Daily Archives: பிப்ரவரி 5, 2008

விவாதத்தில் கிறிஸ்தவர்கள் தோற்றுப்போய்விட்டார்கள்(இஸ்லாம் இணையப் பேரவைக்கு வக்காலத்து)

இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி? – நகைச்சுவை

சில நேரங்களில் நாம் இஸ்லாமியர்களோடு விவாதம் செய்யவேண்டி வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் எவ்விதம் தப்பித்துக்கொள்வார்கள் என்று ஆயிஷா அஹமத் என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இது. சிரியுங்கள், சிந்துயுங்கள், ஜாக்கிரதையாக இருங்கள்.

HOW TO DEBATE AND FRUSTRATE INFIDELS
Author: Ayesha Ahmed

அன்புள்ள இஸ்லாமிய சகோதர்கள் சகோதரிகளுக்கு:

நாம் குஃபார் நாட்டில் வாழுகிறோம். நம்மோடு விவாதம் செய்யவும், மற்றும் இஸ்லாமையும், நம் நபி அவர்களையும் விமர்சிக்கும் நபர்களையும் அனுதினமும் நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இதே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், நாம் என்ன செய்வோம்? அவர்கள் சொல்வதை மிகவும் சத்தமிட்டு சொல்லிவிடுவோம், மீதியான வேலையை ஒரு கோபமான கூட்டம் பார்த்துக்கொள்ளும். விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், அவன் கதை முடிந்துவிடும். ஆனால், அந்த வசதி இப்போது நமக்கு இல்லை. இன்ஷா அல்லா, எதிர்காலத்தில், சிறையில் உள்ள குற்றவாளிகளை இஸ்லாமியர்களாக மாற்றிய பிறகு, சட்டத்திற்குட்பட்டும், படாமலும் இம்மிக்ரேஷன் செய்துக்கொண்டும், இன்ஷா அல்லா ஒரு பெரும்பான்மை
மக்களாக மாறுவோம், அப்போது ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட பிரச்சனை நமக்கு இருக்காது. இருந்த போதிலும், இப்போதைக்கு கீழ்கண்ட வழிமுறையை எல்லா முஸ்லீம் சகோதரர்களும், சகோதரிகளும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தவும். ஜஜகல்லா கைர். இன்ஷா அல்லா, உங்கள் பாதை மிகவும் தெளிவாக இருக்கும்.

1. ஒரு புகழ்பெற்ற கேள்வி இருக்கிறது, "ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களையும், இஸ்லாமை விட்டு வெளியேருபவர்களையும் கொல்லும் படி இஸ்லம் சொல்கிறது" அவர்களின் இந்த விவரம் பொய்யானது என்று அழுத்திச் சொல்லுங்கள். இந்த வசனத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள் "உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்".

2. "இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது" என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள் "இது யூதர்கள் மற்றும் இந்துக்கள் பரப்பிய மிகப்பெரிய பொய்யாகும், ஆனால் குர்-ஆன் மிகத்தெளிவாகச் சொல்கிறது "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்று பதில் சொல்லுங்கள்.

3. யாராவது குர்-ஆனின் மிக கொடூரமான வசனங்களை எடுத்திக்காட்டினால், அவர்கள் வசனங்களை பாதிபாதியாகவும், மற்றும் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக எடுத்து காட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டுங்கள்.

4. ஒருவேளை அவர்கள் முழு வனத்தையும், மற்றும் முந்தைய பிந்தைய வசனங்களையும் எடுத்துக் காட்டினால், அவர்கள் பயன்படுத்திய "குர்-ஆன் மொழிபெயர்ப்பு" தவறானது என்றுச் சொல்லுங்கள்.

5. ஒருவேளை அவர் பத்து வித்தியாசமான மொழிபெயர்ப்புகளை கொண்டுவந்து காட்டினால, சரியான பொருள் குர்-ஆனை அரபியில் படித்தால் தான் புரியும் என்றுச் சொல்லுங்கள்.

6. ஒரு வேளை அவர் அரபி மொழியில் மிகவும் புலமைமிக்கவராக இருந்தால், அந்த வசனங்களின் பொருள் வெளிப்படையாக தெரிவது போல் எழுத்தின் படி இல்லாமல் சில மறைந்த பொருளும் உண்டு என்றுச் அழுத்திச் சொல்லுங்கள்.

7. அவர் இன்னும் விட்டுக்கொடுக்காமல் திடமாக இருந்தால், இந்த வசனங்களின் பொருள் சீராவும், ஹதீஸ்களும் படிக்காமல், எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று தெரிந்துக்கொள்ளாமல் படித்தால் புரியாது என்றுச் சொல்லுங்கள்.

8. ஒருவேளை அவர், ஹதீஸ்களையும், சீராவையும் மேற்கோள் காட்டி, எந்த சூழ்நிலையில் அவைகள் சொல்லப்பட்டது என்றும் மற்றும் முகமது செய்த கொலைகள், கற்பழிப்புகள், வழிப்பறி கொல்லைகள் போன்றவற்றிற்கு ஆதாரங்களை முன்வைத்தால், ஹதீஸ்கள், மற்றும் சீரா எல்லாம் கேட்டு எழுதியவைகள், அவைகள் தவறானவை, குர்-ஆன் மட்டும் தான் சரியானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள்.

9. இதற்கு அவர், "குர்-ஆன் என்பது மனிதன் உருவாக்கியது, குர்-ஆன் புனிதமானது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்" என்று உங்களை கேட்டால். டாக்டர் புகைலி எழுதிய "குர்-ஆனில் அறிவியல்" என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டுங்கள். மற்றும் டாக்டர் புகைலி சொல்வது போல தற்கால விஞ்ஞானம் குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்றும், மகாத்மா காந்தி தினமும் குர்-ஆனை படித்தார் என்றும், அதைப்பற்றி அவர் புகழ்ந்து பேசினார் என்றும் அவருக்குச் சொல்லுங்கள்.

