Daily Archives: மார்ச் 7, 2008

RSS எடுபுடி எழில் உனக்கு பதில்

//பதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஏதாவது ஒன்றென்றால், தீட்டு, கோவில், பார்ப்பான் என்று ஆரம்பிப்பதுதான் எல்லா கிறிஸ்துவ, இஸ்லாமிய பிரச்சாரகர்களின் வழியாயிற்றே.

இவர்களது தீட்டு, இவர்களது கோவில், இவர்களது பூசாரிகளின் வண்டவாளத்தை பற்றிதான் இந்த பதிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதியிருக்கிறேனே. பார்க்கலாமே?//

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை இல்லவேயில்லை” என்கிற ஸ்டைலில் என்னமோ இல்லாத ஒன்ன சொன்ன மாதிரி ஒரு மேக்கப்பா?

//

என்னுடைய முந்தைய பதிவுகளை படித்திருந்தால் தெரிந்திருக்கும். ஆகவே தெரிந்துகொள்ள மீண்டும் சொல்கிறேன்.//

அதப்படிச்சதுனால தனே நான் இப்படி எழுதீடு இருக்கேன்

.

//

தீண்டாமை என்று பண்டைய இந்தியாவில் ஏதும் இல்லை. தீண்டாமை இருந்திருந்தால் ஏன் அது திருக்குறளில் இல்லை? ஏன் அது மனுதர்மத்திலோ, விதுரநீதியிலோ கூட இல்லை?//

மனு சட்டம் பத்தி உனக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதுன்னு ஊருக்கே தெரிஞ்சு போச்சு

.இதுல வேற வக்காலத்து.போய் அத படிச்சு பாரு அப்பத் தெரியும் இந்து மதத்தோட வண்டவாளம்.

//
தீண்டாமை என்பது மொகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்தபோது அவர்கள் தங்கள் பெண்கள் வீட்டை விட்டு போகமாட்டார்கள் என்று ஆக்கி அவர்களுக்கு மலம் அள்ள உருவாக்கிய முறை.
மொகலாயர் வருவதற்கு முன்னால் இந்தியாவில் மலத்தை மனிதன் அள்ளியதே கிடையாது. இரட்டை குவளைக்கு இந்துமதம் ஜவாப்தாரி அல்ல. இந்தியாவில் இரண்டாயிரம் வருடமாக ஆண்ட மொகலாயர், நவாப்புகள், ஆங்கிலேயரை கேளுங்கள்.//

லூசு,லூசு,லூசு இப்பச்சொல்லு யாரு லூசுன்னு.ஜிஹாதிங்க நபி பொறந்தே 1400 வருசம் தான் ஆச்சு.அதுக்கப்புறம் அவனுங்க பெரியாளாக ஆயி பக்கத்து ஊரெல்லாம் புடுச்சு இந்தியாவுக்குள்ள வரத்துக்கு கொறஞ்சது 400 வருசத்துக்கு மேல ஆயிருக்கும்.அவனுங்களுக்கு பல வருசத்துக்கு அப்புறம வந்தவனுங்க வெள்ளைக்காரனுங்க.இன்னையில் இருந்து சுமாரா 350 வருசத்துக்கு முன்னால அவனுங்க வந்திருப்பானுங்க.

இது கூட தெரியாம நீ லூசு மாதிரி எழுதீட்டு இருக்கே

.

//

இரண்டாவது எங்களது ஊரிலேயே பார்ப்பனர் யாரும் இல்லாதபோது பார்ப்பனர் கோவிலில் உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குள் ஆளை விடமாட்டேன் என்று சொல்வது எங்கணம்?

மாரியம்மன் கோவிலின் முன்னரும், கருப்பண்ணசாமி கோவிலின் முன்னரும் பாவிகளே என்று கத்துபவர்கள் அங்கு பார்ப்பனர் பூசாரியாக இருக்கிறார் என்று பார்த்துவிட்டா கத்துகிறார்கள்?//

அங்க கத்தரவனுங்கள் ரொம்ப கரைட்டா பன்றான்னு யார் சட்டிபிக்கட் கொடுத்தா?ஆனா அத வச்சு சென்ட்டிமென் அடிக்காதன்னு தான் சொன்னேன்.ஏன்ன உனைவிட மதத்தின் பெயரால் அதிகமா கொடுமய நாங்க அனுபவிச்சு இருக்கோம்.

//

இந்துமதத்துக்கு வருபவன் ஏன் தன்னுடைய பாரம்பரியத்தையும் மொழியையும் முன்னோரையும் பெற்றோரையும் பிறந்த குலத்தையும் விட்டுக்கொடுக்கவேண்டும்?

அப்படி என்ன உங்கள் குலத்தின் மீது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை?

இந்த தாழ்வு மனப்பான்மையுடன் எந்த மதத்துக்கு போனாலும், கிறிஸ்துவ மதத்திலும் இஸ்லாமிலும் நம்மை இழிவு படுத்துகிறார்கள்.//

இந்து சொன்னா அடுத்த வார்த்தையே நீ என்ன ஜாதின்னு தானே கேக்கரான்.அப்புறம் எங்க பாரம்பரியம்,பண்பாடு,புண்ணாக்கு.மற்ற மதத்திலும் நம்மை இழிவு படுத்தராங்கன்னு யார் உனக்கு சொன்னா.நீ மதம் மாறினாயா?வேற எதையோ எதிர் பாத்து போனவங்க அது கிடைக்காததால் அப்படின்னு சொல்லி இருக்காங்க .நீ வேனும்னா மதத்தை மாத்தி அது உண்மையான்னு செக் பண்ணி பாரு.எங்களுக்கு இது வரை அப்படி ஒன்னும் தெரியல.

//நாம் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று நிமிர்ந்து நின்றால் தான் உலகத்தவர் மதிப்பு கொடுப்பார்கள்.//

இந்த நாம்ன்னு யாரை சொல்ற? பாப்பானுங்களையும்,அவனுடைய அல்ல கைகளையும் தானே


//கிறிஸ்துவத்தில் செவ்விந்தியர்களை பூண்டோடு அழித்ததும், கறுப்பினத்தவரை அடிமைகளாக வைத்திருந்ததும், போப்பாண்டவர் ஆசீர்வாதத்தோடு என்பதை மறந்துவிட்ட்டீர்களா?//

எல்லா மதங்களிலும் இந்த மாதிரி யாரோ ஒரு சிலர் இருக்காத்தான் செய்ராங்க.ஏன் இங்க கூடத்தன் சமண மதத்தையும்,புத்த மதத்தையும் அழிச்சானுங்க ஏன் அது தெரியாதா உனக்கு. எப்பவோ நடந்தத சொல்,நான் இப்பவும் நடக்கறத சொல்றேன்.இது தான் எனக்கும் உனக்கும் இருக்கும் வித்தியாசம். ———————————————————————————

உனக்கு ஒரு நல்ல பதிலை அசுரன் கொடுத்திருக்கார்

http://poar-parai.blogspot.com/2008/03/rss.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இந்து, இஸ்லாம், எழில், குரான், முகமது

சாதியை ஆதரிக்கும் புராண நூல்களை நெருப்பிலிடவோ, கிருஷ்ணபகவானை மறுக்கவோ தயாரா?

பெரியார் பேசுகிறார்

திருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்?

சாதி மதம் போகாமல் மூடப்பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ எப்படி ஏற்படுத்த முடியும்? ‘பிராமணன்’, ‘சூத்திரன்’, ‘பறையன்’, ‘சண்டாளன்’ என்கின்ற பெயர்களும், பிரிவுகளும் சாதி காரணம் மாத்திரமல்ல, மதம் காரணமாகவும் நிலவி வருகின்றன. பேத நிலைக்கு மதம் காரணம் மாத்திரமல்லாமல், கடவுள் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி பேத நிலைக்கு இந்து மதமும் மநுதரும சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும், அதற்கும் மேற்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.

கடவுளுடைய முகம், தோள், தொடை, கால் ஆகியவற்றில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது, இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமன்றி, இந்து ஆஸ்திகக்காரர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும். பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும், இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், மகம்மதியர், பவுத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து, யாரால் பிறப்பிக்கப்பட்டார்கள்? என்ற கேள்விக்கு இடமாய் இருந்தாலும், இந்த நான்கு வர்ணத்தையும் மறுக்க எந்த ஓர் இந்துவும் துணிவதில்லை.

ஏதோ சீர்திருத்தக்காரர்கள் என்று கூறிக்கொண்ட சிலர், சூத்திரர் என்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் நான்கு வர்ணத்தை ஒப்புக் கொள்ளாமல், தன் வரையில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, வெளியில் துணிவாக எதிர்க்கவில்லை. மறுபுறம் அக்கொள்கைக்கு அடிமைகளாகவே இருந்து வருகிறார்கள். எப்படி எனில், ராமாயணக் கதைக்கு வேறு வியாக்கியானம் செய்கின்றவர்களும், நல்லவர்களும்கூட, பாரதக் கதையில் வரும் பாத்திரங்களான ராமனையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. பாரதக் கதையில் ஒரு சமயத்தில் வரும் சிறு சம்பவமான ‘கிருஷ்ணன் சம்பாஷனை’ என்னும் கீதையை பிரமாதப்படுத்தி மதிக்கிறார்கள்.

கீதையை மறுக்க, இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குக்கூட தைரியம் வருமா என்பது சந்தேகம். கீதையில் கிருஷ்ணன், பேத நிலை உண்டாக்கும் வர்ண தருமத்துக்கு தானே காரணம் என்கிறான். ”நான்கு வர்ணங்களை நான்தான் சிருஷ்டி செய்தேன்” என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது. ஆகவே, கீதையை மத ஆதாரமாகக் கொண்டவன், சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவு ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும்?

சாதிப் பிரிவுக்கும், அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்தரத்துக்கும், ஒற்றுமையின்மைக்கும், இந்து மதம், மநுதரும சாஸ்திரம், பாரத ராமாயணப் புராண இதிகாசம் என்பவற்றோடு மட்டுமன்றி ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் காரணம் என்பதை உணருகின்றவன் எவனோ, அவனே வர்ண பேதத்தை பேத நிலையை ஒழிக்க நினைக்கவாவது யோக்கியடையவன் ஆவான். காங்கிரசுக்காரர்களே, பெரும்பாலோர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள். சாதியை ஆதரிக்கும் புராண நூல்களை நெருப்பிலிடவோ, கிருஷ்ணபகவானை மறுக்கவோ ஒப்புக்கொள்வதில்லை. நான்கு வர்ணம் கூடாது என்கிற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள்.

நமது பிரச்சாரத்தின் பயனாய் ஓர் அளவுக்கு மநு (அ) தருமசாஸ்திரத்தின் மீது பலருக்கு வெறுப்பும், அலட்சியம் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் மீது, கீதை மீது வெறுப்பு அலட்சியம் ஏற்படவில்லை, ஒழிக்கத் தைரியம் வருவதில்லை. இந்நாட்டில் பல ஆயிர வருஷங்களாகவே இந்த இழிவும் முட்டாள்தனமும், அயோக்கியத் தனமும் நிலவி வந்திருக்கிறது. திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். இது, முட்டாள்தனமான காரியக்காரர்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. சைவன்களும், வைணவன்களும் கீதையை, கிருஷ்ணனை, பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள்.

ஆனால், தங்களுக்குள் பேதம் இல்லை என்று வாயால் சொல்லுவார்கள். கபிலர் சொன்னவையும், சித்தர்கள் ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால், காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் ஜாதி எப்படி ஒழியும்? பேத நிலை எப்படி மாறும் என்பதைச் சிந்தியுங்கள்.

நமக்கு இன்று வேண்டிய சுயாட்சி என்பதானது, ஜாதிக் கொடுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும், உயர் ஜாதி சலுகைகளையும் ஒழிப்பதாகவும், அழிப்பதாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால்தான் நல்லதாகும். இப்படிப்பட்ட பேத நிலை நீக்கும் ஆட்சியை ஆதரிப்பதற்கு, நமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மனப்பூர்வமாக வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.

