Daily Archives: ஏப்ரல் 3, 2008

எஸ்.எம்.எஸ். மூலம் 2 மனைவிகளை 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த முஸ்லீம் வியாபாரி

 

கோலாலம்பூர், ஏப். 3-

மலேசியாவில் உள்ள தெரங்கானு மாநிலத்தை சேர்ந்தவர் ரோஸ்லன் (வயது 44) வியாபாரி. இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர்.

இரு மனைவிகளுமே ரோஸ்லனை விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். அவர்கள் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள். எனவே முஸ்லிம் கோர்ட்டின் ஷரியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த கோர்ட்டு விதிப்படி மனைவிகள் விவாகரத்து கேட்டால் உடனே விவாகரத்து கொடுத்து விட வேண்டும்.

அதன்படி ரோஸ்லனை நீதிபதி 2 மனைவிகளுக்கும் விவகாரத்து கொடுக்க சொன்னார். இரு மனைவிகளும் கோர்ட்டுக்கு வரவில்லை. எனவே செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து கொடுக்க உத்தரவிடப்பட்டது.

ரோஸ்லன் நீதிபதி முன்னிலையில் 2 மனைவி களுக்கும் `தலாக்', என்ற விவாகரத்துக்கான வார்த்தையை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பினார். 3 நிமிடத்தில் இந்த விவகாரத்து முடிந்தது.

இது பற்றி அவர் கூறும்போது, நான் இருமனைவிகளையும் விவாகரத்து செய்ய விரும்பவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து என்னை விலக்கி கொள்ள முடிவு செய்து விட்டனர். கடவுள் அனுமதித்தால் நான் வேறு திருமணம் செய்து கொள்வேன்'' என்றார்
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இண்டர்நெட்டில் இறுதிசடங்கு ஒளிபரப்பு

லண்டன், ஏப்.3-

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போகலாம். இந்த வேதனை வாழ்நாள் முழுவதும் மனதை வாட்டும்.

இதை போக்க இந்தியாவில் உள்ள சவுதாப்டன் நகரில் உள்ள மயான நிர்வாகம் முன்வந்துள்ளது. அங்கு நடக்கும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை இண்டர்நெட் மூலம் நேரடி ஒளிபரப்பு செய் கிறார்கள்.

அதை உலகின் எந்த மூலை யிலும் இருந்து பார்த்து கொள் ளலாம். ரூ.7 ஆயிரம் கட்டணம் செலுத்தினால் இறுதி நிகழ்ச் சிகளை ஒளிபரப்பு செய் கிறார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வேலைக்காரனுக்கு ரூ.1100 கோடி சொத்தை எழுதி வைத்த வியாபாரி: 55 வருட விசுவாசத்துக்கு கிடைத்த பரிசு

 

ஆமதாபாத், ஏப்.3-

குஜராத் மாநிலம் ஆம தாபாத்தில் உள்ள மித கல்லி பகுதியில் வசித்தவர் பதலால் ஜவேரி. இவர் குஜராத் மாநிலத்தின் பாரம்பரியம் மிக்க பணக்கார வைர வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர்.

ஜவேரிக்கு சொந்தமாக ஆமதாபாத்தில் வைரநகை கடைகள், வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. இந்தியாவில் உள்ள ராஜவம்சத்தினர் வெளிநாட்டு பிரபலங்களுக்கு இவர் பிரத்யேகமாக வைர நகைகள் செய்து கொடுப்பது வழக்கம். இதன் மூலம் இவருக்கு கோடிக்கணக்கில் பணம் புரண்டது.

ஆமதாபாத் நகரில் பெரும்பாலான இடங்களில் இவருக்கு சொத்துக்கள் உள்ளது. ஆனால் அவற்றை அனுபவிக்க இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இவரிடம் நாராயண்பாய் தன்தனி என்பவர் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 8. ஜவேரி வீட்டில் உள்ள செல்ல நாய்களை கவனிக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்திருந்தனர்.