10. இதற்கு அவர், டாக்டர் புகைலி என்பவர் சவுதி அரேபியாவின் சம்பளத்தின் கீழ் வேலை செய்தார். அவராவது, மகாத்மா காந்தியாவது தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டு முஸ்லீமாகவில்லை. மற்றும் டாக்டர் புகைலின் ஆராய்ச்சியை பல ஆராய்ச்சியாளர்கள், மேதாவிகள் தவறானது என்றும், அவருக்கு சவால் கொடுத்தும், அவர் சொன்ன கருத்துகள் தவறானது என்றும் எப்போதோ நிரூபித்துவிட்டார்கள் என்று அவர் சொன்னால். அந்த மேதாவிகளை ஜாகிர் நாயக்கிடம் விவாதத்திற்கு வரும் படி அவருக்குச் சொல்லுங்கள்.

11. இன்னும் அந்த பூச்சி(நபர்), விட்டுக்கொடுக்காமல் இருந்தால், உடனே தலைப்பை மாற்றி விட்டு, மற்ற மதங்களில், வேதங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.

12. அவர் தன் வாதத்திலேயே தொடர்ந்தால், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுங்கள், அவமானப்படுத்துங்கள், அவனை யூதனே, சைனா பன்றியே, அல்லது இந்து நாயே என்று திட்டுங்கள்.

13. இதற்கும் அவர் மசியவில்லையானால், இஸ்லாம் மீது மண் தூவுவதற்கு எவ்வளவு பணம் யூதர்களிடமிருந்து பெற்றாய் என்று கேளுங்கள்.

14. இதற்கும் அவன் சீற்குலையவில்லையானால், அவன் அம்மாவையும், சகோதரிகளையும் அழையுங்கள், மற்றும் கெட்டவார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

15. இன்னும் அவன் பிடிவாதமாக இருந்தால், அவன் மீது இப்படியாக சாபம் கூறுங்கள் "நீ நரகத்தில் எரிவாய், கடைசிநாளில் நீ வேதனைப்படுவாய், அல்லா உன்னை உன் கல்லரையில் பிடிப்பார் ……".

16. மேல் சொன்ன எல்லா வழிமுறையும் தோல்வியானால், அவனை காயப்படுத்தி கொன்றுவிடுவதாக பயமுறுத்து. மற்றும் நீ அந்த விவாதத்தில் வென்றுவிட்டதாகவும், காரணம் குர்-ஆன் உண்மையிலேயே ஒரு இறைவனுடைய வேதம் என்பதால் என்று தம்பட்டம் அடித்து ஊரேல்லாம் சொல்லு.

17. முடிந்தால், இந்த வெற்றியை நீ எளிதாக வென்றுவிட்டதாக இஸ்லாமிய வெப்தளங்களுக்கு தெரிவித்துவிடு. இப்படிப்பட்ட செய்திகள், இமாம்களுக்கும், வெப்தளத்தைல் படிப்பவர்களுக்கும், இன்னும் சிறைச்சாலைகளில் உள்ள குறைவான அறிவுடையவர்களுக்கும் இஸ்லாமைப்பற்றிச் சொல்ல பெரும் உதவியாக இருக்கும்.

Source : http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1146

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், முஸ்லீம், விவாதம்

அக்பருக்கு பதில்(இஸ்லாம்)

கேரளாவின் பிரபல இஸ்லாமிய அறிஞர் எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

      எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

முன்னுரை:

இஸ்லாம் கல்வி தளத்தில் அக்பர் என்பவரின் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து பதித்து இருந்தார்கள். பைபிள் பற்றி பல கருத்துக்களை முன்வைத்தார்கள். மற்றும் பைபிளில் பல முரண்பாடுகள் இருக்கிறது என்று எழுதியிருந்தார்கள். அவர்கள் முன்வைத்த விவரங்களுக்கு பதில் தருவது கிறிஸ்தவர்களின் கடமை என்பதால், இந்த பதிலை ஒரு தொடர் கட்டுரையாக எழுதுகிறேன். ஆனால், இஸ்லாம் அறிஞர்கள் மட்டும் " குர்ஆனில் உள்ள முரண்பாடுகளை, தவறுகளை" கிறிஸ்தவர்கள் சுட்டிக்காட்டினால் பதில் தருவதில்லை. இது ஒன்றே போதும், குர்ஆன் ஒரு வேதம் இல்லை என்பதற்கு. அப்படி எங்கள் கேள்விகளுக்கு பதில் தர விரும்புகிறவர்கள் என் தளத்தில் ( www.geocities.com/isa_koran ) பதித்து இருக்கும் பல இஸ்லாமிய கட்டுரைகளை படித்து பதில் தரமுயற்சி செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே கட்டுரையை வாழ்க்கை கல்வி என்ற தளமும் வெளியிட்டுள்ளது.

இஸ்லாம் கல்வி எழுதியது:

மூலம்: M.M.அக்பர் – தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன் Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare.htm

தேங்கை முனீப் அவர்களுக்கு ஈஸா குர்ஆன் பதில்:

அருமையான நண்பரே, எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய மூல கட்டுரையின் தொடுப்பை கொடுப்பீர்களானால் மிகவும் எனக்கு உதவியாக இருக்கும். அல்லது இக்கட்டுரை எம். எம். அக்பர் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுத்து மொழி பெயர்த்து இருந்தால், அதன் தொடுப்போ அல்லது அங்கு எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால், மிகவும் உதவியாக இருக்கும்.

ஏன் நான் மூல தொடுப்பை கேட்கிறேன் என்றால், எம். எம். அகபர் அவர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றி சொன்ன மற்ற விவரங்களை நான் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை என் பதிலுக்கு அவர் மறுப்புச் சொல்ல இது ஏதுவாகும்.

அன்பு நண்பர் முனீப் அவர்களே, இந்த கணினி, மற்றும் இணையம் யுகத்தில் ஒரு கட்டுரையை மொழிப் பெயர்க்கும் போது, மூல தொடுப்பை கொடுக்காமல், அல்லது அதன் மற்ற விவரங்களை கொடுக்காமல் எழுதுவது எப்படி நியாயமாகும் என்று நினைக்கிறீர்கள்?

இஸ்லாம் கல்வி எழுதியது:

இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை.

பைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும். புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.

ஈஸா குர்ஆன் பதில்:

இயேசுவின் பிறப்பைப் பற்றி பைபிள் சொல்லும் விவரங்களை மாற்றி முகமது சொன்ன அல்லது குர்ஆனில் உள்ள விவரங்கள் தவறானவை என்று " இயேசுவிற்கு நேர்ந்ததென்ன?" என்ற தொடர் கட்டுரைகளில் நான் விவரித்துள்ளேன். அவைகளுக்கு இது வரை பதில் இல்லை. இவைகளை படிப்பவர்கள் "குர்ஆன் சொல்லும் விவரங்களில் பல தவறுகள் இருப்பதை " நன்றாக புரிந்துக்கொண்டு இருப்பார்கள்.

பைபிள் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு என் பதிலாக கீழ் கண்ட கட்டுரைகளை முன்வைக்கிறேன். பைபிள் மட்டும் தான் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்க நான் பதில் தருகிறேன், அது போல, குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பை தருகிறேன். இக்கட்டுரைகளுக்கு பதில் தாருங்கள்.

இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? பாகம் 1 , பாகம் 2 , பாகம் 3 , பாகம் 4 , பாகம் 5 , பாகம் 6

(இந்த கட்டுரைகள் இது தான் இஸ்லாம் தளத்தின் கட்டுரைக்கு பதிலாக நான் எழுதினாலும், இஸ்லாம் பற்றியுள்ள விவரங்களை, குர் ஆன் பற்றிய என் கேள்விகளை, குற்றச்சாட்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டு பதில் தர முயலுங்கள்.)

இஸ்லாம் கல்வி எழுதியது:

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடுகளற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை.

இறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு

பைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம்.

ஈஸா குர்ஆன் பதில் :

பைபிளை மாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டும் அறிஞர்களே, முதலில்:

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

அதை அல்லா இறக்கினாரா?

ஏன் முந்தைய வேதங்களை மக்கள் மாற்றும் போது, அதை தடுக்க சக்தி இல்லாமல் அல்லா சும்மா இருந்துவிட்டார்?

அல்லது

மக்கள் முந்தைய வேதங்களை மாற்றினால் மாற்றட்டும் என்று அவராகவே வேண்டுமென்றே விட்டுவிட்டாரா?"

போன்ற கேள்விகளை கேட்டுப்பாருங்கள்.

இந்த விவரங்கள் குர்ஆன் இறைவனின் வேதம் அல்ல என்பதை நிருபிக்கிறது. இதோ கீழ் கண்ட கட்டுரையை பைபிள் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலாக முன் வைக்கிறேன்.

கட்டுரை: குர் ஆன் பாதுகாக்கப்பட்டதா?  

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? என்ற கேள்வியை மிகவும் ஆணித்தரமாக இக்கட்டுரை கேட்கிறது. இதற்கு பதில் தாருங்கள்.

இயேசுவின் பிறப்பில் கைவைத்து சரியான விவரங்களை தரமுடியாமல் திணறும் குர்ஆன், இயேசுவின் சிலுவை மரண விஷயத்திலும் கைவைத்துவிட்டு மாட்டிக்கொண்டுள்ளது.

"ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா " என்ற கட்டுரையை உங்களுக்கு நான் பதிலாக முன்வைக்கிறேன்.

கட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (அறியாமையில் கிறிஸ்தவத்தை துவக்கிய அல்லா)

கிறிஸ்தவம் ஆரம்பிப்பதற்கு காரணம் அல்லா தான்.

கிறிஸ்தவம் இஸ்லாமை விட அதிகமாக இப்போது வளர்ந்துள்ளது என்பதற்கு காரணம் அல்லா தான்.

அவ்வளவு ஏன், கிறிஸ்தவத்தை வளர்த்ததே அல்லா தான் என்று இக்கட்டுரைச் சொல்கிறது.

பைபிளில் வரலாற்று தவறுகள் உள்ளது, மக்கள் அதை மாற்றி விட்டார்கள் , அதில் முரண்பாடுகள் உள்ளது என்றுச் சொல்லும் நண்பரே, இதோ இந்த கட்டுரைகள் நீங்கள் சொன்ன எல்லா குற்றச்சாட்டுகள் அனைத்தும் குர்ஆனுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்கிறது. இதற்கு பதில் கொடுத்து உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

பைபிளோடு ஒப்பிட குர்ஆன் தகுதியானது அல்ல:

எம். எம். அக்பர் அவர்களே, முனீப் அவர்களே கீழ் கண்ட கட்டுரையை படித்துப்பாருங்கள். அதாவது, பைபிளோடு குர்ஆனை ஒப்பிடக்கூடாது, அது தவறானது என்று இக்கட்டுரை சொல்கிறது. ஏனென்றால், பைபிள் தன் வசனங்கள் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்ற விவரங்களை தன்னிடம் கொண்டுள்ளது. எனவே, அவைகளை புரிந்துக்கொள்ள ஹதீஸ்கள் போல புத்தகங்கள் தேவையில்லை. ஆனால், குர்ஆனின் வசனங்கள் புரிந்துக்கொள்ள ஹதீஸ்கள் (இவைகளின் உண்மையும், பொய்யும் இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்), முகமதுவின் வாழ்க்கை வரலாறுகள் (சீராக்கள்) தேவைப்படுகின்றது. ஒரு சராசரி மனிதன் ஹதீஸ்கள், சீராக்கள் உதவியில்லாமல் குர்ஆனை புரிந்துக்கொள்ளமுடியாது. ஆனால், எந்த ஒரு புத்தகத்தின் உதவி இல்லாமல் பைபிளின் அடிப்படை கோட்பாடுகள், சத்தியங்கள் என்ன என்று சரியாக பைபிள் ஒன்றை படிப்பதன் மூலம் ஒரு சராசரி மனிதன் புரிந்துக்கொள்ளமுடியும்.