‘பெரியார் களஞ்சியம்’: ஜாதி – தீண்டாமை பாகம் 11; பக்கம்: 35

2 பின்னூட்டங்கள்

Filed under அல்லா, இந்து, இஸ்லாம், கிருஷணன், குரான், புராணம்

பொத்தீட்டு தூங்குங்க

கடவுளை கும்பிட காலையில் எழாதவரா நீங்கள்?அப்ப உங்க காதுகள் சைத்தானின் பாத்ரூம்.இத நான் சொன்னத நினைச்ச அது தப்பு.ஜிஹாதி நபி த திருவாய் திறந்து அருளிய அழகான வார்த்தை.படிங்க,காதை பொத்தீட்டு தூங்குங்க
புகாரி பாகம்

1, அத்தியாயம் 19, எண் 1144

அப்துல்லாஹ்

(ரலி) அறிவித்தார்.

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள்ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்என்று விடையளித்தார்கள்.

பாகம்

3, அத்தியாயம் 59, எண் 3270

அப்துல்லாஹ்

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும்அல்லது அவரின் காதில்ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்என்று பதிலளித்தார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், புகாரி, முகமது, முஸ்லீம்

முனகினாள். "ஆ ஆ ஆ ஆ

நெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும்.

மோகத்தீ மூட்டும் மூன்றாம் ஜாமம். வெண்ணிலவும் தென்றலும் மன்மதனின் தொழிலுக்கு துணை செல்ல தன் அந்தப்புரத்தில் மகிழ்ந்திருந்தான் மன்னன் இராமன். இராவணனை வில்லெடுத்து வென்றவன் மன்மதனை வெல்ல சீதையை நாடினான். இதுவும் ஒரு போர். யுத்தக்களத்தில் அல்ல. மஞ்சத்தில். மோகம் மன்னனையும் மங்கை சீதையையும் ஆரத்தழுவியது. மோகம் தலைக்கேற உடல்கள் இயங்க, முனகல் ஒலிகள் கிளம்பின.

சீதை முனகினாள். “ஆ… இராவணா…”.

இராமனின் இயக்கங்கள் நின்றன. காது பிழை செய்யவில்லையே. இராமனின் பத்தினி “இராவணா” என்று முனகுகிறாள்.

சீதை தன் நாக்கை கடித்துக் கொண்டாள். வார்த்தை வாய் தவறி வந்து விழுந்திருந்தது. இராமனின் கண்கள் சினம் கக்கின.

“உடலால் என்னைத் தழுவினாய். உள்ளத்தை யாரிடம் கொடுத்தாய்.”

சீதை இனியும் மறைக்க முடியாதவள் ஆனாள். “எனது உள்ளத்தால் இராவணனைத்தான் நினைத்தேன்.”

“இது என் செய்தாய். இப்பிறப்பில் என் மனதாலும் இன்னொரு மங்கையை நாடாத மாபெரும் விரதம் ஏற்ற என் மனைவி மாற்றானை மனதில் கொண்டாளா. உடலால் என்னைத் தழுவியவள் உள்ளத்தால் மாற்றானை தழுவினாளா. நீயும் பத்தினியா?”

“நான் பத்தினிதான். தீ இறங்கி நிரூபித்திருக்கிறேன்.”

“பேசாதே. மாற்றானிடம் சிறைப்பட்ட மனைவியை ஏற்பதற்காக நான் நடத்திய நாடகம் அது. என் மீது பழி ஏற்படாதிருக்க. எனது கெளரவத்திற்காக. அந்த நாடகத்தில் நீயும் நன்றாகவே நடித்தாய்.”

“சாத்திரங்களின் படியும் விதிகளின் படியும் நடக்கும் உத்தமரே. அந்த நாடகத்தில்தான் தங்கள் உண்மையுருவை தரிசித்தேன். உங்களை விடவும் சகலவிதங்களிலும் உயர்ந்தவன் ஒருவனை கண்டேன். மனம் சஞ்சலம் கொண்டாலும் தர்மத்தின் பக்கம் நின்று அவனை விலக்கினேன். உடலளவில் நான் உத்தமிதான். உள்ளம்தான் சஞ்சலம் கொண்டது.”

“சீ. உள்ளத்தாலும் அவனை நீ நினைக்கலாமா.”.

“மென்மையை மட்டும் தங்களிடம் கண்ட என் பெண்மை, பேராண்மையை அவனிடம் கண்டதால் மனம் சஞ்சலம் கொண்டது. மன்னியுங்கள்..”

