வன்னிய கிறித்தவர்களும்,தலித் கிறித்தவர்களும் இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறையும் காட்சி.


இந்தியாவெங்கிலும் ஏராளமான இந்து கோவில்கள் பூட்டப்பட்டு பாழடைந்து கிடப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.காரணம் என்ன என்று நாம் ஆராய்ந்தால் மேல் சாதிக்காரர்களுக்கும்,கீழ் சாதிக்காரர்களுக்கும் இடையே நடந்த சண்டையால் அந்த கோவிலை பூட்டி இருப்பார்கள்.இந்துக் கோவில்க இப்படி பூட்டப்படுவது ஒரு பெரிய பிரச்சனை இல்லை.

ஏன் என்றால் இந்து கடவுள்களே இந்த சாதிப் பிரிவுகளை உண்டாக்கி இருப்பதால் சாதி சண்டை வரத்தான் செய்யும் ஆனால் இதில் நாம் கவனிங்க வேண்டியது இதே பிரச்சனைகள் கிறிஸ்தவத்தின் பெயரில் அரங்கேறுவதை பார்க்கும் போது தான் இயேசுவை இவர்கள் மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துவதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

இதில் சண்டையில் ஈடுபட்ட இரண்டு பேறுமே சொல்லப்போனால் கீழ் சாதிகள் தான்.வன்னியன் என்றால் என்ன பாப்பான் என்று நினைப்போ?பாப்பானுங்க்கு முன்னால் எல்லாமே அடிமைகள் தான்.இதை புரிந்து கொள்ளாமல் மற்றவனை கீழ் சாதியாக நினைப்பதை என்ன கொடுமை என்று நினைப்பது?நான் கீழ் சாதியாக இருந்தால் பரவாயில்லை.எனக்கு கீழ ஒரு சாதி இருக்குல்ல என்று அடிமைத்தனத்தில் சுகம் காண்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.


ஆனால் இந்து மதத்தில் இருக்கும் போது நீ என்ன சாதியாவோ இருந்துட்டு போ.ஆனால் கிறிஸ்தவத்துக்கும் சாதிக்கு என்ன சம்மந்தம்.இயேசு கிறிஸ்து யூதர்களால் கீழ் சாதிகள் என்று சொல்லப்பட்ட சமாரியர்கள் வாழ்ந்த கிராமத்தில் தங்குவது மட்டும் அல்லாமல் அவர்களை மிகவும் நேசிக்கவும் செய்தார்.http://www.tamilchristians.com/modules.php?name=Bible&bno=43&cho=4 யோவான் நான்காம் அதிகாரத்தில் இந்த சம்பவத்தை நீங்கள் காணலாம்.


அவரிடத்தில் அநேக கிரேக்கர்கள் கூட விரும்பி வந்தனர்.இப்படி இருக்க கிறித்தவத்துக்கும் ,சாதிக்கும் என்ன சம்மந்தம்.

கீழே உள்ள விவிலிய வார்த்தைகளை பாருங்கள்

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.கலாத்தியர் 3:28

அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசெயர் 3:11

யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ரோமர் 10:12

ஆனால் விவிலியம்(பைபிள்) இப்படிச்சொல்லும் போது தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லும் இவர்களை எப்படி தங்களை வன்னிய கிறித்தவர்கள் என்றோ,அல்லது நாடார் கிறித்தவர்கள் என்று அழைத்துக்கொள்ள முடியும்.கண்டிப்பாக முடியாது.அரசாங்க அற்ப உதவி பெற்றுக்கொள்ள தங்களை தலித்துகள் என்ற அடையாளத்தை கழைந்து எரியக்கூட இவர்கள் தயங்கி நின்று தங்களை தலித் கிறித்தவர்கள் என்று அடையாளப்படுத்தக் கூட இவர்கள் வெட்கப்படுவது இல்லை.

ஏன் இந்த மாய்மாலம்.இந்து மதத்தை தூக்கி எரிந்துவிட்டு வந்த இவர்களால் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏன் உதறிவிட்டு வர முடியவில்லை.கிறித்தவ மதத்துக்கு மாறிவிட்டோம் என்று பீத்திக்கொள்ளும் இவர்களால் ஏன் கிறித்தவ மதத்தின் அடிப்படைக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கிறித்தவ மதத்தில் எல்லா பிரிவுகளிலும் சாதி உண்டா என்பதை யோசித்து பார்க்க வேண்டியது தானே.ஒரு வேளை சாதியை பிடித்து தொங்கும் கிறித்தவப் பிரிவுகளை உதறித்தள்ளி விட்டு வேறு சாதியை காரணம் காட்டாத எத்தனையோ பிரிவுகளுக்கு மாறி போகவேண்டியதுதானே.

தனியாக கோவில் கட்டியதாக சொல்லும் தலித் கிறித்தவர்கள் ஏன் உங்கள் பழைய பிரிவிடத்தில் சென்று குருவானவரை கேட்டீர்கள்.நீங்களே உங்களில் ஒருவரை குருவாக்கி வேறு பிரிவாக அந்த கோவிலை மற்றி இருக்கலாமே.ஆனால் இதை செய்யாமல் ஏன் இப்படி கிறித்துவுக்கு அவமானச்சின்னங்களாக வாழ்கிறீர்கள்.

கடைசியாக

கத்தோலிக்க,சி எஸ் ஐ ,பெந்தேகோஸ்தே திருச்சபை மக்களே நான் கடைசியாக சொல்ல விரும்புவது நீங்களும் உங்கள் திருச்சபைகளும் கிறித்துவுக்கு அடையாளங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்று மறந்து அவருக்கு அவமானத்தை உண்டாக்குபவர்களாக மாறாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

உங்கள் சபைக்கு வரும் ஏந்த சாதியினரையும் முதலில் அவர்கள் சாதியை மறக்க போதியுங்கள்.அவர்கள் என்ன சாதி என்பதே அவர்கள் மற்ந்து போக செய்யுங்கள்.கிறித்துவின் அன்பில் மட்டும் அவர்கள் இணைந்து கொள்ள செய்யுங்கள்.

இப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்தால் எத்தனை கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பது போல் எவ்வளவு கோடி பேர் எழுந்து எதிர்த்தாலும் கிறித்துவின் அன்பை மக்கள் ஏற்றுக்கொள்ளுவதை ஒருவனும் தடுக்க முடியாது.இது நிச்சயம்

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இந்து, இயேசு, இஸ்லாம், கிறிஸதவம், சாதிகள், முஸ்லீம்

One response to “வன்னிய கிறித்தவர்களும்,தலித் கிறித்தவர்களும் இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறையும் காட்சி.

  1. Thank You

    I am a christian honestly In full agreement with you

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s