Daily Archives: மார்ச் 31, 2008

கண்ணு எழில் மொதல்ல இதுக்கு நீ பதில் சொல்லு.நண்பர்கள் மற்றதுக்கு பதில் சொல்லுவாங்க

என்னப்பா எழில் கொஞ்சம் திருதலாம்ன்ன உடமாட்டிங்கரியே.சரி இந்த இந்திரன் சாமி என்ன இப்படி பண்ணிபுடுச்சு,ஏன்னு கொஞ்சம் சொல்லறியா

உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதைப் புராணம் கூறுவதைப் படியுங்கள்.

தேவர்களின் தலைவன் தேவேந்திரன். இந்தப் பதவி பரம்பரைப் பதவியல்ல. தேர்தலில் நின்று வென்று அடைய வேண்டிய பதவி. ஆனால் தேவேந்திரனின் மனைவியான இந்திராணியோ நிரந்தரமானவள். யார் தேவேந்திர பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு மனைவி இந்திராணிதான். இது என்ன அசிங்கம் பிடித்த ஒழுக்கக் கேடு என்கிறீர்களா? இதுதான் அவாளின் ஒழுக்கம். அதைத்தான் புராணங்கள் பிரதிபலிக்கின்றன.தேவேந்திரன் பதவி நிலையானதல்ல. அடிக்கடி அதற்குப் போட்டி வருவதுண்டு.அப்பாவியான அகலியை எனும் பெண்ணைக் கெடுத்ததோடு கல்லாக்கிய கல்மனங்கொண்ட காமாந்தகாரன் தேவர்கள் எப்பேர்ப்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள் என்பதற்கு இந்தப் புராணமே போதும்.

கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், “இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்’ என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்துவணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது

அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்’ என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு’ என்றும் சபித்தார்.அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் `சிறீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுய உருவைப் பெறுவாய்” என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர்.சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் `இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்” என்று கூறினார்.

இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன.எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது. (விடுதலை 19.05.2007)

 

http://idhuthanunmai.blogspot.com/2007/05/blog-post_9734.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்திரன், இந்து மத கடவுள், எழில்

இன்னும் மூன்று மாதத்தில் பிள்ளை பெறப்போகும் ஆண்

ஒரு ஆண் தாயாகிறார்

hshe.jpg

அதிசயம் ஆனால் உண்மை !! என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ABC News Advocate மற்றும் பல பிரபல பத்திரிகைகள்.

ஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம்.

பிறக்கப் போகும் பெண்குழந்தை “என்னோட மம்மி ஒரு ஆண்” என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம்.

பெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ? ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்யப் போகிறாராம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு பரபரப்புச் செய்தியை MalePregnancy.com
எனும் வலைத்தளம் வெளியிட்டிருந்தது. அதில் லீ என்பவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள் விளையாடி இருந்தனர்.

அந்த லீ பல ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் கர்ப்பமாக அந்த வலைத்தளத்தில் உலவி வருகிறார். டாக்குமெண்டரி, மெடிக்கல் ரிப்போர்ட் அது இது என பல அலட்டல் வேலைகளைக் காண்பித்த அந்த வலைத்தளம் போலியானது என்றும் அதை நிறுவியவர்
விர்ஜில் வாங் என்பதும் தெரியவந்தது.

அதே போல இந்த தகவலும் போலியாய் இருக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் நாளைய தினம் தாமஸ் பெட்டி ஒரு கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

நாளை ஏப்பிரல் 1 – என்பது நமக்குத் தெரியாதா என்ன ?