எனவே, குர்ஆன் முழுமை அடைந்தது என்றுச் சொல்லும் நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், இனி அப்படி சொல்லவேண்டாம் என்று கீழ் கண்ட கட்டுரையின் ஆசிரியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, உங்கள் குற்றச்சாட்டிற்கு பதிலாக அக்கட்டுரையை நான் முன்வைக்கிறேன்.

தமிழ் கட்டுரை: பைபிளையும், குர் ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? ஆசிரியர் சாமுவேல் கிரீன்

எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய இக்கட்டுரையில் சொல்லப்பட்ட மற்ற விவரங்களுக்கு அடுத்த கட்டுரையில் பதில் தருகிறேன். தேவன் ஆதாமை, ஏவாளை படைத்தது முதல் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் கூடிய சீக்கிரத்தில் கர்த்தருக்கு சித்தமானால் பார்க்கலாம். என் பதில்களோடு கூட, படைப்பு விவரங்களிலும் குர்ஆன் செய்துள்ள தவறுகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் பைபிள் சொல்லும் விவரங்கள் எவ்வளவு சரியானவை என்பதையும் அடுத்த கட்டுரைகளில் தெரிந்துக்கொள்ளலாம். 

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/mmakbar-1.htm

 

1 பின்னூட்டம்

Filed under அக்பர், அல்லா, இஸ்லாம், குரான், முகமது

பிஜேயின் போலித்தனமான புத்தகத்துக்கு பதில்

"பின்னாகப் போ சாத்தானே" என்றார்-TNTJ தலைவருக்கு ஈசாகுரான் பதில்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார்

(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு)

பிஜே அவர்களின் குற்றச்சாட்டு:

"இயேசுவிற்கு சரியாக மனிதர்களை மதிப்பிடத் தெரியவில்லை, தனக்கு பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு தெரிவு செய்தது தவறு"

முன்னுரை: பிஜே அவர்களின் இயேசு இறைமகனா? என்ற புத்தகத்திற்கு "ஈஸா குர்ஆன்" தளம் மறுப்பு எழுதிக்கொண்டு வருகிறது. இக்கட்டுரையில் "தவறாக மதிப்பிடுதல் கடவுள் தன்மை அன்று " என்ற தலைப்பின் கீழ் பிஜே அவர்கள் எழுதிய விவரங்களுக்கு பதில்/மறுப்பு தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் பதில்:

இக்கட்டுரைக்கான பதிலை நான் இரண்டு பாகங்களாக பிரித்து சொல்லவிரும்புகிறேன்.

பாகம் – 1: பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்

பாகம் – 2: இயேசுவிற்கு பிறகு தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு தான். பிஜே அவர்களின் கணிப்பு தவறானது.


பாகம் – 1 : பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்

பிஜே அவர்கள் எழுதிய எல்லா விவரங்களுக்கும் நாம் ஒவ்வொன்றாக பதிலைக் காண்போம்.

1. பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொள்ளும் பிஜே அவர்கள்:

பிஜே அவர்கள் இயேசுவைப் பற்றி பல தவறான கருத்துக்களையும், பைபிள் வசனங்களுக்கு புதுப்புது அர்த்தங்களையும் கண்டுபிடித்து தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பிஜே அவர்கள் எழுதியது:

3. தவறாக மதிப்பிடுதல் கடவுளின் தன்மை அன்று

துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் (நீதிமொழிகள் 17:15)

கெட்டவனை நல்லவன் என்றும் நல்லவனைக் கெட்டவன் என்றும் தீர்ப்பது கடவுளுக்குரிய இலக்கணமன்று. இவ்வாறு தீர்ப்பது கடவுளுக்குப் பிடிக்காததும் கூட. இயேசுவிடம் இந்தத் தகுதி இருந்ததா என்றால் இல்லை என்று பைபிள் சொல்கிறது.

ஈஸா குர்ஆன் பதில்:

இயேசு தன் சீடனாகிய பேதுருவை தனக்கு பின்பு தன் ஆடுகளை மேய்க்க நியமித்தது மிகவும் பொருத்தமானதும், இதில் இயேசு வெற்றியைப் பெற்றார் என்பதையும், இயேசுவின் சபையை நடத்துவதற்கு 12 சீடர்களில் "சீமோன் பேதுரு" தான் மிகச் சரியான ஒரு நபர் என்பதையும் பிஜே அவர்களுக்கு விளக்குவதற்கு முன்பாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட நீதிமொழிகள் வசனத்திற்கு பதிலைத் தருகிறேன்.
பிஜே அவர்களே, நீதிமொழிகள் 17:15ம் வசனத்தின் பொருள் என்னவென்றால், ஒரு நீதிபதி அல்லது அரசன் மக்களுக்கு தீர்ப்புச் சொல்ல "நீதிபதி இருக்கையில்" உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் போது, குற்றவாளியை குற்றவாளி என்றும், நீதிமானை நீதிமானாகவும் தீர்ப்பு செய்யவேண்டும் என்றுச் சொல்கிறது, அப்படியில்லாமல் மாற்றித்தீர்ப்பு செய்பவன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தான் ஒரு "நீதிபதியாக" வரவில்லை அதற்கு பதிலாக நம்மை இருட்டிலிருந்து மீட்கவே வந்தார் என்று பல முறை அவர் சொல்லியுள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய இரண்டாம் வருகையில் தான் ஒரு "நீதிபதியாக" இருந்து உலக மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்வார் என்றும் சொல்லியுள்ளார்.

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47 )

அதாவது, இலஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நீதிபதி நியாயத்தை புரட்டுபவனைப் பற்றி இவ்வசனம் சொல்கிறது. முக்கியமாகச் சொன்னால், நியாயம் தீர்க்க உட்காரும் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து என்றுச் சொல்லக்கூடிய ஒரு அமைப்பிலிருந்து, உச்ச நீதி மன்ற நீதிபதி வரை, பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு, நல்லவனை கெட்டவன் என்றும் கெட்டவனை நல்லவன் என்றும் நியாயம் தீர்ப்பவன் தேவனுக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது. இதையே ஏசாயா 5:23ல் "இப்படிப்பட்டவனுக்கு ஐயோ" என்று சொல்லப்படுகிறது.

பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!(ஏசாயா: 5:23)

ஆக, நீங்கள் இயேசுவின் முதல் வருகையில் அவரை நீதிபதியாக பார்த்தது மிகவும் தவறான பார்வையாகும். ஆனால், அவரது இரண்டாம் வருகையில் நீங்கள், நான், உங்கள் முகமது மற்றும் மற்ற உலக மக்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக நியாயத்தீர்ப்பிற்காக நிற்போம். அப்போது அவர் நீதி செலுத்துவார். எனவே, இவ்வசனம் இயேசுவின் முதல் வருகைக்கு சம்மந்தப்பட்ட வசனம் அல்ல.

இயேசு தன்னை நீதிபதியாக தன்னை காட்டிக்கொள்ளவும் இல்லை. அன்பே உருவான தெய்வமாக தன்னை முதலாவது காட்டவே அவர் வந்தார். அதனால், ஒரு விபச்சார பெண்ணை நீயாயம் தீர்க்கும்படி யூத ஆசாரியர்கள் சொன்னாலும், அப்பெண்ணை மன்னித்து, இனி அப்படி செய்யாதே என்றுச் சொல்லி, அனுப்பிவிட்டார். அதுபோல பல சந்தர்பங்களில் அவர் முதலில் மன்னித்து பிறகு சுகப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது இரண்டாம் வருகையில், அவரது வாயிலிருந்து "நியாயத்தீர்ப்பு" மட்டும் தான் வெளிப்படும். விபச்சாரக்காரர்களையும், திருடர்களையும், கொலை செய்பவர்களையும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொல்பவர்களையும், பெண்களை கற்பழிப்பவர்களையும் அவர் நியாயம் தீர்ப்பார், இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.

எனவே, உம்முடைய கருத்து அல்லது புரிந்துக்கொள்ளுதல் மிகவும் தவறானதாகும்.

இருந்த போதிலும், ஒரு பேச்சுக்காக நீங்கள் சொல்வது போல இயேசு நியாயம் தீர்த்தார் என்று வைத்துக்கொண்டாலும், அப்போது கூட நீங்கள் இயேசுவை குற்றப்படுத்த முடியாது. ஏனென்றால், இயேசுவின் சீடர்களில் தலைமைத் துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர் "பேதுரு" தான் என்பதை பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நாம் கண்டுக்கொள்ளமுடியும் . உங்களுடைய "கணிப்பு" தவறு என்பதை பைபிளின் உதவியோடு இப்போது விளக்குகிறேன்.

2. எதற்காக பேதுருவை "பின்னாகப்போ சாத்தானே" என்று இயேசு சொன்னார்?

பேதுருவை இயேசு ஒரு சமயத்தில் "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார். பேதுரு இடறலாகவும், தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறார் என்று இயேசு சொன்னார். இதை பிஜே அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தன் புத்தகத்தில் எழுதிவிட்டார். அதாவது பிஜே அவர்கள் குறிப்பிட்ட இவ்விவரங்கள் இஸ்லாமுக்கு ஒரு மிகப்பெரிய அடியாக மாறப்போகிறது என்பதை பிஜே அவர்கள் அறியவில்லை.

பிஜே அவர்கள் எழுதியது:

அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16:23)

பேதுரு என்ற சீடனைச் சாத்தான் என்றும்
இயேசுவையே தடம் புரளச் செய்தவன் என்றும்
கடவுளுக்குரியவைகளைச் சிந்திக்காதவன் என்றும்

இயேசு எடை போட்டிருக்கிறார்

அ) ஏன் இயேசு பேதுருவை "பின்னாகப்போ சாத்தானே " என்றுச் சொன்னார்?

ஆ) யார் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள்?

இ) எப்படிப்பட்டவர்கள் தேவனுக்குரியதை தேடாமல் மனுஷனுக்குரியதை தேடுகிறார்கள்?

இப்படி இயேசு பேதுருவிற்கு சொல்வதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான், அதாவது " இயேசுவின் சிலுவைப்பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவைகள் இயேசுவிற்கு நேரிடக்கூடாது என்று அவரிடம் பேதுரு சொன்னதால் தான்".

இப்பொழுது பிஜே அவர்கள் குறிப்பிட்ட மத்தேயு 16:23ம் வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களைப் (மத்தேயு 16:21-22) பாருங்கள், அப்பொழுது உங்களுக்கே புரியும்.

மத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

மத்தேயு 16:22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

பிஜே அவர்கள் குறிப்பிட்ட மற்றும் இயேசு பேதுருவோடு சொன்ன வார்த்தைகளின் படி:

இயேசுவிற்கு சிலுவைப்பாடுகள் வரக்கூடாது என்று சொல்பவர்களைப் பார்த்து ,

இயேசு சிலுவையில் மரிக்கக்கூடாது அல்லது மரிக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து,

இயேசு மரித்து உயிர்த்தெழக்கூடாது அல்லது உயிர்த்தெழவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்து,

இயேசு "பின்னாகப் போ சாத்தானே" என்றுச் சொல்கிறார்.

இப்படிப் பட்டவர்கள் "தனக்கு இடறலாக இருக்கிறார்கள்" என்று இயேசு சொல்கிறார்,

இப்படிப் பட்டவர்கள் "தேவனுக்குரியதை தேடாமல், மனுஷருக்குரியதை தேடுகிறவர்கள் " என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவின் மீது வைத்த அன்பின் காரணத்தினாலும், தன் குருவிற்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற கரிசனையினாலும், நிறைந்தவராய் பேதுரு, இயேசுவை தனியே அழைத்து, "இப்படி உமக்கு பாடுகள், மரணம்" வரக்கூடாது என்றுச் சொன்னார்.

