தமிழச்சியின் பதிவுகள் எங்கே?
ஒன்றுமே புரியலே உலகத்திலே… காலையில்தான் ஏதோ பிரச்சினை என்று உணர்ந்தேன். நேரமின்மையால் படிக்க இயலவில்லை. வந்து பார்த்தால் தமிழச்சியின் பதிவுகள் திரட்டியில் காணப்படவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?
உண்மைதான் தமிழச்சியின் பதிவுகள் தமிழ்மணத்திஒல் இருந்து நீக்கப்பட்டு உள்ளது
Subject: Your Blog removed from http://www.thamizmanam.com
MIME-Version: 1.0
Content-type: text/html; charset=utf-8
From: http://www.thamizmanam.com listadmin@thamizmanam.com
Cc: listadmin@thamizmanam.com
Dear ,Your blog is Removed from listing by http://www.thamizmanam.com Administrator due to follwing reason,பதிவர் தமிழச்சி
உங்கள் பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் நீங்கள் தமிழ்மணத்தின் எல்லைகளை மீறும் வகையிலே செயற்படுவதினாலே இப்பதிவு நீக்கப்படுகின்றது.
க. இரமணிதரன்
தமிழ்மணம், நிர்வாகி
http://www.www.thamizmanam.com.
Greetings from Italy 😀
தமிழச்சியின் பதிவுகள் தமிழ்மணத்தில் வருவது குறித்து நான் ஒரு பதிவு இட்டிருந்தேன்.
நினைவுகூறலாமே?
ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்தது குற்றமில்லைதானே?
இந்த ஹிட்லரை(பெயரிலியை)ஒழித்துவிட்டு தமிழ்ச்சியை சேருங்கப்பா
ரமணியின் பின்னூட்டத்தினை நானும் படித்தேன். நீங்கள் அவர் மீது கோபம் கொள்ளும்படியாகத்தான் அதன் தொனி இருக்கிறது.
பெயரிலி உங்களையும் தமிழச்சியையும் குறிப்பிட்டு தாக்கி எழுதிய இடுகைகள் தமிழ்மணத்தில் தொடர்ச்சியாக திரட்டப்படுகின்றன.
தனி அஞ்சலில் பெயரிலி அப்படி எழுதியிருந்தால் தனிப்பட்ட அளவில் காசியோ அல்லது நானோ அல்லது தமிழ்மணத்தோடு தொடர்புடைய வேறு யாரேனும் உங்களுக்கு தார்மீக ஆதரவைத் தெரிவிக்க முடியுமே தவிர தமிழ்மணம் என்ற அமைப்பு ஒன்றும் செய்ய இயலாது.
ஆனால் இங்கே பெயரிலி பொதுத்தளத்தில் எழுதியதால் பிரச்னையாகி விட்டது. இதற்கு தமிழ்மணம் முழுப்பேற்கிறது! ஏற்க வேண்டும்.
இப்படி தனிப்பட்டவர்களின் செயல்களுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது. ஆனால் நிர்வாகத்தில் உள்ளவரின் செயலுக்கு தமிழ்மணம் கண்டிப்பாக பொறுப்பு ஏற்க வேண்டும். அதனையே நானும் கடிதமாக எழுதி இருக்கிறேன்.
இது தொடர்ந்து நடந்தால் நிர்வாகத்தில் உள்ள பலரும் பெயரிலியின் மீது கோபம்கொண்டு விலகவேண்டியிருக்கும்.
பெயரிலியின் தாக்குதலுக்கு சந்திரமதி கந்தசாமியில் இருந்து தமிழச்சி, லக்கி வரை யாரும் தப்பவில்லை.
இருவாரங்களுக்கு முன் தமிழ்மணத்துடன் தொடர்புடைய நான் உள்பட பலருக்கும் ஈழத்தமிழில் இலங்கை ஐப்பியில் இருந்து பல அர்ச்சனைகள்-மிரட்டல்கள் மின்னஞ்சலில் வந்திருக்கின்றன. அது யாரால் அனுப்பட்டன என்பது பெயரிலிகே வெளிச்சம்.
