Monthly Archives: மார்ச் 2008

விபச்சார விடுதியில் இருந்த தன் மனைவியை விலை கொடுத்து வாங்கிய கணவர்-உருக்கமான சம்பவம்

 
வெளிநாட்டில் வேலை என விபசாரத்துக்கு விற்பனை: மனைவியை விலை கொடுத்து வாங்கி மீட்ட கணவர்
 
 
கொச்சி, மார்ச். 30-

கேரள மாநிலம் மலப்புரத் தைச்சேர்ந்தவர் சலிம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2 வருடத் துக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார். திடீரென்று சலிமுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட் டது. குடும்பம் நடத்த கஷ்டப் பட்டார். இதனால் அரபு நாட்டில் வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் என மனைவி யோசனை கூறினார்.

இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் டிராவல் ஏஜெண்டு ஒருவரை சந்தித்தனர். அவர் சலிமின் மனைவிக்கு ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி விசா எடுத்து கொடுத்தார். சலிம் மனைவியை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.

மனைவி ஓமன் போய்ச் சேர்ந்ததும் சில நாள் கழித்து கணவருடன் போனில் பேசி சொன்ன தகவல் சலிமுக்கு பேரிடியாக இருந்தது. வீட்டு வேலைக்காக அனுப்பி வைக் கப்பட்ட தன்னை விலை பேசி விபசார கும்பலிடம் விற்று விட்டதாகவும் தன்னால் இங்கு கொடுமை அனுபவிக்க முடிய வில்லை. எந்த நேரத்திலும் உயிரை மாய்த்துக் கொள்வேன்'' என்றார்.

இதையடுத்து சலிம், `உன்னை என்ன விலை கொடுத்தாவது மீட்டு விடுகிறேன்'' என்று கூறி மனைவிக்கு தைரியம் சொன்னார்.

அதன் பிறகு மனைவியை வெளிநாடு அனுப்பி வைத்த அதே ஏஜெண்டு மூலம் சலிமும் விசா எடுத்து ஓமன் நாடு சென்றார். அங்கு பல்வேறு விபசார புரோக்கர்களை மூலம் அணுகி தனது மனைவியின் இருப்பிடத்தை கண்டுபிடித் தார். மனைவி என்பது விபசார கும்பலுக்கு தெரிந்து விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்பதால் வாடிக்கையாளர் போல் சென்று மீட்க திட்ட மிட்டார்.

அதன்படி சலிம் சென்ற போது அவரது மனைவியை ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைத்து இருந்தனர். சலிமை கண்டதும் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பின்னர் சலிம் இந்திய தூதரகம் மூலம் ஓமன் போலீசில் புகார் செய்து தனது மனைவியை மீட்டார்.

முதலில் சலிமின்மனைவி ரூ.70 ஆயிரத்துக்கு விற்கப் பட்டு இருக்கிறார். பின்னர் கேரளா வைச்சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் அவரை ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கி இருந்தார். தினமும் 30 பேர் வரை உல்லாசம் அனுபவித் துள்ளனர். அதற்கு மறுத்த தால் அடித்து உதைத்து சித்ர வதை செய்வார்கள்.

இதுபற்றி சலிம் கூறுகை யில், "எனது மனைவி எனக்கு உயிருடன் கிடைப்பாளாப என்பதே சந்தேகமாக இருந் தது. அவளை நானே விலை கொடுத்து மீட்டு இருக்கிறேன். அவள் எனக்கு உயிருடன் கிடைத்ததே போதும்'' என்றார்.
 

4 பின்னூட்டங்கள்

Filed under கண்வர், பணம், பெண்கள், மனைவி, விபச்சாரம்

ஒடும் ரெயிலில் இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த வீரர் கைது

ஒடும் ரெயிலில் அத்துமீறல்: இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த கடற்படை வீரர்; தட்டிக்கேட்ட டிக்கெட் பரிசோதகரை தாக்கினார்

திருவனந்தபுரம், மார்ச்.30-

கொச்சி கடற்படையில் பணி யாற்றுபவர் அஜித்சிங் (வயது 22). ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் சென்னையில் இருந்து ஆலப்புழை வரும் ரெயிலில் ஆலப்புழை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அவரது இருக்கைக்கு எதிர் வரிசையில் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர்.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை, அஜித்சிங் தனது செல்போன் காமிராவில் படம் பிடித்தார். இதை அந்த குடும்பத்தினர் தட்டிக்கேட்டனர். ஆனால் அஜித்குமார் அதை பொருட் படுத்தவில்லை.

இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் மனோஜ்லாலிடம் இளம்பெண்ணின் குடும்பத் தினர் புகார் செய்தனர். மனோஜ்லால், அஜித்சிங்கை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அஜித்சிங், மனோஜ்லாலை பயங்கரமாக தாக்கினார். இதில் மனோஜ்லாலின் பல் உடைந்தது. மேலும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி மனோஜ்லால் ஆலப்புழை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ஆலப்புழை ரெயில்நிலையம் வந்ததும் அஜித்சிங்கை கைது செய்தனர்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கடற்படை, செல்போன், பெண்கள் போட்டோ, வீரர்

தமிழ்மணத்தில் மீண்டும் ஆபாச தலைப்பில் பதிவுகள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், ஆபாச பதிவுகள், இஸ்லாம், குரான்

ஒரு வாரத்தில் 70 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி

கடந்த ஒரு வாரத்தில் 70 ஆயிரம் புள்ளிகள் குறைந்து என் ரேட்டிங் உயர்ந்துள்ளது.தேன்கூடும்,திரட்டி இந்த இரண்டு வலைதிரட்டிகள் மட்டுமே என் பிளக்கரின் திரட்டும் நிலையில் என்னுடைய ரேட்டிங் உயர்ந்திருப்பது ஆதிக்க வர்கங்களுக்கு ஒரு பேரிடியே.

இதுவரை எனக்கு ஆதரவளித்து வரும் வாசக பெறுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under தமிழ்மண்ம், திரட்டி, தேன்கூடு

தமிழ்மணத்தில் மீண்டும் ஆபாச தலைப்பில் பதிவுகள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், ஆபாச பதிவுகள், இஸ்லாம், குரான்

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ?

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ?(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)

தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி
பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக

தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை

வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் ஜெயில்

சென்னை, மார்ச் 28-
பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:
தினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.
செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
“தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை” என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சூடான இடுகை, செய்தி, தினகரன், தினமலர்

தமிழ்மணத்தில் மீண்டும் திரட்டப்படும் தெய்வமகன் பதிவுகள்(போட்டோவுடன்)

“தமிழ்மணத்தில் மீண்டும் திரட்டப்படும் தெய்வமகன் பதிவுகள்” இந்த தலைப்பை பார்த்தவுடன் ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஓடி வந்து பார்க்கறது தெரியுது.இவனை மறுபடியும் உள்ள விட்டா நம்ம டவுசற மறுபடியும் கழட்டுவான்னு தெரியுமோ இல்லியோ அப்படின்னு பேசிக்கிறீங்க.ஆனா சமாச்சாராம் அது இல்லப்பா?தமிழ் மணத்தோட கேளீர் பகுதி என்னையும் சேத்து இழுத்துட்டு போய் தமிழ்மணத்தில் இணைக்குதுன்னு சொல்ல வந்தேன்..

ஆனா ஒன்ன சொல்றேன் கேட்டுக்குங்க நாளைக்கு மகனுங்களா உங்களுக்கெல்லாம் வக்கபோறேன் ஆப்பு????காத்துட்டிருங்க 24 மணி நேரம்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது