அழகிய பெண்ணா? கம்ப்யூட்டர் சொல்லி விடும்
வாஷிங்டன், ஏப். 7: மனைவியையோ, காதலியையோ பார்த்து Ôபொய் சொல்லப் போறேன்… நீ ரொம்ப அழகியடிÕ என்றெல்லாம் இனி நக்கல் அடிக்க முடியாது. ஆம். ஒருவரது தோலின் தன்மை, அணியும் உடை ஆகியவற்றைப் பொறுத்து அவர்களது அழகை இனி கம்ப்யூட்டர் சொல்லி விடும்.
இப்படி ஆண்களின் அடாவடி Ôதீர்ப்புகளில்Õ இருந்து பெண்களைக் காப்பாற்றும் தொழில்நுட்பத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கம்ப்யூட்டருக்குச் சொல்லிக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு பெண்ணின் மேக்கப், நடை, உடை பாவனைகளை வைத்து அழகை கம்ப்யூட்டர் மதிப்பிடும்.
கம்ப்யூட்டரை மனிதனின் தனிப்பட்ட பயன்களுக்குக் கொண்டு செல்லும் ஆராய்ச்சியின் ஒரு கட்டமாக இதை விஞ்ஞானிகள் செய்து காட்டியுள்ளனர். செயற்கையான அறிவுத் திறனை கம்ப்யூட்டரில் பெற இது உதவும்.
ÔÔஇதுவரை ஒருவரது அடிப்படை முக அமைப்பை அடையாளம் காண்பதற்கு கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. புதிய சாப்ட்வேரில் உளவியல்ரீதியான தீர்ப்புகளை கம்ப்யூட்டர் அளிக்கும்ÕÕ என்றார் இஸ்ரேலிய இந்தியரும் டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானியுமான அமித் காகைன்.
ÔÔமுதல் கட்டமாக 30 ஆண்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அதே வயதுடைய 100 முகங்களைக் காட்டி அழகைப் பட்டியலிடக் கேட்டு குறித்துக் கொண்டு ரேட்டிங் தரப்பட்டது.
அதே முகங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து முகத்துக்கு கூடுதல் மென்மை, தோல் பளபளப்பு, தலைமுடி வண்ண மாற்றம் செய்து கம்ப்யூட்டரிடம் ரேங்கிங் பெறப்பட்டது. மனித உளவியல் மற்றும் கம்ப்யூட்டரின் கணிப்பு இரண்டின் முடிவுகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
அதில் மனிதர்களின் தீர்ப்பைப் போலவே கம்ப்யூட்டரின் முடிவுகளும் அமைந்திருந்தது ஆச்சரியம்.
அழகை தனது மொழியில் கிரகித்து ஏற்கனவே பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பொருத்திப் பார்த்து தீர்ப்பளிக்கும் வகையில் இந்த சாப்ட்வேர் உள்ளது என்றும் அமித் தெரிவித்தார்.
எனவே, Ôசே… இந்த டிரஸ் உனக்கு எடுப்பா இல்லை, தலைமுடி கலர் சகிக்கல என்றெல்லாம் இனி சொல்லி அழகியைத் தீர்மானித்து விட முடியாது. கம்ப்யூட்டரில் படத்தை பதிவு செய்து மவுசைக் கிளிக்கினால் உங்கள் பொய்க் கருத்து அம்பேல் ஆகி, உதை பட வாய்ப்பு அதிகம், எச்சரிக்கை!
http://dkn.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Dinakaran%20E1#