ஆனால், இயேசு சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பது தேவனின் திட்டம், இதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேதுரு பேசியதால், தான் இயேசு பேதுருவைப் பார்த்து "எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார். ஆனால், இயேசு மரித்து உயிரோடு எழுந்துவிட்ட பிறகு, இதே பேதுரு எருசலேம் மக்களுக்கு சாட்சியாக எழுந்து நின்று இயேசுவின் சிலுவை மரணம் உயிர்த்தெழுதல் பற்றி சாட்சி சொல்கிறார், பல இடங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று இயேசு மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று சாட்சி பகிர்ந்தார், இந்த காரணத்திற்காகவே மரித்தார். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் (புதிய ஏற்பாடு) பார்க்கலாம்.

பேதுரு ஒரு முறை தவறு செய்தார், அதற்காக இயேசு அவரை கடிந்துக்கொண்டார், உண்மை தெரிந்த பிறகு பேதுரு மாறிவிட்டார், அவ்வளவு தான், ஆனால், பிஜே அவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால், இயேசு தொடர்ந்து பேதுருவை "நீ சாத்தான்" என்று முத்திரை குத்திவிட்டதாகவும், பேதுருவோடு சேராதீர்கள் என்று இயேசு மற்றவர்களுக்குச் சொன்னதாகவும், பேதுருவினால் இயேசு தடம் புரண்டு போய்விட்டதாகவும், பிஜே அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறார். இந்த பேதுருவைக்கொண்டு, இந்த பேதுருவின் ஊழியத்தின் மூலமாக இயேசு இஸ்லாமையும், இருட்டின் அதிகாரத்தையும் இன்று வரை தட‌ம் புரட்டிக்கொண்டு இருக்கிறார் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

பிஜே அவர்களுக்கு நான் எழுதும் இரண்டாவது பதிலில் இயேசு எப்படி பேதுருவை ஆரம்பத்திலிருந்து தயார்படுத்தினார் என்பதையும், எப்படி அவரை உட்சாகப்படுத்தினார் என்பதையும், பேதுரு எப்படி தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக உழைத்தார் என்பதையும் காணலாம்.

3. முகமதுவையும், இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களையும் பார்த்து இயேசு "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார்:

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, கிறிஸ்தவத்தின் அடிப்படையாகிய "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை" மறுப்பவர்களை, அல்லது இவைகள் நடக்கக்கூடாது என்றுச் சொல்பவர்களை அல்லது இவைகள் நடக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து இயேசு " எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார், என்பது நமக்கு தெளிவாக விளங்கி இருக்கும்.

இஸ்லாம் படி, முகமது "இயேசு சிலுவையில் மரிக்கவில்லை" என்றுச் சொன்னார். இயேசு உயிர்த்தெழவில்லை என்றுச் சொன்னார். எனவே, பேதுருவிற்கு இயேசு சொன்ன அதே வார்த்தைகள் இவருக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லும் எல்லாருக்கும் பொருந்தும்.

இப்படி நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, பைபிளில் இயேசு சொன்ன வசனங்கள் இப்படிச் சொல்கின்றன. இந்த வசனங்களை பிஜே அவர்களும் குறிப்பிட்டார்கள், பேதுருவிற்கு இயேசு இப்படி சொல்லியுள்ளார் என்று பிஜே அவர்களே சாட்சியும் கொடுக்கிறார் .

எனவே, பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, முஸ்லீம்களைப் பார்த்து இயேசு "பின்னாகப் போ சாத்தானே" என்றுச் சொல்கிறார். முஸ்லீம்கள் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார். முஸ்லீம்கள் இறைவனுக்கு ஏற்றதை சிந்திக்காமல், மனிதர்களுக்குரியதை சிந்திக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார்.

இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில் சிந்தித்துப்பாருங்கள்,

ஏன் பேதுருவைப் பார்த்து இயேசு இந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னார்?

இப்படி சொல்லும் மற்றவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்துமா? இல்லையா? என்று சிந்தித்துப்பாருங்கள்.

குர் ஆனைப் பொருத்தவரையில்:

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை,

இயேசு மரிக்கவில்லை, இயேசுவை அல்லா உயிரோடு எடுத்துக்கொண்டார்,

இயேசு உயிர்த்தெழவில்லை

இயேசுவின் வார்த்தைகளின் படி பைபிளைப் பொருத்தவரையில்:

இயேசுவின் சிலுவை பாடுகள்,

அவரது மரணம்,

உயிர்த்தெழுதல்

இவைகளை மறுத்தவர்கள்:

அது யாராக இருந்தாலும் சரி, தன்னோடு 3 ஆண்டுகளுக்கு அதிகமாக சீடனாக இருந்தவனானாலும் சரி, தனக்கு பின் தன் ஊழியத்தை நேர்த்தியாகச் செய்து சாட்சியாக மரிக்கப்போகிறவனானாலும் சரி, இயேசுவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின் தோன்றும் எந்த மார்க்கமானாலும் சரி, "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் " போன்றவைகளை மறுப்பவர்களைப் பார்த்து இயேசு கூறும் வார்த்தைகள் இவைகள்:

"பின்னாகப்போ சாத்தானே"

"நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்"

"நீ இறைவன் சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு செவி சாய்க்காமல், மனுஷனுக்கு சம்மந்தப்பட்டதற்கு செவி கொடுக்கிறாய்"

என்பதாகும்.

இதன் படி, "இஸ்லாமைப் பார்த்து" எனக்கு பின்னாகப்போ சாத்தானே என்று இயேசு சொல்கிறார். 
"இஸ்லாம் இறைவனின் சித்தத்திற்கு இடறலாக இருக்கிறது" என்று இயேசு சொல்கிறார். 
"இஸ்லாமின் கோட்பாடுகள், இறைவனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்வதில்லை, மனுஷனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்கிறது" என்று இயேசு சொல்கிறார்.

பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, இயேசு பேதுருவை சாத்தான் என்று சொல்லி எடை போட்டாராம், இப்போது இதே வார்த்தைகள் இஸ்லாமையும், முஸ்லீம்களையும் எடை போட்டுக்கொண்டு இருக்கின்றன.