பெயரிலி வெவ்வேறு அவதாரங்களில் புகுந்து பின்னூட்டங்கள் இட்டபோது அது தெரிந்தபோதெல்லாம் உடனடியாக ஆலோசனை சொல்லப்பட்டிருகிறது. பெயரிலி தன் மின்மடல்களை மீண்டும் எடுத்து வாசிப்பது நல்லது. பலமுறை புத்தி சொல்லியாகிவிட்டது.
இப்போதைய பிரச்சினை பெயரிலியை தமிழ்மணம் விட்டு நீக்குவதா வேண்டாமா என்பதில்லை. தமிழ்மணம் இன்னமும் தொடரவேண்டுமா கூடாதா என்பது தான். காரணம் தமிழ்மணம் தனது நடுநிலையில் இருந்து நழுவி விட்டதாக பார்ப்பனர்கள், திராவிடர்கள் உள்பட அனைத்து தரப்பினருமே நினைப்பதுதான்!
எனவே தமிழ்மணத்தினை தொடர்ந்து நடத்துவதில் உள்ள சிக்கலைப் பற்றி சில நிர்வாகிகள் தங்கள் கருத்தை பொதுவாக கூறியிருந்தார்கள். அதுவும் தங்களுடைய சொந்த கருத்து என்பதை குறிப்பிட்டு தெளிவாக மடல் அனுப்பி இருக்கின்றனர் எனக்கு.
காசியின் காலத்திலிருந்தே தமிழ்மணம் தானாகவோ, அல்லது பிறர் அளித்த புகார்கள் அடிப்படையிலோ அல்லது பதிவர்களின் சொந்த விருப்பத்திற்கு இணங்கியோ சில பதிவர்களை நீக்கியுள்ளது.அதுவும் மற்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசப்பட்ட பிறகே அனைத்தும் நடந்துள்ளது. ஆனால் இம்முறை பெயரிலி யாரையும் கேட்டு இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை
தமிழ்மணம் யாராவது ஒரு ஆரிய பதிவரை நீக்கிய போதெல்லாம் அது பெரிய அராஜகமாக சித்தரிக்கப்பட்டு சிலர் காச் மூச்சென்று கத்தியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லை. ஆனால் முன்னணி பதிவர்களான லக்கிலுக், தமிழச்சியை நீக்கியது பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
பெயரிலியின் அகங்காரத்தினைக் கண்டித்து தற்போது பலர் தங்களையும் தமிழ்மணத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று மடல் செய்திருக்கிறார்கள்.
பெயரிலியின் மனநோயின் பாதியளவு முற்றிய டோண்டுராகவன் என்ற வக்கிரத்தை சில ஆண்டுகளுக்கு முன் காசி நீக்க நினைத்தபோது வம்பு செய்த ஆரிய புனித பிம்பங்கள், இப்போது பெயரிலியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றதும் எதிர் கூச்சலிடுகிறார்கள்.
தனியாக மடல் அனுப்பி லக்கியையும் தமிழச்சியையும் நீக்கியது சரிதான் என்று தனியாக மடல் அனுப்பி வாழ்த்து சொல்லி இருக்கின்றனர்.
டோண்டு ராகவனின் வக்கிர எழுத்துக்களை பாராட்டியும், ரசித்தும் வந்த பெண்ணியவாதிகள் பெயரிலியின் அராஜகத்தைக் கண்டு ஆனந்தப்படுகின்றனர்.
இப்போது பெயரிலியை தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து நீக்கினாலும் சில ஆரிய புனிதபிம்பங்கள் கொதித்தெழுவார்கள். இலங்கைத் தமிழர்களும் கொதித்து எழுவார்கள்.
எல்லா சமயங்களிலுமே பதிவர்கள் தனிப்பட்ட முறையில் பாதிப்புக்கு உள்ளாகும்போது எதிர்வினை செய்கிறார்களே தவிர, பிறநேரங்களில் ரசிக்கவே செய்கிறார்கள்.
எல்லோருக்குமே இந்த மனநோய் வெவ்வேறு அளவில் உள்ளது. பெயரிலிக்கு கொஞ்சம் ஓவராக முற்றி விட்டது என்று நினைக்கிறேன். வலைப்பதிவுகளை பாதிப்பது தனிப்பட்டவர்களின் செயல்பாடுகள்/பாதிப்புகள் என்பதை குழு அரசியலே.