கேமரா மொபைலில் குடும்ப நபர்கள் போட்டோ வைத்திருப்பவரா நீங்கள்?உஷார்


கேமரா மொபைல் வைத்திருப்பவர்கள் உஷார்.

ஒரு

கால கட்டத்தில் மொபைல் என்பது நடுத்தர வர்க்கம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஆடம்பர பொருளாக இருந்த நிலை மாறி இன்று அத்தியாவசிய பொருளாக மாறியது மட்டுமின்றி , அனைவரும் வாங்க கூடிய விலையில் கிடைக்கவும் செய்கிறது.

அனைத்து தரப்பினரும் மொபைல் வைத்திருப்பதும், அது தொடர்பாக நடைப்பெறும் நகைச்சுவை விஷயங்களும் ஏராளம். அது பற்றி மிக பெரிய பதிவே போடலாம்.

இந்த பதிவு கேமரா பொறுத்தப்பட்ட மொபைல் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய ஒரு ஆபத்து பற்றியே.

கேமரா பொருத்தப்பட்ட மொபைல்கள் இப்போது ஒரு fashion ஆக மாறிவிட்டது, மொபைல் வாங்குவோரில் 75% பேர் கேமராவுடன் தான் வாங்குகிறார்கள். வாங்கிய புதிதில் ஆர்வமுடன் கேமராவை பயன்படுத்தி கண்ணில் படுவதை எல்லாம் சுட்டுத்துள்ளுவது, சிறிது காலத்திற்கு பிறகு மொபைலில் கேமரா இருப்பதையே மறந்துவிடுவதும் தனிக்கதை.

மொபைல் கேமராவில் புகைப்படம் எடுப்போர் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமிது. உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் கேமராவில் இருக்கும் படங்களை கையாடல் செய்யும் நவின திருட்டு ஒன்று சத்தமில்லாமல் பரவி வருகிறது. அதிலும் நீங்கள் எடுத்து, பின்பு அழித்துவிட்ட படங்கள் கூட திருடப்படுகிறது என்பது சற்று அதிர்ச்சியான செய்தி.

எப்படி திருடப்படுகிறது என்று பார்பதற்கு முன்னால் , எத்தகைய படங்கள் திருடப்படுகிறது என்று பார்க்கலாம்.

சாதாரணமாக எடுக்கப்பட்ட இயற்கை காட்சிகள், விலங்குகளின் படங்கள் திருடப்படுவதில்லை , அவை திருடப்பட்டாலும் நாம் பெரிதும் வருத்தப்படவேண்டியதில்லை. மாறாக இந்த திருட்டுக்கு இலக்காவது உங்கள் மொபைலில் இருக்கும் உங்கள் வீட்டு பெண்களின் புகைப்படங்கள்.

அனேகமாக பலரும் ஆசை ஆசையாக தங்கள் மனைவியையோ, காதலியையோ, அல்லது அக்கா , தங்கை, அண்ணி, மாமி என எந்த உறவு முறைப்பெண்களையும் மொபைல் கேமராவில் படமெடுப்பது வழக்கம்.

குறிப்பாக கேமரா மொபைல் வாங்கிய புதிதில் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களையும் , உறவினர்களையும் ஒருமுறையாக கேமராவில் சுட்டுவிடுவது என்பது எழுதப்படாத விதி. இது ஒரு ரகம்.

மற்றொரு ரகம் சற்று வித்தியாசமானது, காதலி , மனைவியுடன் அந்தரங்கமான சில நிகழ்வுகளையும் மொபைலில் எடுப்பவர்களும் உண்டு. வேறு தவறான எண்ணம் எதுவுமின்றி , நமக்குள்தானே, ஜஸ்ட் பார்த்துவிட்டு அழித்துவிடலாம் என்று எடுப்பவர்களும் உண்டு.