 

http://sirippu.wordpress.com/2008/03/31/he_mother/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அம்மா, கர்பிணி, தந்தை, தாய், பெண்கள்

பெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ

 பெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ
31 மார்ச்,2008 ::11:38

நியூயார்க்: மார்ச் 31ல் 25 முதல் 54 வயது வரையில் உள்ள பெண்களுக்கான புதிய இணையதளத்தை யாகூ தொடங்கியுள்ளது.பெண்களை இலக்காக வைத்துத் தொடங்கப்பட்டது இந்த இணையதளம். இவ்விணைய தளத்தை தொடங்குவதற்கு முன்னரே யாகூ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது கண்டறியப்பட்டது. தாய்மை,குடும்பபொறுப்பு, அழகு போன்ற பல கோணங்களில் சிந்தித்து செயல்படும் பெண்களுக்காகவே பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டுள்ளதாக யாகூவின் நிறுவன துணை அதிபர் யாமி லோரியோ கூறினார்
 
 

1 பின்னூட்டம்

Filed under இணையதளம், பெண்கள், யாகூ, yahoo

இணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மிரட்டல்(வீடியோ இணைப்பு)

 

 இணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால்  கொந்தளிப்பு  மிரட்டல்(வீடியோ இணைப்பு)

இணையதளத்தில் வெளியிடப்பட்ட குரானுக்கு எதிரான படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு தீவிரவாதி மிரட்டல்(வீடியோ இணைப்பு)

முஸ்லிம்களின்

புனித நூலான குரானை விமர்சிக்கும் 15 நிமிட திரைப்படம், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டு எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

மேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளான்.

http://www.thiratti.com/view.php?id=20761

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பாக்கிஸ்தான்

தமிழச்சியும்,தற்கொலை படையும்

தமிழச்சி ஒருவர் தன்னையே அளித்து தன் கூட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா என்று போராடியுள்ளார்.இலங்கையில் தமிழ் விடுதலை பெண் புலி ஒருவர் தன் உடலில் குண்டை கட்டிக்கொண்டு போய் வெடிக்க செய்த காட்சி

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இலங்கை, பிரபாகரன், யாழ்ப்பாணம், விடுதலை புலி

ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக படிக்க கூடாத செய்தி

ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக இந்த விலங்குடைய செய்தியை படிக்க வேண்டாம்

“தம்” அடிக்கும் ஆமை

ஜிலின்: சீனாவின் வடகிழக்குப் பகுதி நகரம் ஜிலின். அங்கு வசிக்கும் யுன் என்பவர் வளர்க்கும் ஆமைதான் இங்கே ஜோராக Ôதம்Õ அடிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட யுன், ஒருமுறை தனது செல்லப் பிராணி ஆமையின் வாயில் சிகரெட்டை விளையாட்டாக வைத்தாராம்.

அது பிடித்துப் போன ஆமை, எஜமானர் தம் பற்ற வைக்கும்போதெல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து காலைப் பிறாண்டுமாம். அப்போது முதல் Ôதம்Õமுக்கு அடிமையாகி விட்டது ஆமை. சிகரெட்டை லாவகமாக கவ்வி, உள்ளிழுத்து புகையை வெளிவிடுகிறது ஆமை.
http://www.dinakaran.com/

2 பின்னூட்டங்கள்

Filed under அன்பு மணி ராமதாஸ், ஆமை, புகை, ராமதாஸ்

மதம் மாறும் எறையூர் வன்னியர்களுக்கு வழியனுப்பு விழா கோலாகலம்

இந்து மதத்தில் சாதிப்பாகுபாடு இருக்கிறது .சரி! .கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு மட்டும் என்ன வாழுதாம் ? அங்கேயும் தானே சாதி பாகுபாடு இருக்கிறது .அங்கேயும் சில இடங்களில் தலித் கிறிஸ்தவர்கள் ஆதிக்க சாதியினரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றரே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது .இதற்கு பதில் சொல்லும் சில கத்தோல்லிக்கர்கள் ,இது கத்தோலிக்க மதத்தால் கொள்கை அடிப்படையில் ,கோட்பாடு படி அங்கீகரிக்கப்படவில்லை .திருச்சபை இதை ஒரு போதும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க முடியாது .ஆனால் பன்னெடுங்காலமாக சாதி அமைப்பில் ஊறியவர்கள் கத்தோலிக்கரான பின்னரும் சாதி வேறுபாட்டை நடைமுறையில் கடைபிடிக்கின்றனர் .இது கத்தோலிக்க மதத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல .ஆனால் அதை பின்பற்றுபவர்களின் கோளாறு என்று வாதிடுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை கத்தோலிக்க மதம் வழிபாடுகளில் ,பங்கு நடைமுறைகளில் சாதிப்பாகுபாட்டை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க மறுப்பது மட்டுமல்ல ,அந்த விதிமுறை நடைமுறையில் மீறபடும் போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் திருச்சபைக்கு உள்ளது .எங்கள் சட்டதிட்டங்களில் சாதி பாகுபாடு கிடையாது ,அந்தந்த பகுதியிலுள்ள மக்களின் சில தவறான நடைமுறைகளும் பின்பற்றுதலுமே இதற்கு காரணம் என்று சொல்லி திருச்சபை தப்பித்துக் கொள்ள முடியாது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

விழுப்புரம் மாவட்டம் இறையூர் கிராமத்தில் ஒரே பங்கில் உறுப்பினர்களாக இருக்கும் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் ,தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழிபாடு மற்றும் சில நடைமுறைகளில் பாகுபாடு பல காலமாக இருந்து வந்திருக்கிறது . தலித் கிறிஸ்தவர்கள் இறந்தால் அவர்கள் சவ ஊர்வலம் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாது .சடலத்தை சுமந்து வரும் வண்டி சமமாக உபயோகப்படுத்தப்படவில்லை .இத்தகைய சாதி வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுவது இத்தகைய சூழலில் வளராத என்போன்றவர்க்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது . கிறிஸ்தவர்களிடையே சாதிப்பாகுபாடு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை .நான் வளர்ந்த சூழலில் திருமணம் போன்றவற்றில் சாதி இன்னும் இருக்கிறது , சாதி சார்ந்த உள்ளடி வேலைகள், அரசியல் இருகிறது என்றாலும் ,அதை இவ்வளவு வெளிப்படையாக வழிபாட்டு முறைகளிலும் ,நடமுறையிலும் கடைபிடிப்பதை பார்த்ததில்லை . ஆனால் சில இடங்களில் தலித்களுக்கு தனிக்கல்லறைகள் இருப்பதாகவும் ,வெளிப்படையாகவே கோவில்களில் சமத்துவமின்மை கடைபிடிக்கப்படுவதாகவும் வரும் செய்திகள் மிகவும் அவமானத்துக்குரியவை ..கத்தோலிக்க மதம் எந்த காரணத்தைக்கொண்டும் இத்தகைய நடைமுறைகளை தொடர்வதற்கு அங்கீகரிப்பதோ ,அல்லது கண்டுகொள்ளாதிருப்பதோ மிகவும் கண்டிக்கத்தக்கது .

எறையூரைப் பொறுத்தவரை பெரும்பான்மை வன்னியர்கள் தங்கள் பங்கிலுள்ள தலித்துக்களை ஆலய விஷயங்களிலும் சமமாக நடத்த விருப்பவில்லை என்பது கண்கூடு .தாங்கள் சாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த தலித்துக்கள் தனியாக ஒரு கோவிலை கட்டி எழுப்பி அதற்கு மறைமாவட்ட அங்கீகாரத்தை கோரியிருக்கிறார்கள் .தங்களுக்கு தனியாக ஒரு பங்குத்தளத்தை உருவாக்கி தருமாறு கோரியிருக்கிறார்கள் .மறை மாவட்டம் இது வரை அதனை அங்கீகரிக்கவில்லை ..அங்குள்ள வன்னிய கிறிஸ்தவர்களும் அதை எதிர்த்திருக்கிறார்கள். அது இப்போது பூதாகரமான பிரச்சனையாக வெடித்து ,கலவரம் துப்பாக்கிச்சூட்டில் போய் முடிந்திருக்கிறது.

