Daily Archives: பிப்ரவரி 11, 2008

பெரியாருக்கே வெங்காயமா?வச்சான் ஒரு ஆப்பு

பெரியார் என்ன கடவுளா? அல்லது பகுத்தறிவு என்ன வெங்காயமா?

வால் பையன் எழுதியதுகோ!!!!!

 

சில நாட்களுக்கு முன்பு இது தான் உண்மை என்ற வலைப்பூவில் பெரியார் ஆதி திராவிடர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற சொன்னதாக எழுதியிருக்கிறார்கள்,
அதற்கு பெரியார் சொன்ன காரணம் இஸ்லாம் மதத்தில் ஜாதி அடிபடை இல்லை என்று.

ஆனால் மனிதனை நேசி என்ற வலைப்பூவில் இஸ்லாம் மதம் பெண்களை மதிப்பதில்லை என்று எழுதியிருக்கிறார்கள். இதற்கு தமிழ் இஸ்லாம் வலைப்பூவில் பிறகு ஏன் பெரியார் இஸ்லாம் மதத்துக்கு திராவிடர்களை மாற சொன்னார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

எனது சந்தேகம் பெரியார் ஆசைப்பட்ட பகுத்தறிவு உண்மையில் வளர்கிறதா என்பது தான்!
பகுத்தறிவு என்றால் என்ன? கேள்வி கேள் என்பது தானே! சொன்னது பெரியாராக இருந்தாலும் ஏன் இதை நான் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா!
ஆனால் பெரியாரை கடவுளாகவே மாற்றும் திட்டம் அல்லவா இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

பெரியார் ஆசை பட்டது மக்களிடம் விழிப்புணர்வு.
ஜாதி மத பேதமில்லாத சமநிலை. பெரியாரை பற்றி படிக்கும் முன்னறே மத அடிப்படையில் நம்பிக்கை இல்லாத நான். சிறு வயதிலிருந்தே சாமி கும்பிட மாட்டேன் என்று வீட்டில் சண்டை போட்டிருக்கிறேன், அப்பொழுது இவன் என்ன பெரியார் மாதிரி பேசுறான் என்ற வார்த்தையால் ஈர்க்க பட்டு தான் பெரியாரை படித்தேன், ஜாதி மத கொள்கைகளில் என்னை போலவே அவரும் நம்பிக்கையற்று இருந்தார் என்பதற்காக அவரை முழுமையாக ஏற்கவோ அவரின் கொள்கைகளை பரப்புவதற்கோ என்ன இருக்கிறது.யாருக்காவது வாழ்க கோஷம் போடுவதோ, ஒழிக கோஷம் போடுவதோ ஆட்டு மந்தை கூட்டம் அல்லவா! இதையா பெரியார் விரும்பினார்.

மூட நம்பிக்கை என்பது ஏதாவது ஒன்றை பிடித்து தொங்கி கொண்டிருப்பது! பெரியாரின் கொள்கைகளை மட்டுமே பிடித்து தொங்கி கொண்டிருப்பதற்கு வேறு என்ன பெயர் இருக்க முடியும். கடவுள் நம்பிக்கை என்பது நம்முடைய தனிப்பட்ட சுதந்திரம்!
என்னிடம் யாராவது வந்து கடவுள் இருக்கிறார் என்று வாதம் செய்தால் இல்லை என்று வாதிட எனக்கு உரிமை உண்டு. வாதிட மட்டுமே சண்டை போட அல்ல. கடவுளை பற்றிய வாதம் முடிவில்லாதது என்றும் அனைவருக்கும் தெரியும், இருந்தும் ஏன் அதில் நேரத்தை செலவிட்டு செய்ய வேண்டிய வேலைகளை புறக்கணிக்க வேண்டும்.

ஆன்மிக வாதியான விவேகானந்தர் கூட மதவாதிகள் கிணற்று தவளைகள் என்று குறிப்பிட்டு உள்ளார். கடலில் இருப்பவர் நாம். நாம் அனுபவிக்க கடலில் நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு கிணற்றில் குதித்து சண்டை போடுவது தேவையா?

1 பின்னூட்டம்

Filed under அல்லா, இறை நம்பிக்கை, இஸ்லாம், சமூகம், முகமது, விவாதம்

என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசும் கருப்புச்சட்டை தலைவர்(பெரியார்)

தலித்துகளை இஸ்லாம் மதத்துக்கு மாற சொன்ன பெரியார் இன்னொரு கட்டுரையில் எதிர் மறையாக எழுதியுள்ளதை காணுங்கள்

//இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால்கலியாணம்என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக்கலியாணம்என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன்மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள்அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பதுஅதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

http://periyarpasarai.blogspot.com/2008/02/blog-post_10.html //

முதலில் இஸ்லாமுக்கு எங்களை மாறச்சொன்ன பெரியாரே இந்த வார்த்தையை எழுதும் போது யோசித்துதான் எழுதினீரா

?அடிமைப்பெண்களை எப்படி எல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வரைமுரை வகுத்து தந்த அழகிய நபி????? வழியில் நடந்தா நீர் இந்த கட்டுரை எழுதினீர்.


//முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?//

பெரியாரே இதை அறிந்துவிட்டு எப்படி தலித்துகளை இஸ்லாமுக்கு மாறச்சொன்னாய்.நாய்க்கு தப்பி ஓநாய்யிடம் மாட்டின கதையா அல்லவா இது?

//நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பதுஜோடித்துக் கொள்வதுசினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?//

ஹலோ உங்களுக்கு எதாவது பைத்தியம் பிடித்து விட்டதா? 6வயது பெண்ணை கல்லியானம் செய்துவிட்டு அவளுக்கு மஹர் கொடுக்க எந்தவிதமான வசதி இல்லாதபடியினால் 9வயதில் அவளுடன் உடல் உறவு வைத்த அழகிய நபி???? வழியில் இன்றைக்கு இந்த ஜிஹாதி கும்பல் ( http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_09.html )தயாராக இருக்கும் போது எந்த லட்சணத்தில் எங்களை அந்த இஸ்லாமுக்கு மாறச்சொன்னாய் என்பதை எங்களுக்கு விளக்கி சொல்லு.

கருப்பு சட்டைகளே உங்கள் தலைவர் எதை உருப்படியாக சொன்னார் என்று தெளிவு படுத்துங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், பெண்ணடிமை, பெரியார்