எடுத்தபின்பு ,பார்த்துவிட்டு அழித்தும் விடுவர். அழித்துவிட்டோம் , என்ன பிரச்சனை என்று மெத்தனமாக இருப்பார்..

ஆனால் இங்கே தான் பிரச்சனை, இப்படிப்பட்ட புகைப்படங்கள் தான் திருடுபவரின் இலக்கு.

எப்படி திருடப்படுகிறது? யார் திருடுவது?

தொலைந்துப்போவது தவிர்த்து, 2 காரணங்களுக்காக நம் மொபைலை நமக்கு அறிமுகமில்லா நபரிடம் கொடுப்போம்.

1. மொபைல் கோளாறு , சரி செய்ய கொடுப்போம்.

2. மொபைலில் உள்ள மெமரி கார்டில் பாட்டு, கேம்ஸ் , அல்லது ஏதேனும் புது மென்பொருள் சேர்க்க கடைக்காரர் ஒருவரிடம் கொடுப்போம்.

இப்படி கொடுக்கும் போது தான் இந்த திருட்டு நடக்கிறது. நாம் மொபைல் மெமரியிலோ அல்லது மெமரி கார்டிலோ வைத்திருக்கும் புகைப்படங்கள் இங்கே பிரதி எடுக்கப்படுகிறது.

அட போப்பா, நாங்க எல்லாம் உஷார் உலகநாதன்ஸ், அப்படி கொடுக்கறப்போ எல்லா மேட்டரையும் அழித்துவிட்டு (Delete) தான் கொடுப்போம் என்று சொல்கிறீரா?? அப்பவும் நீங்க உண்மையிலேயே உஷார் உலகநாதன் இல்லைங்க.. உஷார்னு நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பாவபட்ட ஜென்மம் தான்.

இப்படி அழிக்கப்படும் படங்களை மீட்டெடுக்கவே (Restore) பல மென்பொருட்கள் உள்ளது. அந்த மென்பொருட்கள் இப்படிபட்ட ஆசாமிகளிடன் நிறையவே உள்ளது. அவற்றை பயன்படுத்தி அழிக்கபட்ட படங்களை சுலபமாக மீட்டெடுக்கின்றனர்.

உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் மொபைலில் உள்ள படங்கள் / ஆவணங்கள் திருட்டுப்போகிறது.

அப்படி திருடப்படும் படங்கள், இதற்காகவே அலையும் ப்ரோக்கர்களுக்கு நல்ல காசுக்கு விற்கப்படுகிறது. அப்படி கை மாறும் படங்கள் எங்கெங்கு போகும், எப்படியெல்லாம் உபயோகப்படுத்தப்படும் என நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா??

எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புக்கும் எதிர்மறையான விஷயங்கள் இருப்பது இயல்பு, கேமரா மொபைல் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆக மக்கள்ஸ் உஷாராக இருக்கவேண்டியது நாம் தான். இனி உங்கள் மொபைல் கேமராவில் புகைப்படம் எடுக்கும் போதும், உங்க மொபைல் சர்வீஸ் கொடுக்கும் போதும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

நான் கேட்டத சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம். நம் அந்தரங்கம் அடுத்தவர் அனுபவிக்கவும், காசு பார்க்கவும் என்றாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

குறிப்பு: மொபைல் பழுது பார்க்கும் கடை வைத்திருப்பவர் அனைவரும் இப்படி என்று சொல்லவில்லை, இப்படியும் பலர் இருக்கிறார்கள் , காசு பார்க்கிறார்கள், நமக்கு கவனம் தேவை என்பதே இந்த பதிவின் கருத்து.