இப்போது மறைமாவட்ட ஆயர் இது குறித்து விடுத்த அறிவிப்பில் தனிப்பங்கு அவசியமில்லை எனவும் ,தொடர்ந்து ஒரே பங்காக செயல்பட வேண்டுமெனவும் ,வழிபாடுகளில் ,கோவில் நடைமுறைகளில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது எனவும் ,தலித்துகளுக்கு சம உரிமை உண்டு எனவும் அறிவித்திருக்கிறார்.

அதன் பின்னர் தலித் ஒருவர் இறந்து போக அவர் ஆயரின் அறிவிப்பின் அடிப்படையில் வன்னியர்கள் பயன்படுத்தும் சவ வண்டியில் உடலை வைத்து பொது வழியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது . அதையும் வன்னியர்கள் சிலர் எதிர்த்திருக்கிறார்கள் .எனவே காவல் துறையின் துணையுடன் இது நடந்திருக்கிறது .இதன் பின்னர் வன்னியர் ஒருவர் இறந்து போக ,தலித்துக்கள் பயன் படுத்தியது என்ற காரணத்திற்காக அந்த சவ வண்டியை உபயோகிக்காமல் தாங்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்திருக்கிறார்கள் .

இப்போது இதை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது ? வன்னியர்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்புகிறார்கள் .இதற்கு திருச்சபையும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் .இதைவிட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது . சரி! சம உரிமை கிடைக்காத தலித்துக்கள் தங்களுக்கென்று ஒரு ஆலயத்தை அமைத்து எங்களை பிரித்து விட்டு விடுங்கள் என கோருகிறார்கள் ..அதையும் வன்னியர்கள் விரும்பவில்லை . தங்கள் சாதி ஆதிக்கத்தை தொடர முடியாது என்பது காரணமாக இருக்கலாம் ..ஆனால் தலித்துக்களின் அந்த கோரிக்கையை மறைமாவட்டம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை ? அங்கீகாரம் வழங்கியிருக்க வேண்டியது தானே ? என்ற கேள்வி எழலாம் .என்னைப் பொறுத்தவரை ஒரு பங்கின் மக்கள் தொகை அதிகரிப்பால் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கலாமே தவிர ,சாதி அடிப்படையில் ,அதுவும் ஆதிக்க சாதித் திமிருக்கு பயந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பயந்து தனியாக செல்ல வேண்டும் என்று திருச்சபை தீர்ப்பு வழங்க கூடாது .மாறாக எந்த காரணத்தைக்கொண்டும் சாதிப்பாகுபாட்டை அங்கீரரிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல , கோவிலில் ,வழிபாட்டு முறைகளில் சாதிப் பாகுப்பாகுபாடில்லாத சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டியது மறைமாவட்டத்தின் கடமை .கொள்கை அடிப்படையில் மறைமாவட்டம் அதைத் தான் செய்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விடயம் . ஆனால் நடைமுறையில் அதனை அமல் படுத்த மறைமாவட்ட நிர்வாகம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கப் போகிறது என்பதில் தான் அதன் யோக்கியதை தெரிய வரும் .

தொடக்கத்தில் தலித்துக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை மறைமாவட்டம் கண்டுகொள்ளவில்லை என்று அதிருப்தி காட்டினார்கள் .ஆனால் மறைமாவட்டத்தின் இந்த அறிவிப்புக்கு பின்னர் வன்னியர்கள் கோபமடைந்து தாங்கள் மதம் மாறப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் . சன் தொலைக்காட்சியில் இது குறித்து பேசிய ஒரு வன்னியர் சமத்துவம் என்ற பெயரில் காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வரும் நடைமுறைகளை எங்களை மாற்ற சொல்லுவது சரியல்ல .. நாங்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள் தான் .எனவே நாங்கள் அந்த மதத்துக்கே போகிறோம் என்று குறிப்பிட்டார் .

