Daily Archives: மார்ச் 25, 2008

சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம்

பெண்ணின் உடலைச் சிதைக்கும் இராமாயண நீதி!

பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் – பெண் வக்கரித்த உறவுகள்! – 3

ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்யக் கோருவது குற்றமா? இதை இராமாயணம் மறுக்கிறது.

பெண்ணின் உடலைச் சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்ரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம்.

காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்துப் படுத்து இருக்கும்போது, கடவுளாகப் போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக்கா வேடம் போட்டு வந்து, சீதையின் முலைக் காம்பைக் கொத்தி தனது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த போது, அது குற்றமாகி விடவில்லை. சீதையின் கற்பின் ஒழுக்கத்தைக் கணவன் சார்ந்து மானம்கெட்டுப் போற்றப்படுகின்றது.

இன்று பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாகத் தோல் உரித்து இரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்கப் பண்பாட்டையே, இந்து மதம் போற்றி இரசித்த வரலாற்றுக் கதைகள் எழுதியவர்கள், அதன் தொடர்ச்சியில் இன்றும் அதைப் போற்றுகின்றனர்.

சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர – சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது.

வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.

இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், "இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை" என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான்.

மேலும் அவன் "உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்… அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.." என்று கேட்கின்றபோது, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்.

இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம். "நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே."

இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான். கற்பு பற்றி ஆணாதிக்க இறை ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது.

நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் சந்தேகப்பட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைத் தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளைக் கொண்டது.

நன்றி: http://www.tamilcircle.net/

1 பின்னூட்டம்

Filed under இராமன், இராமாயணம், இஸ்லாம், சீதை, பெண்

உங்கள் கணிணித் திரையில் தொலைகாட்சி

தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் இணைய தளத்தில் இலவசமாக ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திவரும் www.bigflicks.com என்ற இணைய தளத்தின் வழியாக உலகம் முழுவதுமுள்ள தமிழ் நேயர் கள் ராஜ் தொலைக்காட்சி, டிஜிட்டல் பிளஸ், ராஜ் மியூசிக்ஸ் ஆகிய மூன்று அலை வரிசைகளையும் இனி பார்க்கலாம்.

இது குறித்து பிக்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் முதன்மை அதிகாரி கமல்கியான் சந்தானி கூறுகையில், இனி உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் இலவசமாக செய்திகள், உலக நடப்புகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் இணைய தளத்தில் பார்த்து மகிழலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டு மல் லாது, வெளிநாடுகளிலும் இனி ராஜ் குழும அலைவரிசைகளை இலவசமாக இணையதளத்தில் பார்க்கலாம் என ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி: விடுதலை
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், கணிணி, கிறிஸ்தவம், தொலைகாட்சி, ராஜ் டிவி