முரளி

 

 

10 பின்னூட்டங்கள்

Filed under அல்லாஹ், ஆபாசம், இஸ்லாம், குரான், கேமரா மொபைல்

10 responses to “கேமரா மொபைலில் குடும்ப நபர்கள் போட்டோ வைத்திருப்பவரா நீங்கள்?உஷார்

 1. Anonymous

  உங்களிடம் இவ்வளவு நல்ல சரக்கு இருக்கும் போது ஏன் பெரும்பாலும் கேவலமாக எழுதுகிறீர்கள்

  //குறிப்பு: மொபைல் பழுது பார்க்கும் கடை வைத்திருப்பவர் அனைவரும் இப்படி என்று சொல்லவில்லை, இப்படியும் பலர் இருக்கிறார்கள் , காசு பார்க்கிறார்கள், நமக்கு கவனம் தேவை என்பதே இந்த பதிவின் கருத்து//

  முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் இப்படி என்று சொல்லவில்லை, இப்படியும் பலர் இருக்கிறார்கள் , நமக்கு கவனம் தேவை. என்று ஏன் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. முஸ்லிம்கள் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பிற்கு ஏதாவது காரணம் இருக்கலாம் அதற்காக நீங்களே உங்களை தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா. இனியாவது தொடர்ந்து நல்ல பதிவுகளை உங்கள் உண்மையான ஐடியில் இருந்து எழுதுங்கள்

 2. தெய்வமகன்

  //உங்களிடம் இவ்வளவு நல்ல சரக்கு இருக்கும் போது ஏன் பெரும்பாலும் கேவலமாக எழுதுகிறீர்கள்//

  நன்றிங்க அண்ணா,இந்த பாராட்டு எழுதின நண்பருக்கு போய் சேரும்ன்ணா.

  //முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் இப்படி என்று சொல்லவில்லை, இப்படியும் பலர் இருக்கிறார்கள் , நமக்கு கவனம் தேவை. என்று ஏன் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. முஸ்லிம்கள் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பிற்கு ஏதாவது காரணம் இருக்கலாம் அதற்காக நீங்களே உங்களை தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா//

  நான் முஸ்லீம்களை பத்தி ஒன்னுமே சொல்லலை.அவர்கள் பின் பற்றும் குரான்,ஹதீஸ்களை பத்திதான் பதிக்கிறேன்.அதனால அவங்கள் எல்லோரும் கெட்டவங்கன்னு யார் சொன்னது?

  சரி இந்து மதத்தின் புராணங்களில் இருந்த குப்பைகளை கிளரிய ஐயா பெரியார் அவர்களை யாரும் இந்த மாதிரி சொல்லவில்லை.ஆனா முஸ்லீம்கள் புராணங்களில் உள்ள குப்பையை கிளரினால் அது எப்படி தகுதியை தாழ்த்துவது ஆகும்.

  //இனியாவது தொடர்ந்து நல்ல பதிவுகளை உங்கள் உண்மையான ஐடியில் இருந்து எழுதுங்கள
  //

  நல்ல கருத்துக்கு பிண்ணூட்டம் இட வரும் நீங்களே உங்க சொந்த ஐடியில் வரமுடியல,குப்பைகளை கிளறும் நான் எப்படி என் ஐடியில் வரமுடியும்.

  தொடர்ந்து வாருங்கள் உங்கள் கருத்தை பதியுங்கள்

 3. முரளி

  நன்பர் தமிழ்மகன் அவர்களே, 2 வரி படித்தபின் தான் இது என் பதிவென்பது எனக்கு புரிந்தது.. 🙂 என் பதிவை உங்களி வலையில் ஏற்றியதுக்கு நன்றி.

 4. தெய்வமகன்

  உங்கள் வருகைக்கு நன்றி முரளி,தொடர்ந்து வாருங்கள்.உங்கள் கட்டுரைக்கான பாராட்டுகள் இந்த கட்டுரையின் முதல் பிண்ணூட்டத்தில் வந்துள்ளது.