நாராயண் வளரவளர ஜவேரியின் செல்ல மகன் போல மாறினார். ஜவேரி வீட்டின் அனைத்து வேலைகள் மற்றும் நகை கடைகளின் நிர்வாகத்தை கவனிக்கும் அளவுக்கு முன்னேறினார். அவரது விசுவாசத்தை கண்ட ஜவேரி, அவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

நாராயணுக்கு 3 மகள்கள் பிறந்தனர். அவர்களுடன் ஜவேரி பங்களாவின் அவுட் ஹவுசில் நாராயண் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜவேரியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மீது அவரது உறவினர்கள் குறி வைத்தனர். சொத்துக்களை எழுதி தருமாறு கேட்டனர்.

உறவினர்கள் யாருக்கும் சொத்துக்களை கொடுக்க மறுத்த ஜவேரி சொத்துக்கள் பற்றி யாரிடமும் எந்த தகவலும் சொல்லவில்லை. இதற்கிடையே திடீரென ஒரு நாள் நாராயணை அழைத்த ஜவேரியும் அவரது மனைவியும் நிறைய பேப்பர் கட்டுக்களை கொடுத்து "இதை பத்திரமாக வைத்துக்கொள்'' என்று கூறி கொடுத்தனர்.

அப்போது கூட அவர்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை எழுதி வைத்து இருப்பதாக சொல்லவில்லை. அதன்பிறகு திடீரென ஒரு நாள் ஜவேரி மனைவி இறந்து போனார். ஜவேரி நோய் வாய்ப்பாட்டு படுத்த படுக்கையானார்.

இந்த நிலையில் நாராயண் தன் மகள்கள் நீருவர்ஷா, அருணா ஆகிய மூவருக்கும் மிக எளியமுறையில் திருமணம் நடத்தி முடித்தார். மகள்கள் தங்கள் கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு ஜவேரியை பக்கத்தில் இருந்து அவர் கவனித்து வந்தார். 1987-ம் ஆண்டு ஜவேரி மரணம் அடைந்தார்.

அதன்பிறகு நாராயண் தன் அவுட்ஹவுசில் தொடர்ந்து வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த பொருட்களை 3 மகள்களும் சுத்தம் செய்தனர்.

அந்த சமயத்தில் நாராயண் ஒரு பெட்டிக்குள் பூட்டி வைத்திருந்த பேப்பர்கட்டுக்களை எடுத்து பிரித்து பார்த்தனர். அங்குதான் 3 சகோதரிகளுக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வைர வியாபாரி ஜவேரி தன் எல்லா சொத்துக்களையும் நாராயணுக்கும் அவரது வாரிசுகளுக்கும் எழுதி வைத்திருந்தார்.

ஜவேரி இந்த உயிலை எழுதியபோது அவரது சொத்துக்களின் மதிப்பு ரூ.364கோடி, தற்போது இதன் மதிப்பு 1100 கோடி ரூபாய். இதை அறிந்த 3 சகோதரிகளும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்து போனார்கள்.

ஜவேரியின் கோடிக்கணக்கான சொத்துக்களை அவரது உறவினர் ஒருவர் மேற்பார்வை பார்த்து வருகிறார். அவரிடம் இருந்து சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 சகோதரிகளும் கோர்ட்டு உதவியை நாட தீர்மானித்துள்ளனர்.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சிக்கிட்டு கொடுக்குங்றது சரியாத்தான் இருக்கு!
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

‘ஸ்கூட்டி டீன்ஸ்"எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

டி.வி.எஸ். நிறுவனம் ‘ஸ்கூட்டி டீன்ஸ்” எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கூட்டருடன் டி.வி.எஸ். பொது மேலாளர் (மார்கெட்டிங்) எஸ். சீனிவாஸ்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under 'ஸ்கூட்டி டீன்ஸ், எலக்ட்ரிக் ஸ்கூட்டர, டி.வி.எஸ். நிறுவனம்

உடான்ஸ் இந்து சாமியாரின் உடான்ஸ் பேட்டி

கைதான சாமியார் வாக்குமூலம்
பெண் உடலில் பேய் புகுந்து என்னை பழி வாங்குகிறது

வேலூர், ஏப். 3: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதான குடியாத்தம் சாமியார், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணைப்பகுதியான ராக்கிமானப்பள்ளியில் 12 ஏக்கரில் கவுஸ் அலிஷா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவராக சலீம் கவுஸ் (48) என்பவர் உள்ளார்.