நான் இந்த பதிலில் சொன்ன விவரங்கள் சரியானவை அல்ல என்று யாராவது நினைப்பீர்களானால், எனக்கு தெரிவியுங்கள். பேதுருவிற்கு இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி இஸ்லாமுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்லியுள்ளேன். இஸ்லாமுக்கு பொருந்தாது என்று சொல்வீர்களானால்? எப்படி பொருந்தாது? என்று விவரமாக எனக்கு பதில் அளிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிஜே அவர்கள் எழுதியது:

அது மட்டுமின்றி இயேசுவையே அவன் மூன்று தடவை மறுப்பான் என்றும் இயேசு கூறியதாக நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன.

ஈஸா குர்‍ஆன் பதில்:

பிஜே அவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு மனிதனை தவறாக மதிப்பிடுவது வேறு, ஒரு மனிதம் இப்படி நடந்துக்கொள்வான் என்று முன்கூட்டியே சொல்வது வேறு.

இந்த இடத்தில், இயேசு பேதுருவை தவறாக மதிப்பிடவில்லை, அதற்கு பதிலாக தான் ஞானத்தின் ஊற்று என்பதை நிருபித்தார், எதிர் காலத்தில் நடப்பதை துள்ளியமாக சொன்னார்.

ஒரு வேளை, பேதுருவைப் பார்த்து இயேசு, "நீ என்னை மறுதலிக்கமாட்டய் என்று நான் நினைத்தேன்(மதிப்பிட்டேன்), ஆனால், என் நம்பிக்கையை வீணாக்கிவிட்டாய்" என்று சொல்லியிருந்தால், நீங்கள் சொல்வது போல "மனிதர்களை மதிப்பிட அல்லது எடை போட இயேசுவிற்கு தெரியவில்லை" என்று நான் ஏற்றுக்கொண்டு இருப்பேன்.

ஆனால், நடந்தது என்ன?

பேதுரு சொல்கிறார்: நான் உம்மை எப்பொதும் மறுதலிக்கமாட்டேன் (எனக்கு இயேசு தெரியாது என்று சொல்லமாட்டேன்) என்றுச் சொல்கிறார். என் உயிர் போனாலும் நான் அப்படி சொல்லமாட்டேன் என்றுச் சொல்கிறார்.

இதற்கு இயேசு பதில் சொல்கிறார்: அப்படியா? "எனக்கு இயேசு என்றால் யார் என்று தெரியாது" என்று நீ சொல்லுவாய்(மறுதலிப்பாய்) என்றார்.

உண்மையில் நடந்தது என்ன? இயேசு சொன்னது போல பேதுரு மறுதலித்தார். அதாவது இயேசு சொன்னது தான் நடந்தது, இயேசு எடை போட்டது சரியாக நடந்தது. இயேசு மதிப்பிட்டது சரியாக நடந்தது.

பிஜே அவர்களே இந்த நிகழ்ச்சி இயேசு எல்லாம் அறிந்தவர் என்று தெளிவாகச் சொல்லும் போது, உமக்கு மட்டும், இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிடத்தெரியவில்லை என்று எப்படி தெரிந்தது?

ஒரு வேளை, இயேசு சொன்னது போல நடக்காமல், பேதுரு இயேசுவை மறுதலிக்காமல் இருந்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அதாவது, இயேசு "இப்படி பேதுரு நடந்துக்கொள்வான் "என்று மதிப்பிட்டு இருந்து, ஆனால், அதற்கு எதிர்மாறாக பேதுரு நடந்து இருந்திருந்தால். அதனால், எதிர் காலத்தைப் பற்றிய அறிவு இயேசுவிற்கு இல்லை, மனிதர்களை தவறாக இயேசு மதிப்பிட்டு விட்டார் என்று சொல்லலாம். ஆனால், அப்படி நடக்கவில்லையே? இயேசு சொன்னதே நடந்ததே, இயேசு சொன்னது போலவே பேதுரு மறுதலித்தாரே, பிறகு பேதுரு மனங்கசந்து அழுதார் என்று பைபிள் சொல்கிறதே? பிஜே அவர்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் எதிர்மறையாக தெரிகிறது.

இயேசு சொன்னது போலவே அப்படியே 100 சதவிகிதம் நடந்தது. இயேசு இறைவன் என்பதை நிருபிக்கும் ஒரு நிகழ்ச்சி எப்படி பிஜே அவர்களுக்கு வேறுமாதிரியாக தென்படுகிறது. இயேசு சொன்னது போல பேதுரு நடந்துக்கொண்டுள்ளார், அப்படியானால், தோல்வி அடைந்தது யார்? பேதுருவா? இயேசுவா? பேதுரு தானே, அதனால், தான் அவர் மனம் கசந்து அழுதார், மறுபடியும் விழுந்த இடத்திலிருந்து எழுந்து நின்றார். வெற்றிப் பெற்றது இயேசு அல்லவா? பிஜே அவர்களுக்கு எப்படி இது தெரியாமல் போனது?

4. இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் என்று பிஜே அவர்களுக்கு தெரியுமா?

பிஜே அவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் எத்தனைப்பேர் என்று கூட தெரியவில்லை

பிஜே அவர்கள் எழுதியது:

பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். (மத்தேயு 16:19)

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.

Formats mine

ஈஸா குர்ஆன் பதில்:

அருமையான பிஜே அவர்களே, இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று உமக்குத் தெரியுமா?

அதாவது, கிறிஸ்தவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாத சாதாரண மனிதர்களுக்கும், இயேசுவின் சீடர்கள் 12 பேர் என்று தெரிந்து இருக்கும், ஆனால், கிறிஸ்தவத்தில் ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி, பல மேடைப் பேச்சுக்கள் ஆற்றிய உமக்கு தெரியாமல் போனது தான் மிகவும் வேதனைக்குரிய விசயம்.

1. எப்படி பேதுரு தவிர, இயேசுவிற்கு இருந்த மீதமுள்ள சீடர்கள் 9 பேர் என்றுச் சொல்கிறீர்?

2. இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் என்ற சீடனை நீக்கிவிட்டாலும், பேதுரு அல்லாமல், இயேசுவிற்கு 10 சீடர்கள் இருந்தார்கள் அல்லவா? உமக்கு இந்த 9 எப்படி வந்தது?

3. பேதுரு தவிர சிறந்த சீடர்கள் என்று 9 பேரை எப்படி நீங்கள் தீர்மானித்தீர்கள் (கண்டுபிடித்தீர்கள்), பிஜே அவர்களே?

4. அதாவது, சில சீடர்கள் பற்றிய முழுவிவரங்கள் நான்கு சுவிசேஷங்களில் அதிகமாக சொல்லப்படவில்லை. அப்படி இருக்கும் போது, 10 பேரில், மிகவும் சிறந்தவர்கள் 9 பேர் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்கமுடிந்தது?

5. சில சீடர்கள் அதிகமாக இயேசுவோடு பேசியதையோ, மற்ற விவரங்களையோ சுவிசேஷங்களில் காணமுடியாது? அப்படி இருக்கும் போது, சிறந்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்?

கேட்க யாரும் இல்லை என்று நீங்கள் எது சொன்னாலும், கேட்டுக்கொண்டு தமிழ் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா?

பிஜே அவர்களே நான் உங்களுக்கு முன்பாக ஒரு சவாலை வைக்கிறேன், பேதுருவைத் தவிர மீதமுள்ள 10 சீடர்களில், எப்படி 9 பேர் சிறந்தவர்கள் என்பதை நீங்கள் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்? சில சீடர்கள் பற்றிய இதர விவரங்கள் அதிகமாக பைபிளில் சொல்லாப்படாத போது, எந்த தகுதிகளை வைத்து பேதுருவை விட சிறந்தவர்கள் என்று நீங்கள் முடிவு செய்தீர்கள் என்பதை விளக்குங்கள்?

ஆனால், மற்ற சீடர்களை விட இயேசுவின் சபையை நிர்வாகிக்கும் தகுதி பேதுருவிற்குத் தான் அதிகமாக உள்ளது என்பதை, இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் விளக்குகிறேன். சீடர்களின் இடையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் வரக்கூடாது என்று இயேசு சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தாலும், தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி ஒருவரை தயார்படுத்தினார். இதற்கான தகுதிகள் பேதுருவிற்கு இருந்தது என்பதையும் நான் விளக்குகிறேன்.

ஏன் பரலோகத்தின் திறவுகோலை பேதுருவிடம் இயேசு கொடுத்தார்? அதற்கு பேதுரு தகுதியானவரா? பேதுரு தன் கடமையை சரியாக செய்தாரா? என்பதை அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.

முடிவுரை:

கடைசியாக நான் பிஜே அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது:

1. பேதுரு "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்" நடக்கக்கூடாது என்று அறியாமையினால் சொன்னதினால், தான் இயேசு "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார்.

2. இப்படிச் சொன்னது "இயேசு" இவ்வுலகில் வந்த நோக்கத்தை பேதுரு எதிர்த்ததால் தானே தவிர‌ , மற்றபடி, பேதுருவை இயேசு "சாத்தான்" என்று முத்திரை குத்திவிட்டதாக அர்த்தமில்லை.

3. அதே இயேசு பல முறை பேதுருவை புகழ்ந்துள்ளார், "நீ ஒரு திடமான‌ கல்" என்று சொல்லியுள்ளார், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லியுள்ளார். இயேசுவை "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசு பேதுருவைப் பார்த்து, "நீ பாக்கியவான்" என்றார், உனக்கு இதை பிதா வெளிப்படுத்தினார் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:13 18). இவைகள் எல்லாம், உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே. ஒரு முறை கடிந்துக்கொண்டதை மிகவும் இமயமலை போல பெரிது படுத்தி காட்டுகிறீர்கள்?

4. இயேசுவின் வார்த்தைகளின் படி, சிலுவை மரணத்தை, உயிர்த்தெழுதலை மறுக்கும் இஸ்லாமைப்பார்த்து "எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்று ஈயேசு சொல்கிறார் என்பதை அறியுங்கள்.

5. முதலாவது இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு புத்தகங்கள் எழுதுங்கள். முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் இருந்தார்கள் என்று தெரிந்துக்கொள்ளாமல் நான் ஒரு எண்ணிக்கை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம் ஏனென்றால், இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் எண்ணிக்கை வேறு, ஹதீஸ்கள், முகமதுவின் வாழ்க்கை வரலாறு சொல்லும் எண்ணிக்கை வேறு. ஆனால், இயேசுவின் சீடர்கள் எத்தனை பேர் என்பது உங்களைப்போன்ற மக்கள் மத்தியிலே மார்கங்களைப் பற்றி பேசி, பதில்கள் சொல்பவர்கள் சரியாக தெரிந்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பதை அறியுங்கள்.

6. பரலோகத்தின் சாவியை பேதுருவின் கையில் இயேசு கொடுத்தேன் என்றுச் சொன்னது மிகச்சரியான கூற்று என்பதையும், இயேசுவிற்கு பின்பு, கிறிஸ்தவ சபை தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு என்பதையும் என் இரண்டாம் பதிலில் சொல்கிறேன்.

மற்றபடி, நீங்கள் முன்வைத்த விவரங்கள் வேதவசனங்களை புரிந்துக்கொள்ளாமல், மேலோட்டமாக படித்து, ஏதோ ஒரு குறை சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதை என் பதில்களை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள். உங்கள் புத்தகமாகிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு நான் எழுதும் மறுப்பைப் பற்றி விமர்சிக்க விரும்புகிறவர்களை, பதில் சொல்ல விரும்புகிறவர்களை நான் வரவேற்கிறேன்.

"பேதுரு ஒரு பேரொளி", "பேதுரு ஒரு சிறந்த தலைவர்" என்ற விவரங்களோடு அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை , தேவனின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:

1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் – 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் – 2

6. Answering – PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இயேசு இறைமகனா?.பி.ஜே, இஸ்லாம், குரான், TNTJ