  //உங்களிடம் இவ்வளவு நல்ல சரக்கு இருக்கும் போது ஏன் பெரும்பாலும் கேவலமாக எழுதுகிறீர்கள்//

  நன்றிங்க அண்ணா,இந்த பாராட்டு எழுதின நண்பருக்கு போய் சேரும்ன்ணா.
  //

 5. Anonymous

  //
  சரி இந்து மதத்தின் புராணங்களில் இருந்த குப்பைகளை கிளரிய ஐயா பெரியார் அவர்களை யாரும் இந்த மாதிரி சொல்லவில்லை.ஆனா முஸ்லீம்கள் புராணங்களில் உள்ள குப்பையை கிளரினால் அது எப்படி தகுதியை தாழ்த்துவது ஆகும்.
  //

  இது எப்படி இருக்கிறது என்றால் ,உங்களை ஒருவர் அடித்தால் நீங்க்ள் சம்மந்தமில்லாத மற்றொருவரை போய் அடிப்பது போல் இருக்கிறது. அடுத்தவரிடம் இருக்கும் குறையை கண்டுபிடிப்பதால் உங்கள் குறை ஒன்றும் மறைந்து விடப் போவதில்லை. இதன் மூலம் உங்களிடம் உள்ள குறையை சரி செய்ய முடியாத உங்கள் இயலாமையை தான் வெளிப்படுத்துகிறீர்கள்

  //
  நல்ல கருத்துக்கு பிண்ணூட்டம் இட வரும் நீங்களே உங்க சொந்த ஐடியில் வரமுடியல,குப்பைகளை கிளறும் நான் எப்படி என் ஐடியில் வரமுடியும்.
  //

  நீங்கள் இந்துவாக இருந்தும் முஸ்லிம் பெயரில் பதிவெழுதி படிப்பவர்களை குழப்பி வருகிறீர்கள். இந்த குழப்பவாதி அனுகுமுறையால் உங்கள் வாதம் அடியோரு நிராகரிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. உங்களின் இந்த குழப்பவாதி அனுகுமுறையால் நான் உங்களின் மொத்த குணாதிசயங்களையே சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. இதனாலேயே என் ஐடியில் வரவில்லை

  //நான் முஸ்லீம்களை பத்தி ஒன்னுமே சொல்லலை.அவர்கள் பின் பற்றும் குரான்,ஹதீஸ்களை பத்திதான் பதிக்கிறேன்//

  எனக்கு இந்து புராணங்களில் நம்பிக்கை இல்லை அதனால் நான் அதை படிப்பதில்லை, விமர்சனமும் செய்வதில்லை. நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் ஒரு முஸ்லிமைவிட அதிகம் அவர்களின் நூல்களை படிப்பவ்ர்போல் தெரிகிறது. அதில் ஆபாசம் இருந்தால் அதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் நீங்கள் ஏன் அதை தொடர்ந்து படிக்க வேண்டும். ஒன்று உங்களுக்கு கண்மூடித் தனமான முஸ்லீம் எதிர்ப்பு வெறி இருக்க வேண்டும் அல்லது அதில் உள்ல ஆபாசத்தை நீங்கள் ரசித்திருக்க வேண்டும். இதில் எது காரணமாக இருந்தாலும் அது உங்கள் குறையே தவிர அவர்களை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை

 6. தெய்வமகன்

  //இது எப்படி இருக்கிறது என்றால் ,உங்களை ஒருவர் அடித்தால் நீங்க்ள் சம்மந்தமில்லாத மற்றொருவரை போய் அடிப்பது போல் இருக்கிறது. அடுத்தவரிடம் இருக்கும் குறையை கண்டுபிடிப்பதால் உங்கள் குறை ஒன்றும் மறைந்து விடப் போவதில்லை. இதன் மூலம் உங்களிடம் உள்ள குறையை சரி செய்ய முடியாத உங்கள் இயலாமையை தான் வெளிப்படுத்துகிறீர்கள்//

  குறைகள் இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு அதை சரி செய்வகிறவன் தான் மனிதன்.நீங்க சொல்கிற மாதிரி எந்த முஸ்லீமாவதும் தங்கள் மதங்களில் சொல்லப்படும் குறைகளை ஏற்றுக்கொல்கிறார்களா?

