வேண்டிய இடத்தையும் கூறிவிட்டால் போதும். செயல்பாடுகள் ரோபாட் உதவியில் நிறைவேற்றப்படும். இதனால் பார்வையற்றோர் வழக்கத்தைவிட சிறப்பான முறையில் செஸ் விளையாட முடியும். “அபோனிக் ஆர்டிகுலேடர்’: காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு உதவும் வகையில் “அபோனிக் ஆர்டிகுலேடர்’ என்னும் நவீன கருவியை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

குறைந்த செலவில் இந்த கருவியை வடிவமைக்க முடியும். கடந்த பிப்ரவரி மாதம் சி.ஐ.ஐ., நடத்திய தென்னிந்திய அளவிலான பொறியியல் மாணவர்களுக்கான போட்டியில் இக்கருவி முதல் பரிசினை பெற்றது. ஹேண்ட் பிரீ மொபைல்போன்: தகவல் தொழில்நுட் பத்துறையில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் கை இழந்தோர், கண் பார்வையற்றோர் சுலபமாக பயன்படுத்தும் வகையில், “ஹேண்ட் ப்ரீ மொபைல் போன்’ ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த வகை மொபைல் போன் வாய்வழி இயங்கக்கூடியது. அழைப்பு மற்றும் தகவல் கூறும் முறையை குரல் மூலமே செயலாற்றும் திறன் கொண்ட, இந்த மொபைல்போன் ஊனமுற்றவர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை..

http://www.dinamalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சென்னை, ஹேண்ட் பிரீ மொபைல் ப

புளியை வைத்து வானிலை அறிக்கை!

சேலம்: “பொங்கும் காலத்தில் புளி காய்க்கும். மங்கும் காலத்தில் மாங்காய் காய்க்கும் என முன்னோர் கூறியுள்ளனர். செழிப்பான காலத்தில் புளியும், வறட்சியான காலத்தில் மாங்காயும் அதிகமாக காய்க்கும் என்பது இதன் பொருள். இந்த ஆண்டு பாலமலையில் மாமரங்களில் வழக்கத்தை விட குறைவாக பிஞ்சு பிடித்துள்ளது. புளி இந்த ஆண்டு கூடுதலாக விளைந்துள்ளது.
எனவே, இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்கின்றனர் மலை கிராம மக்கள். கொளத்துõர் ஒன்றியம் பாலமலையில் உள்ள கடுக்காமரத்துகாடு, தலைக்காடு உட்பட ஏராளமான கிராமங்களில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. அனைத்து மரங்களிலும் புளி அமோகமாக விளைந்துள்ளது.
பாலமலையில் விளையும் புளிக்கு புளிப்பு சுவை அதிகம் என்பதால் இதன் விலையும் அதிகம்.
ஒரு கூடையில் 15 கிலோ முதல் 18 கிலோ வரை புளி இருக்கும். இது 350 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

http://www.dinamalar.com/Tamilagaserapuseithigal/t5.asp

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சேலம், புளி, வானிலை

நான் பேசியதில் என்ன தவறு?கேட்கிறார் ரஜினி

http://epaper.dinamalar.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஓகேனக்கல், கன்னடம், ரஜினி

ரஜினிபேச்சுக்கு நடிகை ஜெயமாலா எதிர்ப்பு

சென்னை, ஏப்.8-

ஒகேனக்கல் கூட்டுகுடி நீர் திட்டத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்ட கன்னட வெறியர்களை கண்டித்து தமிழ் திரையு லகினர் கடந்த 4-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதில் ரஜினி பங்கேற்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கன்னடர்களை கண்டித்து பேசினார்.

அவரது பேச்சுக்கு கர்நாட கத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கன்னட அமைப்புகள் ரஜினியின் கொடும்பாவியை எரித்தனர். ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த ரஜினி கன்னடர் மனம் புண்படும்படி எதுவும் பேசவில்லை என்று மறுத்தார்.

