Daily Archives: மார்ச் 10, 2008

கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?’

கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?’ இதை யாரு சொன்னது தெரியுங்களா அல்லாஹ்வின் நபிதான்.
புகாரி பாகம்

5, அத்தியாயம் 67, எண் 5080

ஜாபிர்

இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நான் திருமணம் செய்துகொண்டேன். (சில நாள்களுக்குப் பின்) என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘யாரை மணமுடித்தாய்?’ என்று கேட்டார்கள். நான்கன்னி கழிந்த ஒரு பெண்ணை மணமுடித்தேன்என்று பதிலளித்தேன். அதற்கவர்கள், ‘உனக்கென்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?’ என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹாரிப் இப்னு திஸார்(ரஹ்) கூறினார்:

நான் இந்த ஹதீஸை அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்ள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றேன் என்று கூறினார்கள்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கேட்டார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், கன்னி பெண், குரான், பெண்கள், முகமது, ஹதீத்

பொம்பளய வெறும் போதை வஸ்ததான் உபயோகிச்சுக்கோனும் அதை உட்டுட்டு ஆட்சியதிகாரத்தை ஒரு பொம்பள கிட்ட ஒப்படைச்ச சமுதாயம் ஒருபோதும் உருப்படாது


ஆட்சியதிகாரத்தை ஒரு பொம்பள கிட்ட ஒப்படைச்ச சமுதாயம் ஒருபோதும் உருப்படாது இப்படின்னு யாராவதும் சொன்ன உடனே நாம ஆயிரம் ஆயிரம் பதிவெழுதி அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவோம்.ஆனால் இப்படி சொன்ன ஜிஹாதிகளின் தலைவர் உலகம் புகழும் உத்தமராம் எப்படி போகுது கதை என்று பாருங்கள்,நிறைய ஜிஹாதிகளுக்கு இது ரோம்ப பயனளிக்குதாம்,


புகாரி பாகம் 5, அத்தியாயம் 64, எண் 4425

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்

ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டு (ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முனைந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது.

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் ‘தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது” என்று கூறினார்கள்.

(இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல்.)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், நபி, பெண்கள், முகமது

நீங்கள் கணவரில்லாமல் தனியாக பிரயாணம் செய்யும் பெண்ணா?ஜாக்கிரதை.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எங்கள் நபிகள் நாயகம் சொன்னது எல்லா காலங்களுக்கு பொருந்தும் என்று ஜிஹாதிகள் கொடி பிடிப்பது எல்லாறும் அறிந்ததுதான்.
ஆனால் அவர் சொன்ன சின்ன சின்ன விஷயங்கள் கூட நடைமுறையில் செய்ய விரும்மும் அவர்கள் கீழே உள்ள அவருடைய வார்த்தைகளை அப்படியே கீழ்படிவார்களானால் பெண்களின் நிலை என்னவாக முடியுமோ தெரியவில்லை.பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த அனந்தத்தை நினைக்கும் போது ஆஹா என்ன ஒரு பெருந்தன்மை என்றே நினைக்கத்தோன்றுகிறது.
பாகம்

2, அத்தியாயம் 28, எண் 1862

இப்னு

அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

சந்திக்கமணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர்

பாகம்

2, அத்தியாயம் 28, எண் 1864

அபூ

ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை🙂 ‘கணவனோ மணமுடிக்கத் தகாதவரோ இல்லாமல் இரண்டு நாள்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!”

அபூ ஸயீத்(ரலி), நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள்!” என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கஸ்ஆ கூறுகிறார்.

பாகம்

2, அத்தியாயம் 30, எண் 1995

நபி

(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு யுத்தங்களில் பங்கெடுத்த அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: ‘ஒரு பெண் தன்னுடைய கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாள்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா (நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள்) ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! ஸுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம், பைத்துல் முகத்தஸ், என்னுடைய இந்தப் பள்ளி வாசல் (மஸ்ஜிதுந் நபவீ) ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணத் மேற்கொள்ளக் கூடாது!”