  //நீங்கள் இந்துவாக இருந்தும் முஸ்லிம் பெயரில் பதிவெழுதி படிப்பவர்களை குழப்பி வருகிறீர்கள். இந்த குழப்பவாதி அனுகுமுறையால் உங்கள் வாதம் அடியோரு நிராகரிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. உங்களின் இந்த குழப்பவாதி அனுகுமுறையால் நான் உங்களின் மொத்த குணாதிசயங்களையே சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. இதனாலேயே என் ஐடியில் வரவில்லை//

  நீங்களே ஒரு முடிவுக்கு வந்தால் அதற்கு நான் பொருப்பல்ல.நான் என் முந்தைய பதிவில் தெளிவாக சொல்லி உள்ளேன் நான் ஒரு கிறிஸ்தவன் என்று.நான் ஒன்றும் பெயரை மாற்றி எழுதவில்லை.நான் எழுதும்,பதிக்கும் விசயம் யாருக்கு போய் சேர வேண்டுமோ வர்களுக்கு போய் சேர பெயரை தேர்ந்தெடுத்து உள்ளேன் அவ்வளவே.சரி ஏன் அதை என் பெயரில் எழுதக்கூடாது என்று கேட்டால் அது ஒரு பயித்தியக்காரன் செயலாகவே இருக்கும்.

  //எனக்கு இந்து புராணங்களில் நம்பிக்கை இல்லை அதனால் நான் அதை படிப்பதில்லை, விமர்சனமும் செய்வதில்லை. நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் ஒரு முஸ்லிமைவிட அதிகம் அவர்களின் நூல்களை படிப்பவ்ர்போல் தெரிகிறது. அதில் ஆபாசம் இருந்தால் அதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் நீங்கள் ஏன் அதை தொடர்ந்து படிக்க வேண்டும். ஒன்று உங்களுக்கு கண்மூடித் தனமான முஸ்லீம் எதிர்ப்பு வெறி இருக்க வேண்டும் அல்லது அதில் உள்ல ஆபாசத்தை நீங்கள் ரசித்திருக்க வேண்டும். இதில் எது காரணமாக இருந்தாலும் அது உங்கள் குறையே தவிர அவர்களை குறை சொல்வதில் அர்த்தம் இல்ல//

  என் பதிவில் ஆபாசம் உள்ளது என்று பிண்ணூட்டம் இட்ட நீங்கள் மேலே சொன்ன இரண்டு காரணங்களுக்காகவும் கண்டிப்பாக என் தளத்துக்கு வந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  //1,ஒன்று உங்களுக்கு கண்மூடித் தனமான முஸ்லீம் எதிர்ப்பு வெறி இருக்க வேண்டும் அல்லது

  2,அதில் உள்ல ஆபாசத்தை நீங்கள் ரசித்திருக்க வேண்டும்//

  ஆனால் இந்த இரண்டு காரணமும்ம் இல்லாமல் மூன்றாவது ஒரு காரணம் எப்படி உங்களுக்கு இருக்குமோ அதே காரணத்திற்காகவே நான் இவைகளை எழுதுகிறேன் அவ்வளவே

 7. Anonymous

  //குறைகள் இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு அதை சரி செய்வகிறவன் தான் மனிதன்.நீங்க சொல்கிற மாதிரி எந்த முஸ்லீமாவதும் தங்கள் மதங்களில் சொல்லப்படும் குறைகளை ஏற்றுக்கொல்கிறார்களா?//

  உங்களது இந்த கேள்வி மூலம் அவர்கள் தங்கள் குறைகளை ஏற்றுக் கொள்ளாததால் நீங்களும் உங்களுடைய குறைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒத்துக் கொள்கிறீர்கள். இது சொந்த புத்தி இல்லாமல் அடுத்தவர் செய்தால் நானும் செய்வேன் என்பது மாதிரியான அனுகுமுறை. முஸ்லிமக்ள் தங்கள் செயல்களால் தான் இன்று உலகின் பல பகுதிகளிலும் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். இதே நிலை உங்களுக்கும் ஏற்பட வேண்டுமா? உங்களுக்கு என்று சுயகாம சிந்தித்து செயல்பட தெரியாதா. அவர்களைப் பார்த்து தான் கற்றுக் கொள்ள வேன்டுமா?