ஒகேனக்கல்லை சுற்றி யுள்ள எல்லைகள் தொடர் பாக தமிழ்நாட்டுக்கும் கர்நாட காவுக்கும் 50ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் செய் யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு மாநில மக்களும் அமைதியாக வாழ விடாமல் வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்க வேண்டாமா என்று தான் கேட்டேன். திரையரங்குகளை தாக்குவது, பஸ்களை எரிப் பது போன்ற செயல் களில் ஈடுபடுவோரை மனதில் வைத்துதான் அதை சொன் னேன். கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. அந்த அளவுக்கு நான் முட்டாள் அல்ல என்று ரஜினி கூறினார்.

ரஜினியின் பதில் திருப்தி அளிக்க வில்லை என்று கன்னட நடிகை ஜெயமாலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- ரஜினி பேசிய பேச்சினால் கன்னடர்கள் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று கூறி மறுபடியும் அவர்தவறு செய்ய வேண்டாம்.

உண்ணாவிரதத்தில் ரஜினி பேசிய பேச்சின் வீடியோவை அவர் மீண்டும் பார்க்க வேண்டும் கன்னடர்களை ரஜினி இழிவாக பேசியது உண்மை.

எனவே அவர் கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் அதுவே இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இவ்வாறு ஜெயமாலா கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் ரஜினி பேச் சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளார். ரஜினி பேச்சு கன்னட மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அவர் மீது ஆத்திரமும் அடைந்துள்ளனர். ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி இருக்கிறார்.

அவர் மன்னிப்பு கேட்ப தால் அவரது பெருந் தன்மை உயருமே தவிர அதற்கு பாதிப்பு ஏற்படாது.கன்னட மக்களின் மனதை புண்படுத்தும் வார்த்தையை ரஜினி பயன்படுத்தி இருந்தால் அவர் மன்னிப்பு கேட்பதே சரியானதாக இருக்கும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கன்னட மக்களை, ஜெயமாலா, ரஜினி

கிறிஸ்தவ தேவாலயம் மீது சிங்கள ராணுவம் தாக்குவதை தடுத்து நிறுத்துங்கள் : நார்வே அரசுக்கு விடுதலைப்புலிகள் கடிதம்

கொளும்பு, ஏப். 8-

விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் நார்வே அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒரு வருட கால மாக சிங்கள படை வன்னி பகுதியை ஆக்கிரமித்து போர் தொடுத்து வருகிறது. மன்னார் மாவட்டதில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகு கிறிஸ்தவ தேவாலயத்தை இடைவிடாது தாக்கி வருகின்றனர். எப்படியாவது அந்த ஆலயத்தை தகர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படுகின்றனர்.

இது நூற்றாண்டு பழமை வாய்ந்த திருத்தலம். மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் வழிபடும் பகுதி. இந்த ஆலயத்தில் தினமும் குண்டுகளை வீசுகின்றனர். பீரங்கி, டாங்கி, மூலமும் தாக்குதல் நடக்கிறது. இதில் ஒரு பகுதி இடிந்து விட்டது. கண்மூடித்தனமாக நடக்கும் இந்த தாக்குதலால் அங்கு தஞ்சம் அடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும், ஆலய மதகுருமார்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்களபடை ஆலயத்தின் மீத தாக்குவதை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் மத சின்னங்களை அழிப்பது அந்த மதத்தை பின்பற்றும் மக்களை புண்படுத்துவதாக உள்ளது. உலக நாடுகள் உதவியோடு இந்த தாக்குதலை நிறுத்த நார்வே அரசு தேவையான முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கிறிஸ்தவ தேவாலயம், சிங்கள ராணுவம், விடுதலைப்புலிகள்

ஹாலிவுட்"லவ்குரு" படம் இந்து அமைப்ப்புக்கள் எதிர்ப்பு

http://epaper.dinamalar.com/Web/Article/2008/04/08/012/08_04_2008_012_015.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து அமைப்ப்புக்கள, படம், லவ்குரு, ஹாலிவுட்

விடுதலைப் புலிகள் அமேரிக்காவில் தளம்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அமேரிக்கா, விடுதலைப் புலிகள்