“இதை எப்படி மன்னிக்க முடியும். உடலால் நீ மாசுபடவில்லை என்று சாதித்தாலும் மனத்தால் மாசுபட்டவளே. நீ என் முகத்தே விழிக்காதே.”

“நான் செய்தது தவறுதான். மன்னியுங்கள். மாற்றானை மனதில் கொண்டது தவறு. இனி மனதாலும் அவனை நினைக்க மாட்டேன்.”

“உன்னை எவ்வாறு நம்புவதே. என்னை விட்டு விலகிப் போ.”

“போ என்று சொன்னால் எங்கு போவேன். இது பெருங்குற்றம். இந்த குற்றம் புரிந்தேன் என குற்றம் சாட்டினால் இந்த குற்றத்தை கொண்டவளாக என் தந்தை வீட்டிற்கும் செல்ல முடியாதே.”

“எங்கேனும் போ. எனது கோபம் எல்லை கடக்குமுன் போய்விடு.”

“சுவாமி..”

“போ. மறுமுறை என்முகத்தில் விழித்தால் அந்தக் கணமே உன்னைக் கொல்வேன்.”

“மன்னியுங்கள்.”

“இப்போது உன்னைக் கொல்லாமல் விடுவதே அதிகம்.”

இராமன் உறுதியுடையவனாய் நின்று இருந்தான்.

அழுது கண்ணீர் வற்றிப்போன சீதை மரக்கட்டையாய் வெளியேறி கானகம் புகுந்தாள்.

————–

ஆண்டுகள் பல கடந்தன.

தனது புகழை பாடிய சிறுவர்களை இராமன் பார்த்தான். அவனுள் அன்பு சுரந்தது.

“குழந்தைகாள். நன்று பாடினீர். யார் உமது பெற்றோர்.”

“மன்னா. அவர்கள் தங்கள் புதல்வர்கள். எனது வயிறு உதித்தோர்.” சீதை தோன்றினாள்.

“நீயா.. எனது முன்வர என்ன துணிச்சல்.”

“இன்னும் உங்கள் மனம் மாறவில்லையா.”

இராமன் கல்லாயிருந்தான்.

“இவர்கள் தங்கள் புதல்வர்கள். தங்களிடம் ஒப்புவிக்கவே வந்தேன்.”

“எனது புதல்வர்கள் ?”

“ஆம்.”

“இவர்கள் எனது புதல்வர்கள்தான் என்பதற்கு என்ன சாட்சி.”.

“ஐயோ.” சீதை தனது காதுகளை பொத்திக் கொண்டாள்.
“இந்த வார்த்தைகளை கேட்டும் நான் உயிர் வாழ வேண்டுமா. ஏ பூமா தேவி. நீ பிளந்து என்னை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடாதா.”

இராமன் ஒரு குரூரப் புன்னகையை வெளிப்படுத்தினான்.

“சீதை. உனது வேண்டுதல் நிறைவேறும்.”

பூமியில் குழியொன்று தோண்டப்பட்டது. சீதை அதில் உயிரோடு இறக்கப்பட்டாள். இராமன் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டான்.

“பூமித்தாயே. உனது புதல்வியை ஏற்றுக்கொள்.”

தொடர்ந்து மண் கொட்டப்பட்டது. சீதை புதையுண்டாள்.

பூமாதேவியால் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்ட தன் மனைவிக்காக இராமன் தன் மகன்களோடு அழத் துவங்கினான்.

அரை பிளேடு said…

ஆதாரங்கள் ஏதுமற்ற கற்பனைக் கதை. கதையின் பின்னிருக்கும் உளவியல் பார்வைக்காக எழுதப்பெற்றது.

March 6, 2008 12:02:00 PM PST

http://araiblade.blogspot.com/2008/03/blog-post_06.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அரை பிளேடு, இந்து, இராமன், சீதை

சீக்கிய மத குருக்களை கொன்று,கோவிலை இடித்து,சிலைகளை புதைத்து,வரி கட்டாதவர்களை யானையை வைத்து மிதித்து கொன்றவன்

அவுரங்கசீப் நடத்திய அட்டூழியங்களை ஓவிய கண்காட்சியில் வைக்க கூடாதா? திடீர் எதிர்ப்பால் பதட்டம்

சென்னை:குஜராத் சோமநாதர் கோவில் மற்றும் மதுரா கிருஷ்ணர் கோவிலை, மொகலாய மன்னர் அவுரங்கசீப் இடிப்பதாக சித்தரிக்கப்பட்ட ஓவியங்களை, சென்னையில் நடைபெறும் கண்காட்சி ஒன்றில் இருந்து எடுக்க வேண்டும் என முஸ்லிம்கள் வற்புறுத்தினர்.

