Daily Archives: பிப்ரவரி 18, 2008

காபிர்களுக்கு சொத்துரிமை கொடுக்க விரும்பாத ஜிஹாதிக்கும்பல்

முஸ்லீம் நாடுகளிலேயே மிகவும் மதச்சார்பற்றது என்று கருதப்படும் துருக்கியிலேயே காபிர்களுக்கு (முஸ்லிம் அல்லாதவர்கள்) சொத்துரிமை கிடையாதாம். இப்போதுதான் தெரியவருகிறது. 😦

அந்த கட்டுப்பாடுகளை நீக்கப்போவதாக துருக்கி பிரதமர் அறிவித்துள்ளார்.

இதே போல இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர்களுக்க்கு சொத்துரிமை கிடையாது என்று கட்டுப்பாடுகள் வந்தால் முஸ்லீம்களும் இஸ்லாமே சிரந்த மதம் என்று பிரச்சாரம் செய்யும் திகவினரும் ஆதரிப்பார்களா?

Turkish PM seeks to smooth secularists’ worries

Turkish Prime Minister Tayyip Erdogan tried to smooth worries about secularism after the law lifting the ban on headscarf in universities and repeated his criticism against the media on Sunday.

“I say we are the assurance against the worries concerning secularism. Nobody will force anybody to cover (her head) in this country… If such things happen, we will fight against this with all of our institutions” Erdogan told the private channel ATV. There will be no discrimination in universities against those who haven’t covered their heads, Erdogan added. “We said our party will not be religion oriented. We are not aiming a religious state; we don’t have such an effort.”

The Turkish parliament has approved last week the bill amending two articles of the Constitution to ease the headscarf ban. Although the Turkish parliament had overwhelmingly approved easing of the headscarf ban, the public opinion remains divided.

Erdogan repeated his recent criticism against the media, saying that the recent reports signaling a rise in Islamism in Turkey are “provocative”. “If you define the support of 411 MP’s who are the representatives of the public as chaos, I can’t stand this. This definition is undermining the dignity of the MP’s” Erdogan said, referring to Turkey’s leading newspaper Hurriyet’s front page headline from the day after the voting in the parliament.

The prime minister also vowed to continue the reforms once the headscarf process is completed. “We are going to pass the law to ease property restrictions on non-Muslim religious minorities. Also we have the (amendment) of article 301 (of the Penal Code), and the Social Security Law on our agenda. We are going to approve those. These law are very important for us. The law related to the EU membership process are very important” Erdogan added.

Turkey plans to give the mandate over implementation of the controversial article 301 of the Turkish Penal Code to President Abdullah Gul’s discretion. The European Union has been calling Turkey to amend the article 301, which has been the basis for charges against past cases against Turkish intellectuals such as Hrant Dink, Elif Safak, and Orhan Pamuk. But the amendment of the article 301 was delayed due to the easing of the headscarf ban in universities.

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், ஜிஹாதி, துருக்கி, முஸ்லீம்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

பெரியார் ஒரு தமிழ் இன விரோதி – ஆதாரங்கள் 10

1. தமிழைக் காட்டு மிராண்டி மொழி என்றவர் ஈ வெ ராமசாமி என்ற கன்னட தேசத்தைச் சேர்ந்த பெரியார். தமிழ் மொழியைத் திட்டியதைத் தவிர அதன் வளர்ச்சிக்கு அவசியமான எந்தச் சீர்திருத்தங்களையும் முன்மொழியாமை மற்றும் அதற்காக பாடுபட முன் வராமை.

2. தமிழர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்று உலகில் எல்லா மனிதருக்கும் உள்ள பகுத்தறிவைக் கூட பெரியார் தமிழர்களுக்கு வழங்க மறுத்தமை.

(இக்கூற்றிக்களின் மூலம் தமிழ் மொழியின் தமிழர்களின் தொன்மையை அழித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மற்றும் பிற மாநில மொழி ஆதிக்கங்களினை அனுமதித்து தமிழர்களின் மொழி அடையாளத்தை சிதைக்க முனைந்தவர்.தமிழகத்தில் தமிழ் வழக்கொழிதலைத் தூண்டியவர்.)

3. தமிழ் இனத்தின் தமிழ் தேசிய இருப்பை தமிழர்களின் தனித்துவத்தை திராவிடப் போர்வை கொண்டு அழிக்க முனைந்தமை.

4. தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காத தன்மை, அவர் இந்திய உபகண்டத்தில் தமிழ்களுக்கு என்ற ஒரு நில இருப்பை அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டி நிற்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய நில இருப்பை அவர்களின் சிந்தனையில் இருந்தே அழிப்பதற்கு சமனானது.