காலம் காலமாக கடைபிடித்து வருவதை மாற்ற விருப்பாவிட்டால் இந்த ஆள் இந்து மதத்திலிருந்து ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு வர வேண்டும் ? அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே ? சரி! இப்போது காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வந்த ஏற்றத் தாழ்வையும் , சாதி ஆதிக்கத்தையும் இப்போது கட்டிக்காக்க கிறிஸ்தவ மதம் அனுமதிக்கவில்லையாம் .அதனால் அத்தகைய சுதந்திரத்தை வழங்கக்கூடிய இடத்துக்கு அவர்கள் போகிறார்களாம் .. என்ன ஒரு ஒப்புதல் வாக்குமூலம் ! தயவு செய்து போய் தொலையுங்கள் ஐயா ! உன்னை மாதிரி சாதி வெறிபிடித்தவர்கள் ,மதத்தின் பெயரால் சக கிறிஸ்துவனை சமமாக மதிக்க தெரியாதவனெல்லாம் கிறிஸ்தவ மதத்தை விட்டு போவது தான் உண்மையான சமதர்மத்தை விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்பதை உன்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ..உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கும் மதமாற்ற முடிவுக்கும் மனமார்ந்த நன்றி!

தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது .. நடைமுறை ஓட்டைகளையும் ,அந்தந்த பகுதியில் உள்ள சாதி ஆதிக்கத்தையும் சாக்காக வைத்து ஆலயங்களில் வெளிப்படையாக சாதிப் பாகுபாடு பார்க்கும் கிறிஸ்தவர்களுக்கெதிராக உறுதியான கொள்கையை அறிவிக்கும் நிர்பந்தத்துக்கு மறைமாவட்டம் தள்ளப்பட்டிருக்கிறது .ஆலய நடைமுறைகளில் சாதிப் பாகுபாடு பார்ப்பவர் பாதிரியராக இருந்தாலும் அவர்கள் கத்தோலிக்க மதத்தில் நீடிக்க தகுதியில்லாதவர்கள் . அத்தகைய உறுதிப்பாட்டை மறைமாவட்ட நிர்வாகங்களும் ஆயர்களும் மறு உறுதிப்படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் .தவறினால் ஆயராய் இருந்தாலும் சரி ..தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ளும் தார்மீகத் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என்பதே உண்மை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருக்க முடியும் .

"ஒரு உறையில் இரண்டு வாள் இருக்க முடியாது " என்ற பைபிள் வாசகப்படி ,சாதி மேலாண்மையை விரும்புபவர்கள் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியேறுவதே கத்தோலிக்க மதத்துக்கு நல்லதாக இருக்கும் .

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under எறையூர், கிறிஸ்தவர்கள், சாதி, வன்னியர்

விபச்சார விடுதியில் இருந்த தன் மனைவியை விலை கொடுத்து வாங்கிய கணவர்-உருக்கமான சம்பவம்

 
வெளிநாட்டில் வேலை என விபசாரத்துக்கு விற்பனை: மனைவியை விலை கொடுத்து வாங்கி மீட்ட கணவர்
 
 
கொச்சி, மார்ச். 30-

கேரள மாநிலம் மலப்புரத் தைச்சேர்ந்தவர் சலிம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2 வருடத் துக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார். திடீரென்று சலிமுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட் டது. குடும்பம் நடத்த கஷ்டப் பட்டார். இதனால் அரபு நாட்டில் வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் என மனைவி யோசனை கூறினார்.

இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் டிராவல் ஏஜெண்டு ஒருவரை சந்தித்தனர். அவர் சலிமின் மனைவிக்கு ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி விசா எடுத்து கொடுத்தார். சலிம் மனைவியை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.

மனைவி ஓமன் போய்ச் சேர்ந்ததும் சில நாள் கழித்து கணவருடன் போனில் பேசி சொன்ன தகவல் சலிமுக்கு பேரிடியாக இருந்தது. வீட்டு வேலைக்காக அனுப்பி வைக் கப்பட்ட தன்னை விலை பேசி விபசார கும்பலிடம் விற்று விட்டதாகவும் தன்னால் இங்கு கொடுமை அனுபவிக்க முடிய வில்லை. எந்த நேரத்திலும் உயிரை மாய்த்துக் கொள்வேன்'' என்றார்.