ஆனால், வரலாற்று ஆவணங்களின்படி தான் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன; அதை எடுக்க மாட்டோம்’ என்று, கண்காட்சி அமைப்பாளர்கள் மறுத்ததால், திடீர் பரபரப்பு ஏறபட்டுள்ளது.

சென்னை லலித் கலா அகடமியில், தீவிரவாத எதிர்ப்பு அறக்கட்டளை (பேக்ட்) சார்பில், `மொகலாய ஆவணங்களில், அவுரங்கசீப்’ என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி கடந்த 3ம் தேதி தொடங்கியது. கண்காட்சியில், ஜியா வரி கொடுக் காத இந்துக்களை மொகலாய மன்னர் அவுரங்கசீப் யானைகளை வைத்து, மிதித்து கொல்வது, முஸ்லீமாக மதம் மாற மறுத்த சீக்கிய மத குருவின் சீடர்கள் மூன்று பேரை வெட்டிக் கொல்வது, மதுரா கிருஷ்ணர் கோவிலை இடித்து, பேகம் மசூதி கட்டி, மசூதி வாசல் படிக்கட்டிற்கு அடியில், கோவிலில் இருந்த கடவுள் விக்ரகங்களை புதைத்தது, குஜராத் சோமநாதர் கோவிலை இடிப்பது போன்ற காட்சிகள் ராஜஸ்தான் பாணி சித்திரங்களாக வைக்கப்பட்டிருந்தன.

இதை பார்வையிட்ட முஸ்லிம் வக்கீல் உட்பட இருவர், குஜராத் சோமநாதர் கோவில் இடிப்பு, மதுரா கோவில் இடிப்பு ஓவியங்களை எடுக்க வேண்டும் என்றனர்.அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மறுத்தனர்.பின்னர், கண்காட்சியை அகற்ற வேண்டும் என்று அகடமிக்கு அந்த வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். உடனே அகடமி நிர்வாகத்தினர், கண்காட்சியை எடுக்க சொல்லி வற்புறுத்தினர்.போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், கண்காட்சியை பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவிகளை திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், ஜனதா கட்சி (எஸ்) மாநில தலைவர் சந்திரலேகா, விஸ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் வீரபாகு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கண்காட்சியை பார்வையிட்ட பின்னர், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:

கண்காட்சியில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் கற்பனையோ, கதையோ இல்லை. ஆதாரத்துடன் கூடிய வரலாற்று சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிமாக மதம் மாறாத சீக்கிய மத குருவின் சீடர்களை அழித்தது குறித்த ஓவியங்கள், அனைத்து சீக்கிய மத கோவில்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் இவர்களால் எடுக்க சொல்ல முடியுமா?

ராமபகவான், சீதா பிராட்டி, அனுமன், பாரத மாதா ஆகியோரை நிர்வாணமாக வரைந்தார் எம்.எப்.ஹுசைன். அப் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அது கருத்து சுதந்திரம் என்றனர். ஆனால், இந்த கண்காட்சி மட்டும் கருத்து சுதந்திரம் கிடையாதா? எந்த நாட்டிலும் இல்லாத கோமாளி கூத்துதான் இங்கு நடக்கிறது. உண்மையான வரலாற்றை சொல்வதற்கு உரிமை இல்லை. உண்மையான வரலாற்றை தெரிந்து கொண்டால், இந்தியாவின் நிலையே தலைகீழாக மாறிவிடும். முன்பு அறிவித்தபடி, இந்த கண்காட்சி கண்டிப்பாக 9ம் தேதி வரை நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாவண்ணம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

http://www.dinamalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இந்து, இராமன், இஸ்லாம், கிருஷ்ணன், குரான், முகலாய அரசன்