எஸ்.எம்.எஸ். மூலம் 2 மனைவிகளை 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த முஸ்லீம் வியாபாரி


 

கோலாலம்பூர், ஏப். 3-

மலேசியாவில் உள்ள தெரங்கானு மாநிலத்தை சேர்ந்தவர் ரோஸ்லன் (வயது 44) வியாபாரி. இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர்.

இரு மனைவிகளுமே ரோஸ்லனை விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். அவர்கள் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள். எனவே முஸ்லிம் கோர்ட்டின் ஷரியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த கோர்ட்டு விதிப்படி மனைவிகள் விவாகரத்து கேட்டால் உடனே விவாகரத்து கொடுத்து விட வேண்டும்.

அதன்படி ரோஸ்லனை நீதிபதி 2 மனைவிகளுக்கும் விவகாரத்து கொடுக்க சொன்னார். இரு மனைவிகளும் கோர்ட்டுக்கு வரவில்லை. எனவே செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து கொடுக்க உத்தரவிடப்பட்டது.

ரோஸ்லன் நீதிபதி முன்னிலையில் 2 மனைவி களுக்கும் `தலாக்', என்ற விவாகரத்துக்கான வார்த்தையை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பினார். 3 நிமிடத்தில் இந்த விவகாரத்து முடிந்தது.

இது பற்றி அவர் கூறும்போது, நான் இருமனைவிகளையும் விவாகரத்து செய்ய விரும்பவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து என்னை விலக்கி கொள்ள முடிவு செய்து விட்டனர். கடவுள் அனுமதித்தால் நான் வேறு திருமணம் செய்து கொள்வேன்'' என்றார்
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பின்னூட்டமொன்றை இடுக