இந்த ஆசிரமத்தில் 35 பேர் கூட்டுக் குடும்பம் போல வசிப்பதாக கூறப்படுகிறது. இதில் 6 பேர் கணவன் மனைவி. தனியார் கல்லூரி மாணவர்கள் பலரும் இங்கு தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் வியாழனன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறுமாம். இதில், பலர் கலந்துகொண்டு தங்கள் சலீம் கவுசிடம் குறி கேட்பார்களாம். வேற்று மதத்தைச் சேர்ந்த சலீம் கவுஸ், இந்து மத சம்பிரதாயப்படி ஜோதிடம், கைரேகை பார்ப்பது, பேய் பிசாசுகளை ஓட்டுவதாகவும் கூறி வந்துள்ளார்.

ஆசிரமத்தில் தங்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் நோட்டில் இரவு நேர கனவுகளை பக்தர்கள் எழுதி வைப்பார்களாம். மறுநாள் அந்த கனவுகளுக்கான பலன்கள் குறித்து சலீம் கவுஸ் விளக்கம் கொடுப்பாராம்.

இந்நிலையில், ஆசிரமத்தில் அம்மூரை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஜம்புலிங்கத்தின் மகன் கபாலி(24) என்பவர் தனது மனைவி மஞ்சுமாதா(20)வுடன் தங்கியுள்ளார்.

கடந்த மாதம் இளம்பெண் மஞ்சுமாதாவை அழைத்து, சலீம் கவுஸ் தனது கால்களை பிடித்து விடும்படி கூறினாராம். அதற்கு அவர் மறுக்கவே மிரட்டி கால்களை பிடித்துவிட செய்தாராம்.

இதுகுறித்து, குடியாத்தம் தாலுகா போலீசில் மஞ்சுமாதா புகார் செய்தார். அதில் பாலியல் ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் குடியாத்தம் டி.எஸ்.பி. அருளரசு, தாலுகா இன்ஸ்பெக்டர் வின்சென்ட்பால் ஆகியோர் விசாரணை நடத்தி சலீம் கவுசை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் சாமியார் அளித்துள்ள வாக்குமூலத்தில், ÔÔமஞ்சுமாதாவுக்கு பேய் பிடித்துள்ளது. அதை விரட்டினேன். அந்த பேய்தான் இப்போது மஞ்சுமாதா உடலில் மீண்டும் புகுந்து என்னை பழிவாங்குகிறது. இது எனக்கும், பேய்க்கும் நடக்கும் போராட்டம்ÕÕ என கூறியுள்ளார்.

http://www.dinakaran.com/daily/2008/apr/03/tamil.asp

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து சாமியாரின், குடியாத்தம், சலீம் கவுஸ், ஜம்புலிங்கத்தின் மக

பிளாஸ்டிக் பேப்பர் மாதிரி இருக்குது இந்த மீன்

காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர் வலையில் சிக்கிய மருத்துவ குணம் வாய்ந்த ஜெல்லி மீன். இது பதப்படுத்தப்பட்ட நிலையில் கிலோ ரூ.1000 வரை விற்கப்படுகிறது.

http://tm.dinakaran.co.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under காரைக்கால் கிளிஞ்சல, ஜெல்லி மீன், பிளாஸ்டிக், மீனவர், மீன்

அப்துல் கலாமிற்கு அரஸ்ட் வாரண்ட்!

உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது குற்றமா?
செவ்வாய், 26 பிப்ரவரி 2008( 17:10 IST )
webdunia photo FILE

ஆம், நீதி மன்றத்திற்கஎதிராகவும், நீதிபதிகளுக்கஎதிராகவுமஉண்மையைககூறுவதகுற்றம்தான், அதற்காமன்னிப்பகேட்காவிட்டாலசிறைததண்டனவழங்கப்படுமஎன்றகூறியுள்ளதஇந்தியாவினஉச்நீதிமன்றம்!