  ஆனால் இந்த இரண்டு காரணமும்ம் இல்லாமல் மூன்றாவது ஒரு காரணம் எப்படி உங்களுக்கு இருக்குமோ அதே காரணத்திற்காகவே நான் இவைகளை எழுதுகிறேன் அவ்வளவே

  ஆம் நான் உங்களுடைய பல பதிவுகள் சூடான இடுகைகளில் இடம் பெற்றதால் படித்து இருக்கிறேன். பின்னர் நீங்கள் எழுதினாலே அது ஆபாசமாக தான் இருக்கும் என்று தவிர்த்து வந்தேன். உங்களை போல தொடர்ந்து ஆபாசத்தை ரசிக்கவில்லை. நான் நினைத்து இருந்தால் உங்களின் ஆபாச பதிவு ஒன்றில் இதே பின்னூட்டத்தை எழுதி இருக்க முடியும். ஆனால் நான் உங்களை போல் என்னுடைய் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் நீங்களோ இங்கே பார் பன்றி நாறுகிறது என்று அதன் குட்டையில் இருந்து கொண்டே கூக்குரல் இடுகிறீர்கள்

  இந்த பதிவு உபயோகமான பதிவாக இருந்ததால் என்னுடைய கருத்துகளை இங்கே பதிக்கிறேன். உங்கள் பதில்களை பார்த்தால் நல்ல முறையில் மேல் படிப்பு படித்தவர் மாதிரி தெரிகிறது அதை நல்ல முறையில் பயன்படுத்தாமல் இவ்வளவு கேவலமாக பயன்படுத்துகிறீர்களே

  ஒரு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் நூல் மூலம் ஏற்படுத்திய தாக்கத்தை விட உங்களைப் போன்ற இந்துத்வாவாதிகளால் ஏற்படுத்த முடியாது. வேண்டுமானால் உங்களால் மதக் கலவரத்தை தான் ஏற்படுத்த முடியும். உங்களது மேம்பட்ட படிப்பால் இன்னொரு அர்த்தமுள்ள இந்து மதம் வர முயற்சி செய்யலாமே. இதற்கு மேலும் நீங்கள் விதண்டாவதம் செய்வதாக இருந்தால் என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. உங்களுக்கு ராமர் அருள் புரிவாராக

 8. தெய்வமகன்

  நல்ல யோக்கியகாரன் முறையில் முகமூடி அணிந்து நீங்கள் கொடுத்த அறிவுறைக்கு நன்றி.

  ஆனால் தலைப்ப்புகளில் ஆபாசங்களை தவிர்க்க முயற்சி செய்து வருகிறேன்.ஆனால் மற்றபடி குரான்,ஹதீஸ்,புராணங்களின் விளக்கங்கள் தொடரும்.

  இத்தோடு உங்களின் இந்த வகை அறிவுறுத்தல்களை நிருத்திக்கொள்ளவும்.

 9. Anonymous

  இந்து புராணங்களில் இல்லாத ஆபாசமா 🙂

 10. Anonymous

  உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து இருப்பதை கூட ஏற்றுக் கொள்ள முடியாத உங்களுக்கும் தாலிபான்களுக்கும் என்ன வித்தியாசம். நீங்கள் கெட்ட கேட்டிற்Kஉ அடுத்தவரை குறை வேறு சொல்ல வேண்டுமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s