மகனின் மனைவியை சொந்தமாக்கும் வழி என்ன?


காரணம் 2. முகமது:

ஹதீஸ்களை விட முகமதுவிற்கு நான் இரண்டாவது இடம் கொடுத்தேன், ஏனென்றால், இவரது வாழ்க்கை தான் ஹதீஸ்களில் இருப்பது. இன்று நாம்(மாற்று மார்க்கத்தவர்கள்) முஸ்லீம்களிடம் பேசும் போது, அவர்கள் “எங்கள் குர்‍ஆன் இப்படி, அப்படி, அற்புதம், அறிவியல், சரித்திரம் என்று அடிக்கிக்கொண்டே போவார்கள், பெருமைப்படுவார்கள்”. திடீரென்று, முகமதுவின் வாழ்க்கையைப் பற்றி சில கேள்விகள் கேட்டால், போதும் உடனே அவர்களின் முகநாடி மாறும் ஏன்?

இஸ்லாமியர் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக கேட்கும் கேள்விகள்:

a) ஏன் முகமது வன்முறை மூலமாக தன் ஆட்சியை அமைத்தார்?

b) அவர் ஏன் 10க்கும் அதிகமான திருமணங்களை செய்துக்கொண்டார்?

c) முகமதுவிற்கு 50க்கும் அதிகமான வயது இருக்கும் போது, 6 வயது சிறுமியை(தன் பேத்தி வயதில் இருக்கும்) திருமணம் செய்துக்கொண்டார்?
d) அப்பெண்ணுக்கு 9 வயதாகும் போது ஏன் தன்னுடன் தாம்பத்திய வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டார்? இன்று இது போல யாராவது செய்தால், அது சமுதாயத்திற்கு ஏற்றதாக இருக்குமா?

e) தன் மருமகளை(வளர்ப்பு மகனின் மனைவியை) ஏன் திருமணம் செய்துக்கொண்டார்?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த கேள்விகளைப் பற்றி நான் இப்போது விளக்கப்போவதில்லை. இப்படிப்பட்ட கேள்விகளை மக்கள் கேட்டால், அதனை விளக்க இஸ்லாமியர்கள் பல இலட்சங்கள் செலவு செய்து, இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஏன் இஸ்லாமியர்களுக்கும் கூட‌ பதில் கொடுக்க நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

ஆனால், இந்த பிரச்சனை கிறிஸ்தவர்களுக்கு இல்லை. எங்கள் இயேசு ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றார், மற்றவர்கள் விரல் நீட்டும் அளவிற்கு ஒரு கீழ் தரமான வாழ்க்கையை அவர் வாழவில்லை. எனவே, இப்படிப்பட்ட கேள்விகள் கிறிஸ்தவத்தை நோக்கி கேட்கப்படுவதில்லை. அதனால், இஸ்லாமைப் போல பல கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

(இந்த இடத்தில், நாத்தீகர்களும், மற்ற மத அன்பர்களும் “பைபிளில் இயேசு பற்றி நல்லவிதமாக எழுதிவிட்டு சென்று விட்டார்கள் அவரது சீடர்கள், இயேசு எப்படி வாழ்ந்தாரோ நமக்கு எப்படி தெரியும்” என்று கேட்கலாம். எங்கள் வேதத்தில் சொல்லப்பட்டதை நாங்கள் நம்புகிறோம், இதனால், மற்றவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இருப்பதில்லை. ஆனால், இஸ்லாமியர்களின் வேதத்தில், ஹதீஸ்களில் முகமதுவின் (நல்ல) வாழ்க்கையைப் பற்றி மிகவும் தெள்ளத்தெளிவாக புட்டு புட்டு சொல்லிவிட்டதால், அவர்களுக்கு இப்பொது தங்கள் முகமதுவின் வாழ்க்கையை நமக்கு விளக்கவேண்டிய கடமை அவர்களுக்கு அதிகம் என்றுச் சொல்கிறேன்.)

“சரி முகமது அந்த காலத்து மனிதர், அந்த காலத்து பழக்கங்கள் படி தான் வாழ்ந்தார் இதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், இன்று நாம் வாழவேண்டிய முறை, பின்பற்றவேண்டிய முறை அது அல்ல, எனவே, முகமதுவின் வாழ்க்கையை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று” இன்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், யாரும் கேள்விகள் கேட்கப்போவதில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள், அவரது வாழ்க்கை இன்று கூட வாழ, பின்பற்றத்தகுந்தது என்றுச் சொல்லும் போது, மற்றவர்களுக்கு மனதிலே எங்கோ அறிக்கும். என்வே, அதனை அடக்கமுடியாமல், கேள்வியாக கேட்டுவிடுகின்றனர்.

எனவே, இஸ்லாமை நோக்கி விரல் நீட்டுவதற்கு முகமதுவின் வாழ்க்கையும் ஒரு காரணமாகிவிட்டதால், அவரது வாழ்க்கையை இன்றும் நாம் பின்பற்றலாம் என்று இஸ்லாமியர்கள் சொல்வதால், பலருக்கு( இஸ்லாமியர்களுக்கும் சேர்த்துதான்) பல கேள்விகள் எழுகின்றன. இதனை சரிசெய்ய பதில் கொடுக்க இஸ்லாமிய அறிஞர்கள் படுகின்ற பாடு, அடேங்கப்பா? வார்த்தைகளில் சொல்லமுடியாது.

கிறிஸ்தவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. அதே போல, பைபிளில் இயேசுவிற்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி மற்றவர்கள் கேள்விகள் எழுப்பினால், விரலை நீட்டினால், அவர்கள் தங்கள் விரல்களை நீட்டுவதற்கு முன்பே, அவர்களின்(பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தவர்களின்) நேர்மையற்ற வாழ்க்கையை பைபிள் படம் பிடித்து காட்டிவிடுகின்றது. கிறிஸ்தவர்களும் ஆமாம், இந்த மனிதர் இந்த தவறு செய்தார், ஆபிரகாம் பொய் சொன்னார்? தன் மனைவியை தன் உயிருக்கு பயந்து சகோதரி என்று ஒரு இராஜாவிடம் பொய் சொன்னார், என்று நாங்களே சொல்லிவிடுகின்றோம். எனவே, யாரும் கேள்விகள் கேட்பதில்லை.

எனவே, எனதருமை இஸ்லாமிய அறிஞர்களே, மேதாவிகளே, எங்களுக்கு உங்களைவிட இயேசுவின் வாழ்க்கையை மக்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் மிக மிக குறைவு. அதனால், கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் குறைவு. உங்களுக்குத்தான் அதிக தேவை இருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெண்கள், மனைவிகள், முகமது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s