நமததேவாழ்விலஊழலஇல்லாஇடமஇல்லஎன்பதஇந்தியர்களாகிநாமநன்கஉணர்ந்திருந்தாலும், அதநீதிபதிகளையும், அதனமூலமநீதிததுறையையுமஅரித்துககொண்டிருக்கிறதஎன்பதஅறியுமபோதகவலைப்படுகின்றோம். ஏனெனில், அரசியல், அரசாங்கம், ஆட்சி, நாடாளுமன்றம், நிர்வாகமஎன்நமதசமூக, அரசியல், பொருளாதாவாழ்விற்கும், இயக்கத்திற்குமஆதாரமாதுறைகளஊழலஅரித்துததின்றதிசைததிருப்பிககொண்டிருக்குமநிலையில், அவைகளமுறைபடுத்தி, சீர்படுத்தி, அரசமைப்பரீதியாஅவைகளிற்குறிபாதையிலஇயங்கிடசசெய்யுமஒரகருவி நீதிமன்றம்தான்.

எனவே, நீதித்துறையிலுமஊழலஎன்றறியும்போதநாமபதறுகிறோம். நமதநாட்டினஜனநாயகற்பைககாப்பதஇன்றுவரநீதிமன்றங்கள்தானஎன்நிலையும், நம்பிக்கையுமநமக்குள்ளது.

நமதசமூக, அரசியல், பொருளாதாவாழ்வினஅனைத்தபரிணாமங்களினமீதுமமுழுமையாமுறைபடுத்தஅதிகாரமகொண்நீதித்துறையுமஊழலிற்கஆட்பட்டவருகிறதஎன்கின்தகவல்களவரததொடங்கிவிட்நிலையில், அதிர்ச்சிததரத்தக்ஒரஊழலவெளிக்கொணர்ந்தாரபத்திரிக்கையாளரஒருவர்.

 
அப்துலகலாமிற்கஅரஸ்டவாரண்ட்!

 
webdunia photo FILE
குடியரசுததலைவராஅப்துலகலாமும், உச்நீதிமன்றத்தினதலைமநீதிபதியாி.என். காரேயுமஇருந்தபோது, அவர்களுக்கஎதிராகுஜராதமாநிநீதிபதி ஒருவரகைதஉத்தரவுகளைபபிறப்பித்தார்! எந்தககுற்றத்திற்காக? யாரசெய்புகாரினபேரில்? என்றகேட்கததோன்றுகிறதா?

யாருமஎந்தபபுகாருமஅளிக்கவில்லை. காசகொடுத்தாலயாருக்கஎதிராவேண்டுமானாலுமகைதஉத்தரவபெமுடியும்… என்றகூறப்பட்டதநிரூபிக்க, தொலைக்காட்சியினசெய்தியாளரவிஜயசேகர், இதைய'பணியாகசசெய்யும்' ஒரவழக்கறிஞரைபபிடித்தஅவரிடமூ.40,000 பணத்தைககொடுத்து, அன்றகுடியரசுததலைவராஇருந்அப்துலகலாமிற்கஎதிராகவும், உச்நீதிமன்தலைமநீதிபதியாஇருந்ி.என். காரே-க்கஎதிராகவுமகைதஉத்தரவுகளைபபெற்றார்.

பணத்தைககொடுத்தால்… எந்வழக்கு, விசாரணையுமஇன்றி கைதஉத்தரவைபபெமுடியுமஎன்பதஆதாரப்பூர்வமாநிரூபிக்க, இதனைசசெய்தஅததொலைக்காட்சியிலுமஒளிபரப்ப, நீதிமன்றத்தினநிலகுறித்தநாட்டிலபெருமசர்ச்சஏற்பட்டது.

