1. அமெரிக்காவிலுள்ள இண்டியானா பல்கலைக் கழகத்திலுள்ள முதன்மை நூலகம் ஆண்டுதோறும் மூழ்கிக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால், இதை கட்டும் பொழுது இன்ஜினியர்கள் அங்கு வைக்கும் புத்தகங்களின் எடை மற்றும் அவை ஆக்கிரமிக்கும் இடம் இவற்றை கணக்கிடுவதில் தவறு செய்துவிட்டனர். அதனால்தான் இந்த நிலமை. |
![]() |
2. நைஜீரியாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள விவசாய நகரத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு ஜோடி இரட்டையர்கள் இருந்தனர். பல குடும்பத்தில் இரண்டு ஜோடி இரட்டையர்கள் இருந்தனர். அவ்வூர் தலைவரான 71 வயதுடைய ஒலைடி அகின்யமிக்கு மூன்று ஜோடி இரட்டையர்கள் பிறந்தனர். அவருடைய தந்தைக்கு பத்து ஜோடி இரட்டையர் பிறந்தனராம்! |
![]() |
3. பிரான்ஸ் நாட்டில் லாப்லுõ என்ற இடத்தில் 1968ம் ஆண்டு இடியுடன் கூடிய புயல் ஏற்பட்டது. அப்போது மின்னல் ஒன்று ஆட்டு மந்தையை தாக்கியது. அதில் இருந்த கறுப்பு ஆடுகள் அனைத்தும் இறந்தன. ஆனால், வெள்ளை ஆடுகளை மட்டும் மின்னல் தாக்கவில்லை. மின்னலே நீ கூட கறுப்பு, வெள்ளை வித்தியாசம் பார்ப்பியா? |
![]() |
4. ஜெர்மென் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருத்தி தன் செல்ல நாயின் முடிகளை கொண்டு சில ஆடைகளை தயாரித்து வியாபாரம் செய்தார். தன் செல்ல நாயின் முடியை தொடர்ந்து எடுத்து உரிய முறையில் பாதுகாத்து பிறகு இவைகளைக் கொண்டு ஸ்கார்ப், ஸ்வெட்டர், க்ளவ்ஸ் தயாரிக்கிறார்.
|
![]() |