இதையடுத்து சலிம், `உன்னை என்ன விலை கொடுத்தாவது மீட்டு விடுகிறேன்'' என்று கூறி மனைவிக்கு தைரியம் சொன்னார்.

அதன் பிறகு மனைவியை வெளிநாடு அனுப்பி வைத்த அதே ஏஜெண்டு மூலம் சலிமும் விசா எடுத்து ஓமன் நாடு சென்றார். அங்கு பல்வேறு விபசார புரோக்கர்களை மூலம் அணுகி தனது மனைவியின் இருப்பிடத்தை கண்டுபிடித் தார். மனைவி என்பது விபசார கும்பலுக்கு தெரிந்து விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்பதால் வாடிக்கையாளர் போல் சென்று மீட்க திட்ட மிட்டார்.

அதன்படி சலிம் சென்ற போது அவரது மனைவியை ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைத்து இருந்தனர். சலிமை கண்டதும் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பின்னர் சலிம் இந்திய தூதரகம் மூலம் ஓமன் போலீசில் புகார் செய்து தனது மனைவியை மீட்டார்.

முதலில் சலிமின்மனைவி ரூ.70 ஆயிரத்துக்கு விற்கப் பட்டு இருக்கிறார். பின்னர் கேரளா வைச்சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் அவரை ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கி இருந்தார். தினமும் 30 பேர் வரை உல்லாசம் அனுபவித் துள்ளனர். அதற்கு மறுத்த தால் அடித்து உதைத்து சித்ர வதை செய்வார்கள்.

இதுபற்றி சலிம் கூறுகை யில், "எனது மனைவி எனக்கு உயிருடன் கிடைப்பாளாப என்பதே சந்தேகமாக இருந் தது. அவளை நானே விலை கொடுத்து மீட்டு இருக்கிறேன். அவள் எனக்கு உயிருடன் கிடைத்ததே போதும்'' என்றார்.
 

4 பின்னூட்டங்கள்

Filed under கண்வர், பணம், பெண்கள், மனைவி, விபச்சாரம்

ஒடும் ரெயிலில் இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த வீரர் கைது

ஒடும் ரெயிலில் அத்துமீறல்: இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த கடற்படை வீரர்; தட்டிக்கேட்ட டிக்கெட் பரிசோதகரை தாக்கினார்

திருவனந்தபுரம், மார்ச்.30-

கொச்சி கடற்படையில் பணி யாற்றுபவர் அஜித்சிங் (வயது 22). ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் சென்னையில் இருந்து ஆலப்புழை வரும் ரெயிலில் ஆலப்புழை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அவரது இருக்கைக்கு எதிர் வரிசையில் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர்.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை, அஜித்சிங் தனது செல்போன் காமிராவில் படம் பிடித்தார். இதை அந்த குடும்பத்தினர் தட்டிக்கேட்டனர். ஆனால் அஜித்குமார் அதை பொருட் படுத்தவில்லை.

இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் மனோஜ்லாலிடம் இளம்பெண்ணின் குடும்பத் தினர் புகார் செய்தனர். மனோஜ்லால், அஜித்சிங்கை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அஜித்சிங், மனோஜ்லாலை பயங்கரமாக தாக்கினார். இதில் மனோஜ்லாலின் பல் உடைந்தது. மேலும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி மனோஜ்லால் ஆலப்புழை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ஆலப்புழை ரெயில்நிலையம் வந்ததும் அஜித்சிங்கை கைது செய்தனர்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கடற்படை, செல்போன், பெண்கள் போட்டோ, வீரர்

தமிழ்மணத்தில் மீண்டும் ஆபாச தலைப்பில் பதிவுகள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், ஆபாச பதிவுகள், இஸ்லாம், குரான்