நீதிததுறையிலுமஊழலவேர்விட்டுபபரவததொடங்கிவிட்டதஎன்பதையதனதமுயற்சியினமூலமசெய்தியாளரவிஜயசேகரநாட்டிற்கதெரியப்படுத்தினார். உண்மையமிஆதாரப்பூர்வமாவெளிக்கொணர்ந்அவரபாராட்டாமல், அவரமீதகுற்றவியலவழக்கதொடர்ந்து, மன்னிப்புககேள்… இல்லையென்றாலதண்டனஎன்றகூறி, மன்னிப்பகேட்பதற்கு 6 மாகாஅவகாசத்தையுமஅளித்துள்ளதஉச்நீதிமன்றம்!
 
 
"உயரபதவி வகிப்பவர்களுக்கஎதிராகககூஎந்புகாருமஅளிக்கப்படாமல், வழக்குபபதிவசெய்யப்படாமலகைதஉத்தரவபெமுடியுமஎன்நிலஉள்ளதையவிஜயசேகரினநடவடிக்கவெளிப்படுத்தியுள்ளது" என்றும், "பொதநோக்கத்துடனேயஅதமேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றுமஅவரசார்பாவாதிட்வழக்கறிஞரஎடுத்துககூறியதநிராகரித்துவிட்உச்நீதி மன்றத்தினதலைமநீதிபதி ே.ி. பாலகிருஷ்ணன், நீதிபதிகளஆர்.ி. ரவீந்திரன், ே.ி. பஞ்சாலஆகியோரகொண்முதலஅமர்வு, மன்னிப்பவாக்குமூலமதாக்கலசெய்தவழக்கமுடித்துக்கொள்ளுமாறகூறி, அதற்கு 6 மாகாஅவகாசத்தையுமஅளித்துள்ளது.

இதன்மூலமதங்களுக்கஎதிராகுற்றச்சாற்றுகளஉண்மையஆனாலும், அதற்காசட்டப்பூர்வமாவிசாரணைகளுக்கதங்களஉட்படுத்திககொள்முடியாதஎன்றநீதிமன்றமகூறியுள்ளது. "நாட்டிற்கநாங்களநியாயமசொல்லுகிறோம். எங்களுக்கயாருமநியாயமகற்பிக்கககூடாது. நாங்களநியாய, நீதிகளுக்கஅப்பாற்பட்டவர்கள்" என்றமுன்பெல்லாமஅரசர்களகாலத்திலகூறப்பட்டதாவரலாற்றிலபடித்ததையஇந்வார்த்தைகளபிரதிபலிக்கின்றன.

கேள்வி கேட்லஞ்சமபெற்வழக்கில்…

செய்தியாளரவிஜயசேகரசெய்ததைப்போல, கேள்வி கேட்பணமபெற்நாடாளுமன்உறுப்பினர்களஅடையாளமகாட்டெஹல்கஇணையத்தளமரகசிகேமராவைபபயன்படுத்தி, ஆதாரத்துடனஊழலவெளிப்படுத்தி, அதனகாரணமாகுற்றம்சாற்றப்பட்டு, பதவி நீக்கமசெய்யப்பட்உறுப்பினர்களவழக்கதொடர்ந்தபோதஅதனவிசாரித்து, தீர்ப்பையுமவழங்கிஉச்நீதிமன்றம்தான், இப்பொழுதநீதிததுறைக்கஎதிராஅதபொதநோக்கோடநடத்தப்பட்புலனாய்வதவறஎன்றகூறி, உண்மையவெளிக்கொணர்ந்தவரமன்னிப்புககோகேட்கிறதென்றால்… இதநீதியா? அநீதியா?

இந்திஅரசமைப்பசட்டத்தில், ஜனநாயகத்தினதூண்களாஅரசாங்கம், நாடாளுமன்றம், நீதித்துறஆகியகுறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிக்கையநான்காவததூணஎன்றகுறிப்பிடாவிட்டாலும், மக்களினகருத்துரிமையவெளிப்படுத்துமகருவியாபத்திரிக்கைகளஇருப்பதாலும், ஜனநாயகத்தினமூன்றதூண்களுமதங்களதபாதையிலசீராபயணிக்குமகண்காணிப்பாளனாசெயல்படுவதாலுமஅதனஜனநாயகத்தினநான்காவததூணாகருத்தப்படுகிறது.

