சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?


சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?

லட்சுமண பகவான் ஒருநாள்….
அய்யர்: ஆகாயம் படைச்சார் பூமியும் படைச்சார்வாயு அக்கினி ஜலமும் படைச்சுட்டு…கடைசியாகத்தானே மனுஷாளப் படைச்சார் கடவுள் உலகத்தப் படைச்சார்

ராமசாமி(பெரியார்): இருக்கட்டும். கடவுள யாரு ஓய் படைச்சார்?
லட்சுமணன்: கடவுள யாரு படைக்கமுடியும் ஓய். அவா சுயம்பு தானா உண்டானவா – தான்தோன்றி
ராமசாமி: கண்காணா உன் கடவுள்தான் தோன்றி ஆகிறப்போ -கண் கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?

லட்சுமணன்: அசுரகுணம் உள்ளவாதான் – இப்படி அபஸ்வரமாக் கேள்வி கேப்பா…தேவகுணம் இருந்தா இப்படிக் குதர்க்கமாப் பேசமாட்டா ஒம்ம அசுர குணம் அழிகநீர் தேவகுணம் பெறுக…

ராமசாமி: இந்திரன் யாரு ஓய்…
லட்சுமணன்: தேவர்குலத் தலைவன்
ராமசாமி: இராவணன் யாரு ஓய்
லட்சுமணன்: அசுரர் குல அரசன்

ராமசாமி: காட்டில் இருந்த முனிவன் மனைவியின் கற்பைக் கெடுத்தவன் இந்திரன்.கவர்ந்து சென்ற மாற்றான் மனைவியைக் கற்போடு விட்டவன் இராவணன் இப்பச் சொல்லும் குணத்தில் உயர்ந்தவன் யார்?தேவனா?அசுரனா?

லட்சுமணன்: அசுரகுலத்திலயும் அப்பப்போ நல்லவா இருந்திருக்காளே!நந்தனுக்கு மோட்சம் கொடுக்கலியோ நடராஜப் பெருமான்?

ராமசாமி: நந்தனுக்கு மோட்சம் கொடுத்தீரோ தீயிட்டு எரிமூட்டி மோசம் புரிந்தீரா? மோட்சம் தந்தது மோட்சம் தந்தது முற்றிலும் உண்மையென்றால் – அவன்சந்ததியெல்லாம் சந்நிதி இழந்து சந்தியிலே ஏன் நின்றான்?

லட்சுமணன்: மனுஷாளா இருந்தாமடியா இருக்கணுமோ இல்லியோ? தீட்டுன்னு பெரியவா தெரியாமலா சொன்னா?

ராமசாமி: தீட்டு என்னய்யா தீட்டு… குடிக்கிற தண்ணியத் தொடப்படாது குளத்துலயும் கால் படப்படாது எப்படிய்யா வரும் சுத்தம்? ஒங்க மேலதான் குத்தம் குளிக்காத பசுவக் கும்புடுறீங்க – அதக் குளிப்பாட்டும் மனுசன ஏனய்யா கொல்றீங்க?

ராமசாமி: புராணம் இதிகாசம் – வெறும் பொய் மோசம் பொய் பேசிப் பேசியே பொய்யாப் போச்சே தேசம்!!

லட்சுமணன்: புராணம் இதிகாசம் பொய்யில்லேங்காணும்

ராமசாமி: அப்படியாங்காணும் ஆதாரம் கூறும்!
லட்சுமணன்: அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்டகோடு மூணும் அப்படியே இருக்குது ஓய் அழியலையே பாரும்
ராமசாமி: ஓகோ! முதுகத் தொட்டதும் மூணுகோடு விழுந்திருச்சோ? ஏங்காணும்! சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா – இல்ல சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா? http://unmaionline.com/20070101/20.htm

1 பின்னூட்டம்

Filed under இராவணன், சீதையை ஸ்ரீராமன், மனைவி, ராமசாமி

One response to “சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?

  1. Anonymous

    It is indecent to retelecast what unmai published in your blog.

    Each and everyone first look and try to clear their dust.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s