வைப்பாட்டி வீட்டுக்கு போன கோவலனுக்காக காத்திருக்கும் கண்ணகிகள்


கணவன் பொம்பளப் பொறுக்கியா இருந்தா மனைவி என்ன செய்யனும்?

பார்ப்பனர்களின் மதத்தில் பெண்ணுரிமை எப்படி பாதுகாக்கப் படுகிறது என்பதற்கு ஒரு சாம்பிள்.

“கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்த்ரீலோலனா யிருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்த்ரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.” (மநு: 5:154)

இன்னொரு சாம்பிள்.

“கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளியாகவிருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம், துணிமணிகள், படுக்கை இவற்றை கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.” (மநு: 9:78)

இதுமட்டுமல்ல.. பார்ப்பனர்களின் மதம் பெண்களைப் பற்றி எவ்வளவு உயர்ந்த அபிப்ராயம் வைத்திருக்கிறது தெரியுமா? இதோ..

“மாதர்களின் சுபாவமே மனிதர்கட்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்.” (மநு: 2:213)

இன்னொன்று..

“மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்.” (மநு 9:15)

இவங்களோட அம்மா, தங்கை, மனைவி, மகள் எல்லாம் மாதர்கள் இல்லையா?

இதையெல்லாம் விட படு கேவலமான ஒரு’கொள்கை’யும் மநுவில் இருக்கிறது.

“தாய், தங்கை, பெண் இவர்களுடன் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது” (மநு: 2:215)

இதுக்கு என்ன காரணம்? தாய், தங்கை, மகளாக இருந்தால் கூட தனியா இருக்குறப்போ இவனோட மனசை அவங்க கெடுத்துடுவாங்களாம். அட கேடுகெட்ட ஜென்மங்களே.

மனைவியை வேற எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க.

“ஒருவன் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம்.” (மநு: 9:52)

இன்னொன்று.

“பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாயிருந்தால், அப்போது அந்த ஸ்த்ரீ தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது” (மநு: 9:59)

இதையெல்லாம் படிச்சுட்டு பார்ப்பன பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களின் முகத்தில் காரித்துப்பி தொடப்பக்கட்டையால அடிச்சு விரட்டுனா அதுக்கு நாம பொறுப்பில்லை!

http://unmaiudaiyaan.blogspot.com/2008/03/blog-post_08.html

2 பின்னூட்டங்கள்

Filed under அல்லாஹ், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான்.மனு சாஸ்திரம

2 responses to “வைப்பாட்டி வீட்டுக்கு போன கோவலனுக்காக காத்திருக்கும் கண்ணகிகள்

  1. Anonymous

    உறைக்கச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் கோவலனை ஏன் கோவளனாக்கினீர்கள்?

  2. தெய்வமகன்

    மன்னிச்சிருங்க அனானி மாத்திட்டேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s