பாகம்

3, அத்தியாயம் 56, எண் 3006

இப்னு

அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், ‘நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்என்று கூறினார்கள்.

பாகம்

3, அத்தியாயம் 56, எண் 3006

இப்னு

அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், ‘நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்என்று கூறினார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், பிரயாணம், பெண்கள், முகமது

வன்னிய கிறித்தவர்களும்,தலித் கிறித்தவர்களும் இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறையும் காட்சி.

இந்தியாவெங்கிலும் ஏராளமான இந்து கோவில்கள் பூட்டப்பட்டு பாழடைந்து கிடப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.காரணம் என்ன என்று நாம் ஆராய்ந்தால் மேல் சாதிக்காரர்களுக்கும்,கீழ் சாதிக்காரர்களுக்கும் இடையே நடந்த சண்டையால் அந்த கோவிலை பூட்டி இருப்பார்கள்.இந்துக் கோவில்க இப்படி பூட்டப்படுவது ஒரு பெரிய பிரச்சனை இல்லை.

ஏன் என்றால் இந்து கடவுள்களே இந்த சாதிப் பிரிவுகளை உண்டாக்கி இருப்பதால் சாதி சண்டை வரத்தான் செய்யும் ஆனால் இதில் நாம் கவனிங்க வேண்டியது இதே பிரச்சனைகள் கிறிஸ்தவத்தின் பெயரில் அரங்கேறுவதை பார்க்கும் போது தான் இயேசுவை இவர்கள் மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துவதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

இதில் சண்டையில் ஈடுபட்ட இரண்டு பேறுமே சொல்லப்போனால் கீழ் சாதிகள் தான்.வன்னியன் என்றால் என்ன பாப்பான் என்று நினைப்போ?பாப்பானுங்க்கு முன்னால் எல்லாமே அடிமைகள் தான்.இதை புரிந்து கொள்ளாமல் மற்றவனை கீழ் சாதியாக நினைப்பதை என்ன கொடுமை என்று நினைப்பது?நான் கீழ் சாதியாக இருந்தால் பரவாயில்லை.எனக்கு கீழ ஒரு சாதி இருக்குல்ல என்று அடிமைத்தனத்தில் சுகம் காண்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.


ஆனால் இந்து மதத்தில் இருக்கும் போது நீ என்ன சாதியாவோ இருந்துட்டு போ.ஆனால் கிறிஸ்தவத்துக்கும் சாதிக்கு என்ன சம்மந்தம்.இயேசு கிறிஸ்து யூதர்களால் கீழ் சாதிகள் என்று சொல்லப்பட்ட சமாரியர்கள் வாழ்ந்த கிராமத்தில் தங்குவது மட்டும் அல்லாமல் அவர்களை மிகவும் நேசிக்கவும் செய்தார்.http://www.tamilchristians.com/modules.php?name=Bible&bno=43&cho=4 யோவான் நான்காம் அதிகாரத்தில் இந்த சம்பவத்தை நீங்கள் காணலாம்.


அவரிடத்தில் அநேக கிரேக்கர்கள் கூட விரும்பி வந்தனர்.இப்படி இருக்க கிறித்தவத்துக்கும் ,சாதிக்கும் என்ன சம்மந்தம்.

கீழே உள்ள விவிலிய வார்த்தைகளை பாருங்கள்

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.கலாத்தியர் 3:28

அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசெயர் 3:11

யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ரோமர் 10:12

ஆனால் விவிலியம்(பைபிள்) இப்படிச்சொல்லும் போது தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லும் இவர்களை எப்படி தங்களை வன்னிய கிறித்தவர்கள் என்றோ,அல்லது நாடார் கிறித்தவர்கள் என்று அழைத்துக்கொள்ள முடியும்.கண்டிப்பாக முடியாது.அரசாங்க அற்ப உதவி பெற்றுக்கொள்ள தங்களை தலித்துகள் என்ற அடையாளத்தை கழைந்து எரியக்கூட இவர்கள் தயங்கி நின்று தங்களை தலித் கிறித்தவர்கள் என்று அடையாளப்படுத்தக் கூட இவர்கள் வெட்கப்படுவது இல்லை.

