ஒடும் ரெயிலில் இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த வீரர் கைது


ஒடும் ரெயிலில் அத்துமீறல்: இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த கடற்படை வீரர்; தட்டிக்கேட்ட டிக்கெட் பரிசோதகரை தாக்கினார்

திருவனந்தபுரம், மார்ச்.30-

கொச்சி கடற்படையில் பணி யாற்றுபவர் அஜித்சிங் (வயது 22). ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் சென்னையில் இருந்து ஆலப்புழை வரும் ரெயிலில் ஆலப்புழை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அவரது இருக்கைக்கு எதிர் வரிசையில் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர்.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை, அஜித்சிங் தனது செல்போன் காமிராவில் படம் பிடித்தார். இதை அந்த குடும்பத்தினர் தட்டிக்கேட்டனர். ஆனால் அஜித்குமார் அதை பொருட் படுத்தவில்லை.

இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் மனோஜ்லாலிடம் இளம்பெண்ணின் குடும்பத் தினர் புகார் செய்தனர். மனோஜ்லால், அஜித்சிங்கை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அஜித்சிங், மனோஜ்லாலை பயங்கரமாக தாக்கினார். இதில் மனோஜ்லாலின் பல் உடைந்தது. மேலும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி மனோஜ்லால் ஆலப்புழை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ஆலப்புழை ரெயில்நிலையம் வந்ததும் அஜித்சிங்கை கைது செய்தனர்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கடற்படை, செல்போன், பெண்கள் போட்டோ, வீரர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s