5. தன் கூட்டத்தில் இருந்து கொள்கை முரண்பட்டு விலகிய அண்ணாவை பண ஆசை பிடித்த ஒருவன் என்று விமர்சித்தமை. அரசியல் ரீதியாகக் கூட தமிழர்கள் திராவிடத்துக்குள் பதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அண்ணா தமிழர்களுக்கு என்று தனிநாடு கேட்பதைக் கூட எதிர்த்து நின்றவர். தமிழகத்தில் தமிழ் மொழியின் முதன்மைத் தன்மையை சிதைக்க முனைந்த ஹிந்தி திணிப்பை எதிர்க்க மறுத்தமை.

6. பெண்களின் கர்ப்பம் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையென்று கூறி.. பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறி தமிழர்களின் இன விருத்திக்கு சாவு மணி அடிக்க முனைந்தமை.

7. தமிழ் மக்களின் உயர்ந்த கலாசார பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில் ஒருவனுக்கு – ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை சிதைக்கவல்ல கருத்துக்களை "பெண் விடுதலை" என்று காட்டியபடி தமிழர்கள் மத்தியில் சமூக விரோத, மனித இன விரோத கருத்துக்களை விதைத்து.. விலங்குத்தனமான, எழுந்தமானமான ஆண் – பெண் பாலியல் புணர்வை வழியுறுத்தி.. தமிழ் சமூகத்தின் இருப்பையே கொடிய பால்வினை நோய்களைப் பரப்பி.. அழிக்க முயன்றமை.

8. தமிழ் மொழியின் தொன்மை.. இலக்கணக் கட்டமைப்பை சீரழிக்கும் வகையில் இலக்கியங்கள் மீதும்.. தமிழ் இலக்கண, இலக்கிய கர்த்தாக்கள் மீதும் பார்பர்ன.. இந்துத்துவ.. சாதிய சாயங்களைப் பூசியமை.

9. பிராமணர்கள் மீது எதிர்ப்பென்று தமிழர்களிடையே பிராமண வர்க்க இருப்பையும்.. ஏனையவர்களை அவர்களுக்கு எதிராகவும் தூண்டி சமூக வன்முறைத்தனமான நிலையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டமை. அதன் தொடர்ச்சியாக மறைமுகமாக சாதிய இருப்பை தமிழகத்தில் தக்க வைத்தமை. அதைக் கொண்டு தமிழகத்தில் சமூகப் பிரிவினையைத் தூண்டி தமிழர்களைப் பிரித்தாண்டு.. சாதிய அரசியலுக்கு வித்திட்டமை. தமிழர்களிடையே தமிழின ஒற்றுமையை இல்லாமல் செய்தமை.

10. தனது திராவிடக் கொள்கையின் கீழ் தமிழகத்தின் தோற்றம்.. இருப்பு என்பதை.. இல்லாமல் செய்து தமிழர்களை திராவிடர்களாக்கி.. அவர்களின் தமிழ் தேசிய அடையாளங்களை திராவிட அடையாளங்களாகக் காட்டி.. தமிழினத்தினதும் அதன் தேசியத்தினதும் இருப்பை.. அழிக்கும் வகையில் சமூகத்தில் மேற்குலக சமூக விரோத சிந்தனைகளை பகுத்தறிவு என்ற பெயரில்..கட்டவிழ்த்து விட்டமை.

உண்மையாக தமிழர்களுக்கும்.. ஒட்டுமொத்த மனித இனத்துக்குக்கும் அவசியமான அறிவியலை தமிழகத்தில் வளர்க்கவோ இனங்காட்டவோ முனையாமை.

இந்துக் கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில் ஏனைய மத ஆதிக்கங்களினால் சிதைந்து கொண்டிருந்த தமிழழிவை ஊக்குவித்து.. சைவத்தால் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் மொழியின் வளர்ச்சியை இல்லாமல் செய்ய முற்பட்டமை.

"தமிழ் தேசிய விரோதி ஈ வெ ராவை இனங்காண்போம்" என்ற விழிப்புணர்வை முன்வைத்து.. சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக இப்பதிவு இடப்படுகிறது

 

http://thedatsaram.blogspot.com/2007/10/10.html

2 பின்னூட்டங்கள்

Filed under இஸ்லாம், ஈவேரா, குரான், ஜிகாதி, திராவிட கழகம், முகமது, முஸ்லீம்