ஏன் இந்த மாய்மாலம்.இந்து மதத்தை தூக்கி எரிந்துவிட்டு வந்த இவர்களால் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏன் உதறிவிட்டு வர முடியவில்லை.கிறித்தவ மதத்துக்கு மாறிவிட்டோம் என்று பீத்திக்கொள்ளும் இவர்களால் ஏன் கிறித்தவ மதத்தின் அடிப்படைக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கிறித்தவ மதத்தில் எல்லா பிரிவுகளிலும் சாதி உண்டா என்பதை யோசித்து பார்க்க வேண்டியது தானே.ஒரு வேளை சாதியை பிடித்து தொங்கும் கிறித்தவப் பிரிவுகளை உதறித்தள்ளி விட்டு வேறு சாதியை காரணம் காட்டாத எத்தனையோ பிரிவுகளுக்கு மாறி போகவேண்டியதுதானே.

தனியாக கோவில் கட்டியதாக சொல்லும் தலித் கிறித்தவர்கள் ஏன் உங்கள் பழைய பிரிவிடத்தில் சென்று குருவானவரை கேட்டீர்கள்.நீங்களே உங்களில் ஒருவரை குருவாக்கி வேறு பிரிவாக அந்த கோவிலை மற்றி இருக்கலாமே.ஆனால் இதை செய்யாமல் ஏன் இப்படி கிறித்துவுக்கு அவமானச்சின்னங்களாக வாழ்கிறீர்கள்.

கடைசியாக

கத்தோலிக்க,சி எஸ் ஐ ,பெந்தேகோஸ்தே திருச்சபை மக்களே நான் கடைசியாக சொல்ல விரும்புவது நீங்களும் உங்கள் திருச்சபைகளும் கிறித்துவுக்கு அடையாளங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்று மறந்து அவருக்கு அவமானத்தை உண்டாக்குபவர்களாக மாறாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

உங்கள் சபைக்கு வரும் ஏந்த சாதியினரையும் முதலில் அவர்கள் சாதியை மறக்க போதியுங்கள்.அவர்கள் என்ன சாதி என்பதே அவர்கள் மற்ந்து போக செய்யுங்கள்.கிறித்துவின் அன்பில் மட்டும் அவர்கள் இணைந்து கொள்ள செய்யுங்கள்.

இப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்தால் எத்தனை கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பது போல் எவ்வளவு கோடி பேர் எழுந்து எதிர்த்தாலும் கிறித்துவின் அன்பை மக்கள் ஏற்றுக்கொள்ளுவதை ஒருவனும் தடுக்க முடியாது.இது நிச்சயம்

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இந்து, இயேசு, இஸ்லாம், கிறிஸதவம், சாதிகள், முஸ்லீம்

காலை தூக்கி காட்டும் இரகசியம் என்னவோ?

தீட்சிதர்கள் யார்? நடராஜர் இடக்காலை தூக்கி ஆடுவதன் மர்மம் என்ன?

சைவக் குரவர்களால் சிலிர்த்துப் பாடப்பெற்ற ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவது பிரச்னையாகி அரசின் அதிரடி முயற்சியால் இப்போது நிலைமை சகஜமாகியிருக்கிறது.

‘போலீஸாரையும் தேவாரம் பாட வந்த ஓதுவார்களையும் நெய்யையும் எண்ணெயையும் வாரி ஊற்றி ஓடஓட விரட்டிய இந்தத் தீட்சிதர்கள் யார்?’ என்று வேத மேதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம் கேட்டோம்.

”வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டதுதான் ஆகமம். அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத்ர ஆகமம் வைகானஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்துக்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை அதாவது வழிபாட்டு முறையை புறக்கணிச்சிட்டு ‘வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்’னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.

தீட்சிதர்கள் என்ற சொல்லுக்கு தீட்சை பெற்றவர்கள் என்று அர்த்தம். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பூஜை செய்யும் பட்டாச்சாரியார்களுக்கும் தீட்சிதர்கள் என்ற பட்டம் உண்டு. அவர்கள் ஆகம தீட்சை பெற்றவர்கள். ஆனால் இந்த தீட்சிதர்களோ வேத தீட்சை பெற்றவர்கள். அதாவது தன்னை வழிபடுவதற்காகவே கைலாசத்திலிருந்து சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள் இந்த தீட்சிதர்கள். அவர்களுக்கு தாங்கள்தான் ‘ஒரிஜினல் பிராமணர்கள்’ என்ற எண்ணம் உண்டு.

இந்த தீட்சிதர்களது ஆகமம் அல்லாத வைதீக வழிபாடு சிதம்பரத்தில் மட்டுமல்ல ஆவுடையார்கோயில் காஞ்சிபுரம் காமாட்சி கோயில் ஆகிய இடங்களிலும் நடக்கிறது. ஆனால் அவர்களெல்லாம் சிதம்பரம் தீட்சிதர்களைப் போல இவ்வளவு தீவிரமாக இல்லை. வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியதுதான் ஆகமம். ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் முதலானவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருவதுதான் தீட்சிதர்களின் வழிமுறை.

வேதம் சொன்ன யாகங்களில் முக்கியமானது பலிபொருட்கள். அதாவது மாடுகள் ஆடுகள் குதிரைகள் ஆகியவற்றை பலி கொடுக்க வேண்டும். அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்றுவரை பசுக்களை பலி கொடுக்கும் சோம யாகம் முதலானவற்றைச் செய்துவர வேண்டும் என்பது ஐதீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.

‘வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும் வேதம் சொன்ன வடமொழியில்தான் இருக்க வேண்டும்?’ என்று சொல்லித்தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள். இன்னும் ஒரு சங்கதி தெரியுமோ?
சைவ ஆகமத்தில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. ஆனால் வேத வழிபாட்டை பின்பற்றும் சிதம்பரத்தில் லிங்கத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. பெரும்பாலான பக்தர்கள் கோபப்படக் கூடாது என்பதற்காகத்தான் சிதம்பரத்தில் சிவபெருமான் ‘ஆகாச லிங்கமாக’ இருப்பதாக… அதாவது கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். மக்களும் நம்பிவிட்டனர்.

லிங்கத்தைவிட நடராஜர்தான் அங்கே முக்கியம். ‘நடராஜ மகாத்மியம்’ என்றொரு புஸ்தகத்தை எழுதியிருக்கார் ஒரு தீட்சிதர். அதில் ‘சிவபெருமான் நடனப் போட்டியில காளி தேவியைத் தோற்கடிக்க வழி தெரியாமல் தன் இடக்காலை உயரே தூக்கி சங்கடப்படுத்தினார். காளியும் வெட்கப்பட்டு ஆட்டத்திறன் அதனால் பாதிக்கப்பட்டு நடராஜர் ஜெயித்தார் என்று கதையே உண்டு.

அதாவது சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும். அவர்களின் பாஷையான தமிழை முற்றாக மறுதலிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களின் கொள்கை. இவர்களைப் போய் ‘தில்லைவாழ் அந்தணர்கள்’னு சுத்தத் தமிழில் அடைமொழி போட்டு யார் கூப்பிட்டதோ…” என்று பொருள் பொதியச் சிரித்தார் தாத்தாச்சாரியார்.

நன்றி: ஆனந்த விகடன்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், கால், சிதம்பரம், நடராஜர், முகமது