அதனால்தானபத்திரிக்கைசசுதந்திரமஒரநாட்டினமக்களுக்குள்கருத்துசசுதந்திரத்தினஅளவாகவும், வெளிப்பாடகவுமகருதப்படுகிறது. எங்கெல்லாமபத்திரிக்கைசசுதந்திரமஒடுக்கப்படுகிறதோ, நசுக்கப்படுகிறதஅங்கெல்லாமமக்களினஅடிப்படைசசுதந்திரமாகருத்துசசுதந்திரமஒடுக்கப்படுவதாவும், நசுக்கப்படுவதாகவுமகொள்ளப்படுகிறது.

தனக்கநிகராஅதிகாரமபெற்நாடாளுமன்றத்தினஉறுப்பினர்களுக்கஎதிராகுற்றச்சாற்றினஉண்மையறிய, அததொடர்பாவழக்கவிசாரித்ததீர்ப்பளித்உச்நீதிமன்றம், அப்படிப்பட்ஒரகுற்றச்சாற்றஒரநீதிமன்றத்தினநடவடிக்கதொடர்பானதாஇருக்கும்போது, அதனவெளிப்படையாவிசாரித்ததனமீதாகறையநீக்முற்பட்டிருக்வேண்டுமதவிர, அதமூடி மறைக்குமமுகமாக, உண்மையவெளிக்கொணர்ந்தவரையமன்னிப்பகேட்கககோருவதநியாயமற்றது. கருத்துசசுதந்திரத்தினஆணி வேரஅழிப்பதபோன்றது.

அரசு, நாடாளுமன்றம், நிர்வாகமஆகியவற்றிற்கஎதிராஒவ்வொரநாளுமஉத்தரவுகளைபபிறப்பித்தநீதியநிலைநாட்டுமநீதிததுறை, தனக்கஎதிராகுற்றச்சாற்றஎழும்போதெல்லாமநீதிமன்அவமதிப்பஎனுமசட்வாளைககாட்டி மிரட்டுவதஉண்மையஎதிர்கொள்அஞ்சுமஅதனஅச்உணர்வையும், நீதியஏற்மறுக்குமசகியாமையையுமகாட்டுகிறது.

இந்நிலநீடிப்பதஜனநாயகத்திற்கஉகந்ததல்ல.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அப்துல் கலாம், ஊழல், ஜனாதிபதி, லஞ்சம்

குழந்தைகளும் இன்டர்நெட்டும்

Webdunia
ரேகா, ஸ்ரீதர் இருவரும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் 12 வயது மகன் திவாகர் கம்ப்யூட்டரில் ஆர்வம் காட்டியது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. ரூ. 8,000 தொலைபேசி கட்டணம் வந்த பிறகுதான் திவாகர் பல மணி நேரம் இன்டர்நெட்டில் வலம் வருவது அவர்களுக்குத் தெரிந்தது. மேலும் ஆராய்ந்ததில் அவன் செக்ஸ் வெப்சைட்களைப் பார்ப்பது தெரியவந்தது. இருவருக்கும் அதிர்ச்சி!

குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.

குழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிக்க பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது :
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை. இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது :
குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்.

கம்ப்யூட்டரை பொதுவான இடத்தில் வைப்பது :
கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.

கம்ப்யூட்டரில் செலவிடும் நேரத்தை விதிப்பது :
இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க `பாஸ்வேர்ட்' உதவும்.

இன்டர்நெட் உபயோகத்தை கண்காணிப்பது :
வீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் `சைபர் கஃபே'களுக்குச் செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதை விட கண்காணிப்பது சிறந்தது.

குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.

http://tamil.webdunia.com/miscellaneous/kidsworld/inspirationalarticles/0705/27/1070527016_1.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இன்டர்நெட், கல்வி, குழந்தைகள், பொழுதுபோக்கு, விளையாட்டு